June 28, 2011

பொற்காலமா? போட்டுத்தாக்கிய கறுப்பு கவி

இந்த ஆட்சியில் சினிமா உலகில் தேனும் பாலும் பாய்ந்தோடுது என்று ஒருபுறம் உடுக்கடிக்க, அரசவை கவிஞரோ, அதெல்லாம் கிடையாது, கருவாச்சி பூமி மாதி‌ரி நிலைமை வறண்டு கிடக்கு என்று உறுமியடித்திருக்கிறார்.
இது நடந்தது ஒரு பாடல் வெளியீட்டு விழாவில். இது சினிமாவுக்கு கஷ்ட காலம். பொன் விழா எல்லாம் எந்தப் படமும் காண முடியாது. படமெடுக்கிறதைவிட அதை வெளியிடுறது ரொம்ப கஷ்டமா இருக்கு. பத்து நாள் படத்தை தியேட்டரைவிட்டு தூக்காம இருக்கிறதே பெ‌ரிய விஷயம் என்றெல்லாம் குமுறி தீர்த்தார் கறுப்பு கவி.
அவருக்கு பிடித்தமானவர் ஆட்சி செய்யும் போது இப்படி தைரியமாக கஷ்ட காலம் என உறுமியது, பலருக்கும் உற்சாகத்தை தந்துள்ளது.

மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்யராஜ்!

மலேசியாவில் நிறுவப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் எம்ஜிஆரின் உருவச்சிலையை நடிகர் சத்யராஜ் வரும் ஜூன் 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.
ஐந்தரை அடி உயர வெண்கலச் சிலை இது. கும்பகோணத்தில் உருவாக்கப்பட்டது. சரவணன் ஸ்தபதி, கணேஷ் ஸ்தபதி ஆகியோர் இந்தச் சிலையை உருவாக்கியுள்ளனர்.

மலேசியாவின் பேரக் மாநிலம் உலுசபெத்தாங் என்ற இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுகிறது. மலேசிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரும் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கோ சூ கூன் தலைமை வகிக்கிறார்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்படக் கண்காட்சியும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய அரிய பொருள்கள் இடம்பெறுகின்றன.

மலேசியாவில் கோலாலம்பூரில் இந்தியாவைச் சேர்ந்த விவேகானந்தருக்கு மட்டுமே சிலை இருக்கிறது. இவரையடுத்து, இந்தியத் தலைவர் ஒருவருக்கு மலேசியாவில் சிலை நிறுவப்படும் பெருமை எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துள்ளது.
ஜூன் 25 ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தச் சிலை திறப்பு விழாவில் திரைப்பட நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன், எம்.ஜி.ஆர். நற்பணி அமைப்பின் தலைவர் தாமோதரன் ஆகியோருடன் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் பங்கேற்கிறார்கள்.

விஜய்யை முந்திய சூர்யா

ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.
விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. மாற்றான் படத்துக்கு சூர்யாவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் பதினைந்து கோடிகளாம். படம் அறுபது கோடிக்கு மேல் விலை போகும் என்று இப்போதே கணித்திருக்கிறார்கள்.
விஜய்யின் வேலாயுதமும், நண்பனும் வெற்றி பெற்றால் சூர்யாவை விஜய் எளிதாக முந்திவிடுவார் என்பதும் முக்கியமானது.

June 27, 2011

அபாயகரமான விலங்குகள்

அழிந்து போன அபாயகரமான இந்த விலங்குகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு இல்லை. ஆனால், அந்த அபாயகரமான விலங்குகள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. பொருஷ்ரசிட்ஸ்



இதற்கு டெர்ரர் பேர்ட்ஸ் (பயங்கர பறவைகள்) என்ற பெயரும் உண்டு. இதன் உயரம் 10 அடி, எடை 500 கிலோகிராம்கள் வரை இருக்கும். ஒரே தடவையில் ஒரு நாயை விழுங்கிவிடக் கூடியது. இந்த உயிரினங்களுடன் தொடர்புடைய விலங்கினமாக தற்போது கருதப்படுவது 80 சென்டிமீட்டர் உயரமுள்ள செரிமாஸ். இவை வட அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மற்றும் ப்ளோரிடாப் பகுதிகளில் காணப்படுகின்றன.


