September 30, 2011

Udaium megam unathu



இது யாழ் இந்து மாணவர்களின் ஒரு புதிய படைப்பு. "உடையும் மேகம் உனது".
(2009 old boys)

September 18, 2011

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்

சென்னை: நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் சங்கிலியன் சிலை கையில் இருந்த வாள் அகற்றம்

யாழ்ப்பாணம்: இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலையில் இருந்த வீரவாளை அகற்றியுள்ளது இலங்கை அரசு.இலங்கையை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னரான சங்கிலியனின் சிலை யாழ்ப்பாணத்தில் நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. வீரவாளை உயர்த்தி பிடித்தப்படி சங்கிலியன் குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்டப் போருக்கு பிறகு தமிழர்கள் வாழும் வடக்கு, மற்றும் கிழக்கு பகுதிகள் சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதையடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள மன்னர் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து தற்போது அந்த சிலையை அதே இடத்தில் வைத்துள்ளனர்.இதை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

ஆனால், சங்கிலியனின் சிலையின் வலது கையில் விண்ணை நோக்கி உயர்த்தி பிடித்து இருந்த வீரவாள் இல்லை. அதை இலங்கை அரசு அகற்றியுள்ளது.மேலும் அவரது வலது கை மடக்கி வைக்கப்பட்ட நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. சங்கிலிய மன்னன் சரணடைவது போன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை. இதற்கு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கிலியன் கையில் இருந்த வீரவாளைக் கண்டு பயந்த இலங்கை ராணுவம், சிங்கள அரசியல்வாதிகள், மந்திரிகள், யாழ்ப்பாண நகரபிதா, வட மாகாண அரசாங்க அதிபர், அமைச்சர் டக்ளஸ், அந்த வீரவாளை எடுத்து விட்டு புதிய சங்கிலியன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

விடுதலை என்பது தமிழரின் ரத்தத்தோடு சேர்ந்தது, அந்த வாளை எடுத்து விட்டால், தமிழர்கள் சுதந்திரம், விடுதலைப் பாதையை மறந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.

கடந்த தேர்தலில் பல இன்னலுக்கு இடையேயும் திருக்கோவிலில் இருந்து வல்வெட்டித்துறை வரை தமிழன் என்று கூறிக்கொண்டு தமிழ் இனத்தின் அழிவுக்கு துணையாக இருந்த டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்களை தூக்கி எறிந்து விட்டு, அவர்களுடன் இருந்த சிங்கள அரசியல்வாதிகளையும் தூக்கி எறிந்து விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எமது மக்கள் வாக்களித்து இருந்தார்கள். அந்த வாக்களிப்பு தமிழ் மக்கள் இன்றும் தமிழரின் வாழ்வு தமிழ் மக்களின் கையில் என்று வலியுறுத்தி கூறியிருக்கிறார்கள்.

விடுதலைதான் தமிழ் மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ ஒரே முடிவு என்று சிந்தித்து அவர்கள் வாழ்கிறார்கள். இன்று சங்கிலியன் வாளை அப்புறப்படுத்தலாம், பண்டாரவன்னியன் நினைவுச் சின்னத்தை அப்புறப்படுத்தலாம், எமது மாவீரர் உறங்கும் நினைவாலயங்கள் மேல் ராணுவ முகாம் அமைக்கலாம்,

சிங்கள ராணுவ அகங்கார வெற்றிச்சின்னங்களைக் கட்டலாம், புத்த விகாரைகள் கட்டலாம், ஆனால் அந்த கல்லறைகள் ஒவ்வொரு தாயின் வீரக்கண்ணீரும், மாவீரரின் வீர ரத்தமும் சிந்திய மண், தமிழ் மக்கள் தமது விடுதலைக்காக காலம் காலமாக விடுதலைக்கு செய்த தியாகம், அவர்கள் உறங்கு நிலையில் இருந்து எழுந்து வரும்போது தமிழீழம் பிறக்கும். சங்கிலியன் சிலையில் வாளை அகற்றியது சிங்களவன் தமிழ் மேல் இருக்கும் பயத்தைதான் காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

September 3, 2011

இராணுவத்தினரால் தொடர்ந்து தாக்கப்படும் யாழ் மக்கள்:கிறீஸ் மனிதர் விவகாரம்


கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய அச்ச உணர்வு யாழ் மக்களிடையே பெரிதும் அதிகரித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நாவந்துறையில் கிறீஸ் மர்ம மனிதன் நடமாட்டம் தொடர்பில் இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது பல தமிழ் மக்கள் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொக்குவில், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதுடன், இது தொடர்பில் பொதுமக்கள் தமது அச்சநிலைமையை இராணுவத்தினரிடம் எதிர்ப்பாக காட்ட முனையும் போது , இராணுவத்தினரால் தாக்கப்பட்டுவரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.வாரக்கணக்கில் மர்ம நபர்கள் பற்றீய பிரச்சினை தொடர்கிறது. இதுவரை பொலிஸார் இதனை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.  மர்ம மனிதன் வந்து ஒரு சில நிமிடங்களில் அங்கு இராணுவத்தினரும் வந்துவிடுகின்றனர்.

மர்ம மனிதன் வரும் போது திட்டமிட்டது போன்று மின்சாரமும் தடைப்பட்ட்டு விடுகிறது. மர்ம மனிதன் தொடர்பிலான அச்சத்தினால், இரவு முழுவதும் தூக்கமில்லாமல் இருந்தால், மறுநாள் வேலைக்கு செல்ல முடியாது.மறுநாள் சாப்பாட்டு செலவிற்கே திண்டாடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் துரத்தி செல்லும் மர்ம மனிதனை சேர்ந்து துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் அவர்களை ஒப்படைக்க இராணுவத்தினர் முயல்வதில்லை. மாறாக துரத்தி வருகின்ற மக்கள் மீது தங்கள் காடைத்தனத்தை காட்டுகிறார்கள்என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கொக்குவில் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.  இராணுவத்தினரால் தாக்கப்பட்டு காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டவர்களையும் பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.

இச்சந்திப்பின் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்

ஒரு மாதத்திற்கு முன்பாக மலையகத்தில் கிறிஸ் மனிதன் பயங்கரம், பின்பு அம்பாறை, மட்டக்களப்பு, எனப் பரவி இப்போது வடமாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.கிறிஸ் மனிதனின் பயங்கரம் நிகழ்ந்தேறிய எல்லாப் பகுதிகளிலுமே மக்கள் ஒன்று திரண்டு கிறிஸ் மனிதர்கள் சிலரைப் பிடித்துள்ளனர், பொலிஸாரிடமும், இராணுவத்திடமும், கையளித்துமுள்ளனர்.

ஆனால் இவைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்றும் வெறும் வதந்திகள் என்றும் பொலிஸாரும் இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்.பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமுகத்தைச் சார்ந்தவர்களாகவுள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளியாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.ஆனால் இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாக தாக்கப்படுகின்றனர்.  இவ்விவகாரம் நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இவ்வாறான பரவலான தாக்குதலை மேற்கொள்ளக் கூடிய பலம், யாரிடம் இருக்கின்றது என்பதையும் இங்கு நிலைகொண்டிருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள்,எனவே ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது என்றார்.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிகேரா கருத்து தெரிவிக்கையில்,

கொக்குவிலில் பேருந்தை தாக்கிய ஆறு சந்தேக நபர்களையே பொலிஸார் கைது செய்தனர். வேறு யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை. கிராமத்தில் நடந்த விழாவொன்றில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டு கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் தான் பேருந்தை தாக்கியுள்ளனர்.மற்றும் படி கிறீஸ் மனிதன் என்று ஒருவரும் இல்லை. முறைப்பாடு கிடைத்ததும் நாங்கள் சென்று விசாரிப்போம். மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் யாரையும் அடையாளம் காட்டுகிறார்கள் இல்லை.

தனிநபர் பாதுகாப்பு விடயத்தில், மரணம் அல்லது காயம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் மட்டும் தற்பாதுகாப்பிற்காக தாக்க முடியும். ஓடுகிறவர்களை துரத்தி சென்று தாக்க முடியாது என தெரிவித்தார்.உடனடியாக அங்கிருந்த பத்திரிகை நிருபர் ஒருவர்,  ஓடுகிறவர்களை அடிக்க முடியாது என்றால் ஓடுகிறவர்கள் யார்? எங்கிருந்து ஓடுகிறார்கள் என கேட்டார். மேலும் கிறீஸ் மனிதன் என்ற பரபரப்பு தொடங்கியதும் அந்த இடத்திற்கு இராணுவத்தினர் எப்படி இவ்வளவு வேகமாக வருகிறார்கள்? எதற்காக வருகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சரியாக பதில் சொல்ல முடியாது போலிஸ் அதிகாரி திணறியுள்ளார். வதந்திகளை பரப்புகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கூறி முடித்துக்கொண்டார்.

மூவரது மரணதண்டனையை மீள்பரிசீலனை செய்யக் கோரும் தீர்மானம் - சபாநாயகர் அனுமதி மறுப்பு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரணதண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவர பாண்டிச்சேரி சட்டமன்ற சபாநாயகர் அனுமதி மறுத்துள்ளார். இதையடுத்து அதிமுக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். 

பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது, மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனையை குடியரசுத் தலைவர் மீளாய்வு செய்ய வேண்டும் என்று கோரும் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக, திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த விவகாரம் குறித்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்து விட்டார் சபாநாயகர் சபாபதி. 

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் இருவரும் முதலில் வெளிநடப்புச் செய்ய அவர்கள் பின்னால் அதிமுக உறுப்பினர்கள் ஐவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன், ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அத்துடன் போர்க்குற்றங்கள் புரிந்த சிறிலங்கா அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடைவிதிக்கக் கோரும் தீர்மானத்தையும் கொண்டு வரவிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழ், முஸ்லீம்கள் சிறுபான்மையினர் அல்ல,,,,ராஜபக்ச

நாட்டில் சிறுபான்மையினத்தவர் என்ற எண்ணம் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட கூடாது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஆளும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் 60 வது ஆண்டு மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ராஜபக்ச, தமிழ், முஸ்லீம் மக்கள், சிறுபான்மை இனத்தவர்கள் அல்ல. இலங்கை என்பது ஒரு தனித்துவம் வாய்ந்த நாடு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எமது ஆளும் கட்சி ஒரு போதும் அவர்களை ஏமாற்றியதல்ல.

1950 களில், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தமை, 1972 இல் சுதந்திர அரசியலைப்பு மூலம் நாட்டுக்கு பிரிட்டனிடமிருந்து முழுமையான சுதந்திரத்தை பெற்று கொடுத்தமை, 2009 இல் பயங்கரவாதத்தை தோற்கடித்தமை என்பன சிறிலங்கா சுதந்திர கட்சியினால் செய்து முடிக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.
நாட்டில் பிரிவினை வாதத்துக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். நாட்டில் ஒரு துண்டை பிரித்து தருவதாக கூறி பிரிவினையாளர்களுக்கு கப்பம் செலுத்தும் விதத்தில் மக்களை நாம் ஏமாற்றிட முடியாது என அவர் தெரிவித்தார்.

என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..?

ராஜீவ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக இருப்பவர்களின் மரண தண்டனையை குறைப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என சோனியா குடும்பத்தினர் சொல்லிவிட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கையில், சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு தூக்குதண்டனை நிறைவேற்ற நாள் குறித்திருப்பதும், அதற்கான இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டிருக்கிறது.


இருபது வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனையாகவே இது பொது அரங்கில் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் இந்தத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும், எனப் போராடுபவர்களில் பலரும் தெரிவிக்கும் முக்கிய காரணம், உண்மை குற்றவாளிகளே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மூவருக்குமான மரணதண்டனை நீதிக்குப் புறம்பானது. இந்தியச் சட்டவரைபுகள் பாமர மக்களுக்கு பாதுகாப்பாக இல்லாததையே இவ்வாறான தண்டனைகள் உறுதி செய்கின்றன என்பதாகும். அதனாற்தான் அவர்கள் சொல்கின்றார்கள், அப்பாவிகளுக்கு தூக்கு என்று வழக்கு முடிந்து போகாமல் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகத்தின் நேர்மையான தன்மை வெளிப்படும் என்று.
இந்த வழக்கில் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்படும் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் தொடர்பில், அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியே அவை தொடர்பில் உண்மைகளைக் கண்டுபிடிக்காமல் நிரபாரதிகளை தூக்கில் போட்டு உண்மை குற்றவாளிகளை விட்டுவிட முயல்வது ஏன்..?ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்பது இந்திய சட்டத்தளத்தில் எப்போதும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கு புதிரும், மர்மங்களும் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முனைப்புப் பெறுவது ஏன்..? என்ற கேள்வி மீளவும் எழுந்திருக்கும் நிலையில், இவ்வழக்கில் எழுப்பபட்டுள்ள சில சந்தேகங்கள், இங்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குப்பற்றி அறிந்திருக்க முடியாத இன்றைய இளைய சமூகம் இதுபற்றித் தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
நாட்டில் புற்றுநோயாக புரையோடி தேசத்தை சிறுக சிறுக அழிக்கும் ஊழலை உடனடியாக கட்டுப்படுத்தும் மந்திரக் கோல் எதுவும் தன்னிடமில்லை என்றும், எதை எடுத்தாலும் "எனக்கு தெரியாது" என்று சொல்லும் பொருளாதார புத்திசாலி மன்மோகனை பிரதமராக கொண்ட தேசம் இது.மன்மோகனை தலைவராக கொண்ட இந்திய நாடாளுமன்றம் சட்டமியற்றக்கூடிய புனிதமான இடம் என்றும், அன்னாஹசாரே போன்றவர்கள் எல்லாம் தெருவில் உட்கார்ந்து கொண்டு சட்டத்தை இயற்ற சொல்லி வற்புறுத்த முடியாது என்றும் ப.சிதம்பரம், கபில்சிபல், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டவர்கள் சொல்கிறார்கள்.
சட்டம் இயற்றப்படும் இடம் புனிதமானது என்றால் அதை இயற்றுபவர்கள் புனிதர்களாகத் தானே இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகள் வரும் போது தான் தெரிகிறது இந்த புனிதமான இடத்திற்கு வெற்றி பெற்று வருபவர்களின் இலட்சனம். ப.சிதம்பரம் போன்றவர்கள் சொல்வது போல புனிதமான இடத்திற்குத் வருபவர்களின் எல்லாப் பாவங்களும் கழுவப்பட்டு, புனிதர்களாகவும் மாற்றப்படுவார்கள். அவர்களே சட்டம் இயற்றுபவர்களாகவும் இருந்து விடுவார்கள்.
சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்குதண்டனைனை நிறைவேற்ற சொல்லி உத்தரவிட்டிருப்பது தவறு என்றார் முன்னாள் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டி.ஜி.பி கேபிஎஸ்.கில். "ராஜீவ் கொலையான போது கூட்டத்தில் அவரது பக்கத்தில் இருந்த ஒரு காங்கிரஸ்காரன் கூட சாகலையே...அது எப்படியப்பா", என்று சராசரி தமிழன் சந்தேகம் எழுப்புகிறான்.
" இராஜீவை கொலை செய்ய அன்னிய நாட்டு சக்திகள் தான் முயன்றன; இராஜுவ் கொலைக்கான திட்டத்தை அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து ஆயுத தரகரான சந்திராசுவாமி தான் வகுத்தார்; இன்னும் சொல்லப்போனால் ராஜீவ் காந்தி கொலைக்கும், இந்திராகாந்தி கொலைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த இரு கொலைகளிலும் தொடர்பு உடையவர்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரி கூறியதாக அவுட்லுக் இதழில் செய்தி வெளியானதே! அந்த சந்திரசுவாமியை எல்லாம் ஏன் இன்னும் விசாரிக்கவில்லை? என்று படித்த இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள்.
"ராஜீவ் கொலை வழக்கில் தேடப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சிவராசன், காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் எல்லாம் கிடைத்ததே..இதை இந்திய புலனாய்வு துறை ஏன் மறைத்தது? இப்படி அடுக்கடுக்காக சந்தேகங்களும் கேள்விகளும் தொக்கி நிற்கின்ற நிலையில் அவசர அவசரமாக தற்போது இவர்களை தூக்குமரத்திற்கு அனுப்ப காங்கிரஸ் அரசாங்கம் ஏன் முயல்கிறது?
இந்த வழக்கில் தொடக்கம் முதலே இந்திய அரசியலில் பல குழப்பங்களும் சித்து விளையாட்டுக்களும் அரங்கேறின என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது என்பதை காணமுடியும். 29.5.1991 திகதியில் தி இந்து நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தி அதன் முதல் கோணலை வெளியிட்டது. ஆசிய அளவில் வலுவான நாடாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய நாட்டு தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை குறித்த வழக்கை ஆராய அமைக்கப்பட்ட விசாரனைக்கமிஷன் பற்றி அது சொன்னது. " ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது சந்திரசேகர் தலைமையிலான மத்தியில் ஆட்சியில் இருந்தது. இந்த படுகொலை பற்றி விசாரிக்க நீதிபதி வர்மா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சுபத்காந்த் சகாய்

அறிவித்தார். அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் சுப்பிரமணியன் சாமி. இருவருமே வர்மா கமிஷன் என்பது, இந்த படுகொலை நேர்ந்தததில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை மட்டுமே விசாரிக்கும் என்று அறிவித்தனர். ஆனால் கொலைச்சதி பற்றி விசாரிக்காது என்று சொன்னார்கள். கொலைச்சதியையும் இந்த கமிஷன் விசாரிக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
சந்திரசேகர் ஆட்சிக்கு பிறகு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. தங்கள் கட்சியின் தலையாய குடும்பத்தை சேர்ந்த ராஜுவ் கொலை வழக்கு வேகம் பிடிக்கும். உண்மையான குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த பிறகும் கூட ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனுக்கு அலுவலகம் கூட ஒதுக்கப்படவில்லை. செயலாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் கூட நியமிக்கப்படவில்லை. விசாரணை வரம்பையும் அறிவிக்கவில்லை. இந்த அவலத்தை பற்றி நீதிபதி வர்மாவே குமுறியதாக சொல்லப்பட்டது. "இந்தியாவின் ஜனநாயக முதிர்ச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. இந்த பிரச்சினை இந்தியாவின் கவுரவம் சம்பந்தப்பட்டது; உலகமக்கள் இந்த வழக்கை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்" என்றார் நீதிபதி வர்மா.

இதே காலகட்டத்தில், அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவான் " இந்திராகாந்தி கொலையில் கொலையாளிகளுக்கு பின்னால் இருந்த சக்திகளை அடையாளம் காண அரசு தவறிவிட்டது. ஆனால் ராஜீவ் கொலை விசாரணையில் அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது. இதில் விடுதலைப்புலிகளின் பங்கு உண்டு என்று சொல்லப்பட்டாலும், கொலைக்குப் பின்னால் உள்ள மற்ற சக்திகளை கண்டுபிடிப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. உலகில் கேள்வி கேட்பாரின்றி ஆதிக்க சக்திகளாக விளங்கும் சில நாடுகளுக்கு ராஜீவ் காந்தியின் ஆட்சி வருவது என்பது எரிச்சலாக இருந்தது" என்றார். அதாவது, ராஜீவ் கொலையில் சர்வதேச சதிகள் இருந்ததை அன்றே எஸ்.பி.சவான் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அப்படியென்றால் இந்த சர்வதேச சதிகள் இந்த வழக்கில் ஏன் அடையாளம் காணப்படவில்லை? இது பற்றி எதுவும் கண்டுபிடிக்கப்படாமலே தற்போது இந்திரா காந்தி கொலை வழக்கை குழப்பி முடித்தது போல் ராஜீவ் கொலை வழக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து விட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே இருக்கும் கறுப்பு ஆடுகள் சிலவற்றின் துணை இல்லாமல் நிச்சயமாக ராஜீவ் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி கொலை வழக்கு ஒரு உதாரணம். 1977 ஆம் ஆண்டு இந்திரகாந்தி பதவியிழந்த போது அவரிடம் ஒரு சாதாரண உதவியாளராக இருந்தார் ஆர்.கே.தவான். இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரிய யஷ்பால் கபூர் என்பவரின் தயவில் அவர் இந்திராவிடம் வேலைக்கு சேர்ந்தார். 1980 ல் இந்திரகாந்தி பிரதமரான போது ஆர்.கே.தவான் அவரின் தனி உதவியளராக நியமிக்கப்பட்டார். இந்திரகாந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார்.

பிறகு இந்திராகாந்தி கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தக்கர் விசாரணைக்கமிஷன் தனது அறிக்கையில், " இந்திரா கொலையில் அவரது இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பெற்று அரண்மனை சூழ்ச்சி போன்ற பெரிய சதிகள் இந்த கொலையில் அடங்கியுள்ளன. குறிப்பாக இந்த கொலை தொடர்பாக இந்திராவின் தனி உதவியாளராக இருந்த ஆர்.கே.தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் தவானின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திராகாந்தி உயிரோடு இருந்தவரை காங்கிரசு கட்சிக்கும், ஆர்.கே.தவானுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. ஆனால் இந்திரா கொலைக்கு பின்னால் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகராக ஆர்.கே.தவான் மாறினார். இது எப்படி? 1998 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் டெல்லி தொகுதி ஒன்றில் போட்டியிட ஆர்.கே. தவான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். என்ன ஒரு காங்கிரஸ் கைங்கரியம்? இந்திராவின் கொலையில் தொடர்புடையவர் என்று தக்கர் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவருககு காங்கிரசில் பதவி அளிக்கப்பட்டது. இது ஏன் என்ற மர்மம் இதுவரை யாருக்கும் புரியவில்லை.

இது போல், ராஜீவ் திருபெரும்புதூர் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சி.பி.ஐ புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் அப்போது தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், ராஜீவ் திருப்பெரும்புதூர் வந்த போது, அவருடன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி யான மரகதம் சந்திரசேகரும், அவரது மகன் லலித் சந்திரசேகரும் இருந்தார்கள். கொலை நடந்த இடத்தில் லலித் சந்திர சேகரை (சிங்கள பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்)காணவில்லையே என்று பின்னர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது " அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்க போய்விட்டேன்" என்று சொன்னார் அவர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவர் போகவில்லை. ஒரு காங்கிரஸ்காரர் தான் மரகதம் சந்திரசேகரை ஆஸ்பத்திரியில் சேர்த்தார் என்பது பிறகு தெரிந்தது.

லலித் சந்திரசேகரின் இந்த தவறான வாக்குமூலத்தை மேலும் விசாரிக்கவில்லை. இதே போல் லலித் சந்திரசேகரை முதலில் பார்க்கும் போது எந்த காயமும் படாமல் நன்றாக தான் இருந்தார். பிறகு நான்குநாள் கழித்து பார்த்த போது காலில் பெரிய கட்டுடன் இருந்தார். இந்த நேரத்தில் "மல்லிகை" அலுவலகம் முன்பு (சி.பி.ஐ அலுவலகம்) சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனை பிடித்து விசாரித்தோம். அவனை விசாரித்ததில், "அமெரிக்காவில் இருந்து ஒரு அம்மா மல்லிகை அலுவலக முகவரியை கேட்டார்கள். அதனால் முகவரியை குறிக்க வந்தேன்" என்றான்.

அமெரிக்காவில் இருந்து முகவரி கேட்ட அந்த பெண்மணியின் கணவர் பெயர் "டேனியல் பீட்டர். இவர் லலித் சந்திரசேகருடன் திருப்பெரும்புதூர் வந்து அங்கு நடந்த விபத்தில் பலியானவர். பிறகு பிடிபட்டவனின் வீட்டை சோதனை செய்தோம். அங்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் " இந்த லலித்தால் தான் இந்த நிலைமை. இந்த கார்த்திகேயனிடம் சொல்லணும்" என்று அமெரிக்காவிலிருந்த பெண்மணி குறிப்பிட்டிருக்கிறார். இதற்காகத் தான் எங்கள் அலுவலக முகவரியையும் கேட்டிருக்கிறார்.எங்கள் ஐ.ஜி ஸ்ரீகுமாரும், ரகோத்தமன் என்பவரும் அப்போது அமெரிக்காவில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு இந்த கடிதங்களை அனுப்பி விசாரித்து விடலாம் என்று பேச்சு எழுந்தது.அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரகோத்தமனிடம் கேட்டதற்கு " எனக்கு இந்த கடிதம் பற்றி ஒன்றுமே தெரியாது" என்றார்.

பிடிபட்ட கடிதங்கள் அடங்கிய கோப்பு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு தான் என்னிடம் திரும்பி வந்தது. ஆனால் அந்த கோப்பில், அமெரிக்காவிலிருந்த அந்த பெண்மணி எழுதியதாக சொல்லப்படும் முக்கியமான கடிதம் இல்லை. லலித் சந்திரசேகர், டேனியல் பீட்டரின் மனைவி, மரகதம் சந்திரசேகம் ஆகியோர் விவகாரம் முறையாக விசாரிக்கப்படவில்லை" இப்படி சி.பி.ஐ இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சொல்லியிருந்தார்.

ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சந்திராசாமி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் கொடி கட்டிப்பறந்த இந்த சந்திரசாமி யார்? நரசிம்மராவின் 25 ஆண்டுகால நெருங்கிய நண்பர். இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கும் வழிகாட்டி. சர்வதேச ஆயுதவியாபாரியான கசோக்கிக்கு மிக நெருக்கமான நண்பர். ராஜீவ் இந்திய பிரதமரான உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறியவர். சந்திரசாமிக்கு ராஜீவ் கொலைவழக்கில் தொடர்பு உண்டு என்று அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ. அரசியல்வாதி ரமேஷ் தலால் என்பவர் கூறினார். அவர் " சந்திராசாமிக்கு ராஜீவ் கொலையில் முக்கிய பங்கு உண்டு.

சந்திராசாமி என்னை வீட்டுக்கு அழைத்து "ராஜீவ் கொலையில் தனக்குள்ள தொடர்பை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்." என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்."ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் கொலை செய்யப்படுவார். காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும். தேர்தலுக்கு பிறகும் சந்திரசேகர் அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று சந்திராசாமி என்னிடம் கூறினார். அப்போதே சந்திராசாமியின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தேன்" என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.


ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சந்திராசாமி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் கொடி கட்டிப்பறந்த இந்த சந்திரசாமி யார்? நரசிம்மராவின் 25 ஆண்டுகால நெருங்கிய நண்பர். இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கும் வழிகாட்டி.

சர்வதேச ஆயுதவியாபாரியான கசோக்கிக்கு மிக நெருக்கமான நண்பர். ராஜீவ் இந்திய பிரதமரான உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறியவர். சந்திரசாமிக்கு ராஜீவ் கொலைவழக்கில் தொடர்பு உண்டு என்று அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ. அரசியல்வாதி ரமேஷ் தலால் என்பவர் கூறினார். அவர் " சந்திராசாமிக்கு ராஜீவ் கொலையில் முக்கிய பங்கு உண்டு.சந்திராசாமி என்னை வீட்டுக்கு அழைத்து "ராஜீவ் கொலையில் தனக்குள்ள தொடர்பை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்." என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

"ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் கொலை செய்யப்படுவார். காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும். தேர்தலுக்கு பிறகும் சந்திரசேகர் அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று சந்திராசாமி என்னிடம் கூறினார். அப்போதே சந்திராசாமியின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தேன்" என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

ஆனால் அவ்வாறான சந்திராசாமி இப்போதும் சுதந்திரமாக வெளியில்!இது போல் இந்தியாவின் டீபார்ட்டி புகழ் சுப்பிரமணியன் சுவாமி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுப்பிரமணிய சாமிக்கும், சந்திராசாமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவருமே சர்வதேச ஆயுதவியாபாரி கசோகியின் நண்பர்கள். சர்வதேச உளவு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

சுப்பிரமணிய சாமியுடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியதை இந்திய உளவு நிறுவனம் இடைமறித்து கேட்டு, அதை கோப்புகளில் பதிவுசெய்தது. சந்திராசாமியின் நெருங்கிய நண்பனரான நரசிம்மராவ் ஆட்சியில் "மாயமாய்" மறைந்து போன ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட கோப்புகளில் இந்த கோப்பும் காணாமல் போனது.

ராஜீவ் 1991 மே, 21 ம் திகதி கொலையான தகவல் வெளியுலகத்திற்கு அன்றைய இரவு 10.40 மணிக்கு தான் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலைக்கு பின், அப்போது சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த வேலுச்சாமி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறியது அனைவரையும் திடுக்கிட வைத்தது." 21 ஆம் திகதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணிய சாமி வீட்டுக்கு தொலைபேசியில் பேசினேன். அப்போது ராஜீக் கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 23 ம் திகதி அவரது திருச்சி பயணத்தை உறுதி செய்யவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிகசர்வ சாதாரணமாக, "ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தியை சொல்லத்தானே போன் செய்தீர்கள்?" என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளிஉலகத்திற்கு தெரியாத தகவல் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?

இது போல் தான் முன்னாள் தேர்தல் ஆணையாளர் டி.என்.சேஷனும். "ராஜீவ் படுகொலை செய்யப்படுவார் என்பது தனக்கு முன்கூட்டியே தெரியும்" என்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆனால் இதை ராஜீவ் காந்தியின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்து கணித்ததாக சொல்லியிருந்தார். காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கும், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கும் போய் விசேட பூசை நடத்தினால், ராஜீவ் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று இவர் யோசனையும் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் ராஜீவ் கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இவர் கீழ்க்கண்ட உத்தரவை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியிருந்தார்.

அதில் " முன்னாள், இன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எல்லா மரியாதைகளையும், பாதுகாப்ப¬யும் தரலாம். ஆனால் அவர்கள் அரசாங்க தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவர்கள் ஒரு மாநிலத்திற்கு தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவோ அல்லது அரசியல் கட்சிக்காரர்களாகவோ சென்றால், பாதுகாப்பு உள்பட அரசு செய்ய வேண்டிய வசதிகளை செய்து தரக்கூடாது" இது தான் சேஷன் பிறப்பித்த உத்தரவாகும். சேஷனில் விபரீதமான இந்த உத்தரவைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விட்டதாக 'இந்தியா டுடே' சொன்னது.

இதற்கடுத்து இந்த கொலைவழக்கில் சந்தேகம் எழுப்பிய மற்றொரு சம்பவம் ' கோடியக்கரை சண்முகம் ' தற்கொலை(!) ராஜீவ் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கோடியக்கரை சண்முகம் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. இவர் மூலம் பல தடயங்கள் கிடைக்கக்கூடும் என்று புலனாய்வு துறை அறிவித்தது. 18.7.1991 அன்று கைது செய்யப்பட்ட சண்முகத்தை வேதாரண்யம் காவல் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் புலனாய்வுக்குழுவினர். ஆனால் 20.7.91 அன்று அந்த மாளிகையில் உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கினார்.

அய்யோ, என் புருஷனை கொன்னுட்டாங்களே சி.பி.ஐ புலனாய்வு குழு என்று சண்முகத்தின் மனைவி கதறினார். ஆனால் இது தற்கொலை என்றது சி.பி.ஐ. தமிழக அரசின் முன்னாள் காவல் துறை இயக்குநராக இருந்த மோகன் தாஸ், ஒரு டிவிக்கு அளித்த பேட்டியில் " சிறப்பு புலனாய்வு குழுவின் பாதுகாப்பில் இருந்த கோட்டியக்கரை சண்முகத்தின் சாவு தற்கொலையல்ல. அது திட்டமிட்ட கொலை. விசாரணைக்கு அழைத்து செல்லும் போது வெள்ளை வேட்டிக் கட்டிக் கொண்டிருந்த சண்முகம் தூக்கில் தொங்கிய போது கைலி கட்டிக் கொண்டிருந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்.

ராஜீவ் கொலை வழக்கு என்பது சர்வதேச சட்டங்களின் கீழ் நடத்தப்படாத முறையற்ற விசாரணை என்று சர்வதேச மனித உரிமைக்குழு ஏற்கனவே குறிப்பிட்டது. அதற்கேற்ற படியே இந்த விசாரணையிலும் எழுந்த சந்தேகங்களுக்கு பதில்கள் இல்லை.பலர் விசாரிக்கப்படவே இல்லை.

(ஆதாரம்: ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்)

உதாரணமாக கீழ்வரும் கேள்விகளுக்கு விடையில்லை.

1. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சிவராசனின் தாயாரும், காங்கிரஸ்காரரான மரகதம் சந்திரசேகரனின் மகனான லலித்சந்திரசேகரின் மனைவியான வினோதியினியின் தந்தையும் சிங்களர்கள். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். இவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாசவுக்கு ராஜீவ் மீது கோபம் இருந்தது என்பது அண்மையிலும் செய்திகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறிக்கையில், இந்த கோணத்தில் ஏன் வினோதினி குறித்த பூர்விகம் விசாரிக்கப்படவில்லை?

2. ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூர் வருவதை வாழப்பாடி ஏற்கவில்லை. மூப்பனாரும் விரும்பவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூருக்கு கண்டிப்பாக வர ஏன் வற்புறுத்தினார்?

3. ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து ராணுவத்திடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். சாதாரண பேரறிவாளனும், முருகனும், சாந்தனும் அதை தயாரிக்க முடியாது. அப்படியானால், இந்த வெடிமருந்துகளை கடத்தி வந்தவர்கள் யார்?

4. ராஜீவ் கொலையானது செய்தி அறிவிக்கப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.30 மணிக்கெல்லாம் இது சுப்பிரமணியசுவாமிக்கு தெரிந்தது எப்படி? என்ற திருச்சி வேலுச்சாமியின் கேள்விக்கு சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டாமா..?

5. கோடியக்கரை சண்முகத்தை போல் சிவராசன், சுபா தற்கொலைகளும். இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் மயக்க வாயுவை செலுத்தி உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் புலனாய்வு துறை இவர்களை ஏன் உயிருடன் பிடிக்க முயலவில்லை?

6. பொதுவாகவே ராஜீவ் காந்தி கூட்டத்தின் போது தனியார் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று தயார் நிலையில் இருக்கும். ஆனால் திருப்பெரும்புதூர் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் முன்பணம் செலுத்ததாத காரணத்தால், ஆம்புலன்ஸ் வரவில்லை என்று செய்திதாள்களில் எழுதப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஆம்புலன்ஸ் அழைக்க கூட பணம் இல்லையா?

பொதுவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வழங்குவது தான் நீதிமன்றத்தின் பொதுவான நியதி. ஆனால் இந்த மரணதண்டனை தீர்ப்பில் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு வெடிகுண்டு வெடிக்க பேட்டரி செல் வாங்கி கொடுத்தார் என்பதே. அதற்கும் கூட போலியாக பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எந்த பெட்டிக்கடையில் பில் போட்டு பேட்டரி தருகிறார்கள்?

மேலே கூறப்பட்ட பலத்த சந்தேகங்களை எல்லாம் விட்டு விட்டு கடைசியில் எதுவும் இயலாமல் மூன்று அப்பாவி தமிழர்கள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இருபத்தியொரு வருடங்களின் பின் இப்போது இத் தண்டனையில் காட்டப்படும் தீவிரத்துக்குக் காரணமாக மற்றுமொரு சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணைகளில் பங்கு கொண்ட சிபிஐ அதிகாரி மோகன்ராஜ். இணையத்தளத் தொலைக்காட்சிச் செவ்வியில்,அந்தச் சந்தேகத்துக்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிடுகின்றார்.விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான குமரன் பத்மநாதன் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் கைதியாக இருக்கின்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் பல விடயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்று.

விடுதலைப்புலிகள் தான் ராஜீவ் கொலைக்குக் காரணம் என அண்மையில் அவர் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்த வகையிலும், சர்வதேசத் தொடர்பாளர் என்ற வகையிலும், அவரிடம் இது தொடர்பான விசாரணைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?.

விக்கிப்பீடியா தகவற் தளத்தில், குமரன் பத்மநாதன் பெயர் இந்த வழக்கோடு தொடர்புட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த குறிப்புக்களுக்கு மூல இணைப்பாக வழங்கப்பட்டுள்ள சிபிஐயின் குறிப்புக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏன் மறைக்கப்படுகின்றன..?

இந்தியாவின் நேசநாடான இலங்கையின் பாதுகாப்பில், உள்ள அவரை இந்த விசாரணைக்கு உட்படுத்த இந்திய அரசு ஏன் தயங்குகின்றது..?

முன்னாள் சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் " மீள் விசாரணைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டால், காங்கிரஸ்காரர் பலர் இதில் குற்றவாளியாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கும் கருத்துக்களை, இந்தத் தவிர்ப்புக்கள் நியாயப்படுத்துகின்றன போல் அல்லவா உள்ளது..?

இதே குற்றச்சாட்டை, இப்போது மோகன்ராஜ் மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன்னால், இதே தொனியில் திருச்சி வேலுச்சாமி சொல்லியுள்ளார். காலஞ்சென்ற வக்கீல் கருப்பன் சொல்லியுள்ளார். இவ்வாறு பல தடவைகள் பல தரப்புக்களிலும் வலியுறுத்தப்படும் இவ்வழக்கின் விசாரணையை, நீதி மன்ற உத்தரவு, தீர்ப்பு என்ற கோசங்களை முன் வைத்து மறுதலிப்பது ஏன்..?

இந்தியாவை காங்கிரஸ் கட்சி தான் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. நேரு குடும்பத்தில் பிறந்தவர்களே அந்த காங்கிரஸ் கட்சியை பிடியில் வைத்திருக்கிறார்கள். நேருவின் மகளான இந்திராவின் மகனான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் இத்தனை குழப்பங்கள், மாயமான கோப்புகள்...இத்யாதிகள். இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கிலேயே இந்த நிலை என்றால்..?

காங்கிரசுக்கு இப்போதும் ஒரு கனவு இருக்கிறது. அது எதிர்கால பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்பது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மத்தை கூட ஒழுங்காக கண்டுபிடிக்க முடியாத, இந்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற ராகுல் காந்தி தயார் என்றால், ராஜீவின் ஆத்மா காங்கிரசையும் , வாரிசுகளையும் மன்னிக்குமா..? என கோடானு கோடி இந்தியப் பிரஜைகளில் பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பலரும் ஏதுமில்லா ஏழைகள். அரசியற் சூதுகள் தெரியாத அப்பாவிகள்.
இவர்களது குரல்கள் ஏறுமா நீதிமன்றம் ..? ஏற்குமா.. இந்திய நீதித் துறை..? என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..?

September 2, 2011

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன்

கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். மற்றவர் தப்பி ஓடிவிட்டார். இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.

சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத்துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத் தொடங்கியது. இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்ட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர்.

அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்தபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை. பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன.

இச்ச்சம்பவம் பற்றி கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஒரு சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் சிங்கள இளைஞன் எனத்தெரியவந்தது. உடனடியாக கைது செய்த குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை நாளை யாழ் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.




ராஜீவ் காந்தியைத் தாக்கியவர் முதல், யாழ்ப்பாணத்தைக் கலக்கும் மர்ம மனிதன் வரை மனநோயாளிகளா?

யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதர்கள் புளுத்து விட்டார்கள். இதனால் அவர்களில் ஒரு சிலரை பொதுமக்களால் பிடிக்க முடிந்துள்ளது. நேற்று முன்தினம் கோண்டாவில் பகுதியிலும் நேற்று சுழிபுரம் பகுதியிலும் இரண்டு மர்ம மனிதர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்கள் இருவரும் தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்தவர்கள் என்பதும் இங்கு நோக்குதற்குரியது. தென்பகுதி மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார்கள் என்பது உண்மையாயினும் தென் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள கிராமங்களில் தனித்துத் திரிவதை சாதாரணமான காரணங்கள் மூலம் நியாயப்படுத்த முடியாது.

இந்நிலையில் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட தென்பகுதியைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் பொறுப்பேற்றிருக்கின்ற நிலையில், அவர்கள் இருவரும் மனநோயாளிகள் என்று கூறப்படுகின்றது. அப்படியானால் தென்பகுதியைச் சேர்ந்த மனநோயாளிகள் பலர் யாழ்ப்பாணத்திற்குள் நுழைகின்றார்கள் என்று கருதவேண்டியுள்ளது. இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ஒருமுறை இலங்கைக்கு வருகை தந்தபோது அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய படையினரில் ஒருவர் தான் வைத்திருந்த துவக்கால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார்.

எனினும் ராஜீவ் காந்தியைத் தாக்கிய படைத் தரப்பைச் சேர்ந்த நபர் மனநோயாளி என்று கூறப்பட்டது. பின்னாளில் அந்த மனநோயாளியும் இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தார். ஆக! ராஜீவ் காந்தியைத் தாக்கியவர் முதல், தற்போது யாழ்ப்பாணத்தைக் கலக்கும் மர்ம மனிதன் வரை மனநோயாளிகள் எனில், நிலைமை மோசமானது என்றே கூறவேண்டும். எனவே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆனையிறவு பகுதியில் மனநோயாளர் வைத்திய சாலை ஒன்றை அமைத்து தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றவர்களை சோதனையிட வேண்டும்.

குறித்த நபர் மனநோயாளி அல்ல. அவர் மன ஆரோக்கியம் உள்ளவர் என மருத்துவ நிபுணர்கள் உறுதிச் சான்றிதழ் வழங்கிய பின்பே அவர்களை யாழ்.குடாநாட்டுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தால் எப்படியிருக்கும்? மக்களின் உறக்கத்தைக் கலைத்து அவர்களை பயப்பீதிக்கு ஆளாக்கும் மனநோய் கொண்ட மர்ம மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியேதும் உண்டா?




September 1, 2011

கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார் விஜய்

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது, இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா?

அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.




2012ல் உலகம் அழியுமா? சூரிய சுனாமி பூமியை தாக்குமா?

2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணைபடுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்.இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து மக்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம். இதனை சார்ந்து உருவாக்கப்படும் ஹாலிவுட் சினிமாக்கள் எப்போதுமே பிரபலமடைய தவறுவதில்லை. அந்த வகையில் The Happening என்ற திரைப்படம் பெரும் பிரபலம் பெற்ற ஒன்றாகும். இது ஓர் அறிவியல் நிறைந்த திரைப்படம். விபரிக்க முடியாத ஓர் இயற்கை அழிவில் இருந்து தப்பு முயற்சிக்கும் ஒரு குழுவைச் சார்ந்து எடுக்கப்பட்டது இத்திரைப்படம். நைட் ஷியாமளன் என்பர் இத்திரைப்படத்தினை இயங்கி இருந்தார்.அவரின் எதிர்வுகூறல் இதுவாகவே இருந்தது. அதாவது நச்சு வாயு நிரம்பி நரம்பு மண்டலம் ஒன்று உலகை சுற்றிக் கொண்டு இருந்தது இதில் மாட்டிக் கொள்பவர்கள் தற்கொலை செய்யது கொள்ள தூண்டும் விசத் தண்மை கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிறிய பகுதியில் உருவாகிய நச்சு நரப்பு மண்டலம் வட அமெரிக்கா முழுவதும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இதில் அறிவியல் ஆசிரியரான கதாநாயகன், கதாநாயகி மற்றும் பிறர் எவ்வாறு தப்பி செல்கி்ன்றனர் என நகருகின்றது திரைப்படம். 

2008ம் ஆண்டில் அவர் தெரிவித்தமை தற்போது சாத்தியப்பட வாய்பு உள்ளதோ என்று எண்ண தோண்றுகின்து. அதாவது இன்று உலகில் பல பாகங்களில் ஏற்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலைகள் அவ்வாறு உள்ளது.எடுத்துக்காட்ட உலகெங்கும் வன்முறைகளும், அழிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஏன் எவ்வாறு இடம்பெறுகின்றது என அண்மைய ஆய்வும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.நாம் வாழும் இப் பூமியை சுற்றி காந்த சக்தி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி சூரியனின்மேற்பரப்பில் புயல் ஒன்றின் காரணமாக இந்த காந்த விசை பாதிப்புக்கு உள்ளனது. சூரியனில் இருந்து வெளிப்பட்ட துகள்கள் பூமியின் காந்தி விசையினை தாக்கி அதன் மூலம் வலுவான காந்த புயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த காந்த புயலின் தாக்குதலானது மனித மனங்களை தாங்கி எதிர்மறையான சிந்தனையை தூண்டும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் தற்கொலைகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அச்சப்படுகிறது.தற்போது சூரியனின் மேற்பரப்பில் அதிகளவான காந்த புயல்கள் உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 2012 இல் இதன் போக்கு அதி உச்சத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக உலகின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்படும், இலத்திரனியல் சாதனங்கள் செயலிழக்கும், வானில் பறக்கும் விமானங்கள் பாதிப்புக்குள்ளாகும் அந்த சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி பூமி முழுவதையும் அழிக்க கூடிய அபாயம் உள்ளது. 

 சூரிய புயல் என்றால் என்ன?
உருண்டையான சூரியன் ஹரையன் வாயு மற்றும் கீலியம் வாயுவினால் உருவாக்கப்பட்டுள்ளதாகும். பொதுவாக நாம் வாழும் பூமியின் மேற்பரப்பில் காந்த சக்திகள் சுற்றிக் காணப்படுகின்றது. இது வேறு கிரங்களில் இருந்து வரும் தாக்கங்களை தடுத்து நிறுத்தும் பணியை மேற் கொள்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் சூரியனில் ஏற்படும் அனர்த்தம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் பூமியை வந்து சேருகின்றது. அதாவது சூரியனில் ஏற்படும் புயலின் அலைகள் மிகப் பெரிதாக பூமியை வந்தடைகின்றது. இதன் போது பூமியை சுற்றி காந்த விசைகளில் உடைவுகள் ஏற்பட்டு பூமியை தாக்குகின்றது.எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கால கட்டத்தில் உலகம் அழித்து விட போகின்றது என்ற தோற்றப்பாடு வலுப் பெறுவதும் பின்னர் அடங்குவதும் வழமையே. ஆனால் 2012 மிக அண்மித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில் உலகம் அழித்து விடும் என்ற பீதியும் வலுப்பெற்றுள்ளதை மறுப்பதற்கும் இல்லை.






August 31, 2011

வைரத்தாலான கோள்கள் கண்டுபடிப்பு

வைரங்களாலான கோள்கள் உள்ளதென வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது முன்பொருகாலத்தில் பால்வழியில் பாரிய நட்சத்திரமாக இருந்திருக்கலாம் என்றும் தற்போது அது மிகவும் பெறுமதிமிக்க கோளாக மாறியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

40,000 மைல்கள் விட்டத்தைக் கொண்டு 5 மடங்கு பூமியின் விட்டத்தினைக் கொண்டும் அமைந்துள்ளது இந்தப் பளிங்காலான காபன் கோள்.சர்வதேச ஆய்வுக் குழுவினர் முதலில் வழமைக்குமாறான Pulsar வகை நட்சத்திரத்தினைத் தான் கண்டனர்.பின்னர் அதனைத் தொடர்ந்து ஒரு தொலைநோக்கியினூடாக ஆய்வு செய்ததில் அதனைச் சுற்றி சிறியதொரு கோள் ஈர்ப்பு விசையுடன் சுற்றி வந்ததைக் கண்டனர்.Pulsar வகை நட்சத்திரங்கள் 10 மைல் விட்டமே கொண்டிருப்பவையாகும். சிறியதொரு நகரத்தின் அளவிலேயே காணப்படும் இக்கோள்கள் வானொலி அலையை வெளிவிடுபவையாகும்.அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளது இந்த ஆய்வில் உண்மையான நட்சத்திரத்தின் எச்சங்களாக உள்ள இந்த வைரக்கோள்  Pulsar இனைச் 2 மணி 10 நிமிடங்களில் சுற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.நிமிடத்திற்கு 10,000 தடவைகள் சுற்றும் இக்கோள் சூரியனைவிடவும் 1.4 மடங்கு பெரியதாகவும் காணப்படுகின்றது.



வெடித்துச் சிதறியது ரஷ்ய விண்கலம்


விண்வெளிக்கு ஏவப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய விண்வெளி நிலைய வழங்கல் கலம் சைபிரியாவிற்குள் வெடித்துச் சிதறியது.இது அமெரிக்க விண்வெளிக்கல நிகழ்ச்சிநிரலினைக் கைவிடும் நிலைக்கு நாசாவையும் ஏனைய விண்வெளி நிறுவனங்களையும் தூண்டியுள்ளது.கசகிஸ்தானிலுள்ள Baikonur விண்வெளி நிலையத்தில் இpருந்து வழங்கல்களைக் கொண்டு செல்லத் தயாரானது இந்த சோயுஸ் றொக்கற். இந்த றொக்கெற் நாசாவின் இறுதி விண்வெளிக் கலத்தினை ஏவிய 1 மாதத்திற்குப் பின்னர் தோல்வியைத் தழுவியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போதுமான வழங்கல்கள் இருந்தபோதும், அடுத்த தொகுதிக் குழுவினரை அனுப்பும் பயணத்தை இவ்விபத்துத் தாமதமாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது வழமையாக விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் றொக்கெற்றினை ஒத்தவகையினதே.அத்துடன் 6 விண்வெளி நிலையங்களில் மூன்றின் ஆட்கள் இன்னும் 2 வாரங்களில் வரவுள்ள நிலையில் அவர்களது தங்கலை இது இன்னும் நீடிக்கவும் செய்யலாம்.றொக்கெற் நன்றாகச் செயற்பட்டு அதன் மூன்றாம் கட்டத்தின் போது றொக்கற் இயந்திரத்தைச் செயற்படுத்த விடாமல் நிறுத்தி விட்டதுதான் விபத்திற்குக் காரணமாயிருந்தது.
ஜுலையில் மேற்கொள்ளப்பட்ட அட்லான்ரிஸ் விண்கலத்தின் பணியினால் விண்வெளி நிலையத்திற்கு ஒரு வருடத்திற்கான வழங்கல்கள் விட்டுவரப்பட்டுள்ளன.எனினும் விண்கலங்கள் இல்லாமல் வழங்கல்களைக் களஞ்சியப்படுத்த நாசா தற்போது ரஷ்யா, ஐரோப்பா மற்றும் யப்பானிடமும் மற்றும் தனியார் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடமும் தான் உதவி கோரியுள்ளது.

ரஷ்யா 3 தொன் வழங்கல்களை விபத்துக்குள்ளான விண்கலத்தில் அனுப்பியிருந்தது. அத்துடன் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மனிதர்களைக் கொண்டு செல்லக் கூடியவாறு வரும்வரை ரஷ்யாவே விண்வெளி வீரர்களை அனுப்பும், மீளக் கொண்டுவரும் பணிகளைச் செய்யும்.நாசாவும் அதன் சர்வதேச நண்பர்களும் 2020ஆம் வரை விண்வெளி நிலையத்தைப் பயன்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வேற்றுக்கிரகத்தவர் மீண்டும் தரையிறங்கிவிட்டார்களோ?

காலத்திற்குக் காலம் வேற்றுக்கிரகங்கள்பற்றியும் அங்கு வசிப்பவர்கள்பற்றியும் கதைகள் வந்தவண்ணந்தான் உள்ளன. அப்படியான வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே வாழ்கின்றார்களா?
சைபீரியாவைச் சேர்ந்த Irkutsk பிராந்தியத்திலுள்ள சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இந்தக் காட்சியினைப் பதிந்துள்ளனர். இதில் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும் 5 வேற்றுக்கிரகவாசிகள் பனிக்கூடாக நடந்துசெல்வதையும் பார்க்கக்கூடியவாறுள்ளது.ஓர் உருவம் விண்வெளிக் கலத்தின் எதிரேயும் ஏனைய 4 உருவங்களும் அக்கலத்திற்கு நேர் எதிராகவும் காணப்படுகின்றன. இவை காணப்படும் 2 நாட்களுக்கு முன்னர் அதிசய வெளிச்சங்கள் சைபீரிய வான்பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இவை பதியப்பட்டு 2 நாட்களின் பின்னரும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் இராணுவத்தினர் ஏதாவது பயிற்சிகளைச் செய்கின்றார்களோவென மக்கள் விசாரித்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்றும் தெரியவந்தது.அத்துடன் இப்பதிவுகளைப் பதிந்தவர்கள் தாம் கண்டுபிடித்ததாகக் கூறிய வேற்றுக்கிரகவாசியின் சிதைந்த உடலமும் YouTube இல் ஏற்றப்பட்டிருந்தது.ஆனால், ரஷய உள்துறை அமைச்சினால் இந்த உடல் பரிசோதிக்கப்பட்டபோது அது வெறும் பாண்துண்டுகளாலும் கோழித்தோலினாலும் மூடப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இவர்கள் இருவரும் ஏதாவது குற்றம் செய்துள்ளார்களா என்றும் அதிகாரிகள் விசாரணைசெய்து வருகின்றார்கள்.


August 29, 2011

நாவாந்துறைத் தாக்குதலுக்கு பாவமன்னிப்பா? நல்லூரானுக்கு ஹெலியில் பூப்போட்ட ஹத்துருசிங்க

சில தினங்களுக்கு முன்னர் நாவாந்துறையில் தனது இராணுவ காடையர் குழுவைக் கொண்டு பொதுமக்கள் மீது காட்டுத் தாக்குதல் நடத்தி மீண்டும் ஒருமுறை சிங்கள வல்லாதிக்கத்துக்கு தமிழர்கள் என்றும் அடிமைகளே என்று நிரூபித்தார் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க.
யாழ்ப்பாணத்தில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடாத்தி வரும் மஹிந்த ஹத்துருசிங்க பாவமன்னிப்பு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த தமிழ்மக்களை இராணுவக் காடையர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் சேர்க்காமல் தடை விதித்து சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துப்பாக்கிய நிலைமை யாவரும் அறிந்ததே.





 அதற்கு பிராயச் சித்தம் தேடும் முகமாக ஒருநாள் முன்னதாகவே அவசரப்பட்டு நல்லூர் கந்தனின் கந்தனின் தேர்த் திருவிழாவில் தனது அதே இராணுவ காடையர் குழுவைக் கொண்டு ஹெலி கொப்டரில் பூமாரி பொழிந்தார்.

 
ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் ஹெலியில் பூமாரி பொழிந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் உண்மையில் கடுப்பாகி தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.வழமையாக தீர்த்த உற்சவம் அன்று தீர்த்தக் கேணியில் பூமாரி பொழிவது தான் இந்த காடையர்களின் வழக்கம்.நாவாந்துறையில் தாக்கப்பட்டவர்களின் காயம் கூட ஆறாத நிலையில் பூமாரி பொழிந்து மக்களை என்ன ஏமாற்றுகிறார்களா? என்று கோபத்துடன் பேசிக் கொண்டனர்.முன்னர் குண்டுமழை பொழிந்து எத்தனை தமிழ் குடும்பங்களையே வேரோடு கருவறுத்தவர்கள் இப்பவும் அதே ஹெலியில் பூமழை பொழிவது மீளவும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற அவஸ்தையை ஏற்படுத்துகிறது.புலிகள் இல்லை என்ற நினைப்பில் நிராயுதபாணிகளாக உள்ள தமிழ் மக்களுடன் சண்டைபோட்டு உங்களின் வீர சாகசங்களை நிரூபிக்காதீர்கள்.இன்னமும் தங்களது இராணுவ வல்லாதிக்க அடக்கு முறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்கள் எத்தனை ஹெலியில் வந்து பூப் போட்டாலும் பிரயோசனம் எதுவும் ஏற்படப் போவதில்லை.முதலில் தமிழர்களின் சொந்த மண்ணில் அவர்களை மரியாதையோடு நடத்துங்கள் அல்லது அந்த மண்ணை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்.. அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்.


சதாம் வாழ்ந்த மாளிகை

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் குசெய்ன் வாழ்ந்த ஆடம்பர மாளிகைகளின் இன்றைய நிலையை காட்டுகின்ற படங்கள்.




















நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்

சிலரது முட்டாள்தனாமான செயற்பாடுகளுக்கு இந்த வீடியோவும் ஒரு சிறந்த உதாரணம். ரயில் தண்டவாளத்தின் கீழ் படுக்கிறான் ஒரு இளைஞன்.. மேலாக ரயில் கட கட வென 10 விநாடிகள் பயணிக்கிறது… அந்த 10 விநாடிகளும் இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.. ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான்.  காமாரா முன் இந்த முட்டாள் தனமான விளையாட்டை மேற்கொள்ளுகிறான் இந்த இளைஞன். இதைப்பார்க்கும் போது பந்தயத்துக்காக சக நண்பர்கள் முன்னிலையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து இவ்வாறு முயற்சிக்க வேண்டாம்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சியில் இளம்பெண் தீக்குளிப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சியில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் 27 வயதான செங்கொடி. இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. 


21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.









August 28, 2011

போராட்டம் வெற்றி: உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

புதுதில்லி, ஆக.28, (டிஎன்எஸ்) தில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அன்னா ஹசாரே 288 மணிநேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று (ஆக.28) தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர் .அன்னா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் நேற்று அறிவித்ததையடுத்து அவர் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஐந்து வயதுடைய சிறுமிகள் இருவர் ஹசாரேவுக்கு இளநீரும், தேனும் வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததனர்.உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, பொதுமக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ஊடகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16-ந்தேதி உண்ணாவிரதம்  தொடங்கினார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டு அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு அலை உருவானதையடுத்து மத்திய அரசு அன்னாஹசாரே  குழுவினருடன் பேச்சு நடத்தியது.  முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

அடுத்தக்கட்டமாக மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அரசுக்கும், அன்னாஹசாரே குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு  பேச்சுவார்த்தை   நடத்தினார். அப்போது அன்னாஹசாரே 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அன்னா ஹசாரே கோரிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட  குழுவினருடனும் மத்திய அமைச்சர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதற்கான உறுதி மொழி கடிதம் அன்னா ஹசாரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரும் அன்னாஹசாரேயின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து  அன்னாஹசாரே நேற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கோரிக்கைகளை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று அன்னாஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் 12-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதனால் அவரது  உடல் நிலை மோசமடைந்தது. இது மத்திய அரசுக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திலும், மேல்- சபையிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச்சு நடத்தினார். பாராளுமன்றத்தில் அன்னா ஹசாரேயின் 3 கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட சம்மதம்  தெரிவித்தார். நேற்று மாலை இந்த தகவல் பரவியதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்கு பின் நேற்று இரவு 8 மணிக்கு ஹசாரேயின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்கும் தீர்மானத்தை நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கொண்டு வந்தார்.

ஆளும் கட்சியான காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தீர்மானத்தை   ஏற்றுக்கொண்டன. எம்.பி.க்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. டெல்லி மேல்- சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் ஆகியோர் அன்னா ஹசாரேயை நேற்று இரவு சந்தித்து பாராளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தின் நகலையும், பிரதமரின் கடிதத்தையும் அவரிடம் கொடுத்தனர்.

அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-

உங்கள்   அனைவரது அனுமதியுடன்  எனது உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது ஜன்லோக்பாலுக்கு கிடைத்த பாதி வெற்றிதான். முழு வெற்றியை கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். எனது 3 கோரிக்கைகளை ஏற்று தீர்மானத்தை நிறை வேற்றிய  எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

இதை கேட்டதும்  ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் விண்ணை முட்டும் வண்ணம் கரகோஷமும், வாழ்த்து கோஷமும் எழுப்பி னார்கள். தேசிய கொடியை அசைத்தவாறு மைதானம் முழுவதும் கொண்டாடி னார்கள். இதேபோல் நாடு முழு வதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியதும் உடனடியாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட அவர் விரும்பவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள  திட்டமிட்டார். இதையொட்டி இன்று காலை முதலே ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மேடையில் அன்னா ஹசாரே காந்தி குல்லா அணிந்து இருந்தார்.

அவரை சுற்றிலும் காந்திகுல்லா அணிந்த சிறுவர்- சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். முதலில் அரவிந்த் கெக்ரிவால் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அன்னா ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மத்திய அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு தில்லியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 வயது தலித் சிறுமி சிம்ரன், முஸ்லிம் சிறுமி இக்ரா ஆகியோர் அன்னாஹசாரேக்கு தேன் கலந்த இளநீர் கொடுத்தனர்.

அதை வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அப்போது அன்னா ஹசாரே வாழ்க என்று கோஷமிட்டனர். தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது. அதை அன்னாஹசாரே கைதட்டி ரசித்தார். ஆதரவாளர்கள் மத்தியில் அன்னாஹசாரே நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதந்தா மெடிசிட்டி   மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. அவரது உடல் உறுப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பரிசோதனை செய்யப்பட்டது. 12 நாளில் அவரது உடல்  எடை 7 கிலோ குறைந்து 64 கிலோவாக இருக்கிறது.

சில நாட்கள் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்புவார் என்று அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அன்னாஹசாரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான சித்தி கிராமத்திலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். மும்பை, பெங்களூர், ஆமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.