2. மெகலோடன்


மெகலோடன் 40 அடி நீளமுள்ள பழங்காலத்தில் வாழ்ந்த சுறாமீன். சில விஞ்ஞானிகள் இதன் நீளம் 50 அடி முதல் 100 அடி வரை இருந்திருக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர். மிகப்பெரிய வெள்ளை சுறாமீனைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமானது. புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட மெகலோடனின் பற்கள் மற்றும் முதுகெலும்பைக் கொண்டு தான் இதன் நீளம் கணக்கிடப்பட்டுள்ளது.


இதனுடைய மிகப்பெரிய பற்களின் நீளம் ஒரு மனிதனின் கையினுடைய நீளத்திற்கு இணையானது. இந்த சுறாமீனுடைய வேறு எந்த உடற்பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகிக்க மட்டுமே எம்மால் முடிகிறது. மிகப்பெரிய வெள்ளை சுறா மீனின் பற்களைப் போன்று ஆனால் அதைவிட சற்று பெரிதாகவும் தடிப்பாகவும் உள்ள மெகலோடன் சுறா மீன் இருப்பதை வைத்துத்தான் இதன் வடிவம் வெள்ளை சுறாமீன் போன்று இருக்கக்கூடும் என ஊகிக்கப்பட்டது.

3. ஸ்மிலோடன்



அழிந்துபோன மெகய்ரோடோன்ரின் இனத்தைச் சேர்ந்த இந்த ஸ்மிலோடோன் சப்ரே-பற்கள் பூனை என்றும் அழைக்கப்பட்டது. இவை 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் உயிரினம். இந்த ஸ்மிலோடன் காட்டு எருமை, மான், அமெரிக்க ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் தேவாங்குகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளக் கூடியவை. இவை அந்தக் காலத்து மனிதர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நெச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் இவற்றின் முழு எலும்புக்கூடும் வைக்கப்பட்டுள்ளது.


4. எஸ்டெமெனோசக்கஸ்


பெர்மியன் காலத்தில் வாழ்ந்த ஒம்னிவோரஸ் தெரப்சைட் இனத்தைச் சேர்ந்த இந்த எஸ்டெமெனோசக்கஸ் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகக் கணக்கிடப்படுகிறது. அதிக உடல் வெப்பத்தை பராமரிப்பதற்காக பாலூட்டிகளைப் போன்றே இவையும் வெதுவெதுப்பான இரத்தத்தைக் கொண்டிருக்கலாம்.


5. ப்டெரோசார்


டைனோசர் காலத்தில் வாழ்ந்த இந்த பறக்கும் ஊர்வன வகை ப்டெரோசார்கள் ஒரு சில அங்குலங்கள் முதல் 40 அடி வரையும் உயரமுள்ளதாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இவை கூனல் முதுகெலும்புடைய சிறிய உடலைக் கொண்டவை. இவற்றிற்கு புத்திக்கூர்மையும் நல்ல கண் பார்வையும் உண்டு.


சிலவற்றில் உடலில் முடிகள் காணப்பட்டன. சில குறைந்த உடல் எடை கொண்டவை. இவற்றில் தலையில் உச்சிக்கொண்டை போன்ற அமைப்பு காணப்பட்டதுடன் இவை பறக்கின்றபோது சுக்கான் போன்று செயற்பட்டுள்ளன. அல்லது இவை பால்நிலை குணாதிசயமாகக்கூட இருந்திருக்கலாம். இதன் உடலில் வளைத்துக்கொள்ளக்கூடிய மெல்லிய ஆனால் தடிப்பான தோல் சவ்வு காணப்பட்டது.

6. புருசாவ்ராஸ்


8 மில்லின் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய அழிந்துபோன இனங்களில் புருசாவ்ராசும் ஒன்று. பிரேசில், கொலம்பியா, பெருவியன் அமேசோனியா மற்றும் வட வெனிசுலா போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுப் படிமங்களைக் கொண்டு தான் இந்த விலங்கினம் வாழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 11 முதல் 13 மீட்டர்கள் நீளமுடைய இவை முதலை வகை இனமாகக் கருதப்படுகிறது. பெரிய பாலூட்டியினங்களை உணவாகக் கொண்ட இவை ஆமைகள், சிறிய வகை முதலைகள், மீன்கள் போன்றவற்றையும் உண்டிருக்கின்றன.


7. டெயோடன


25-18 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டெயோடன் 3.6 மீட்டர் நீளமும் 2.1 மீட்டர் (தோள்பட்டை வரை) உயரமும் 1 மீட்டர் நீண்ட மண்டையோடும் 1000 கிலோகிராம் கொண்ட மிகப்பெரிய விலங்கினம். பெரிய தாடையுடன் தந்தமும் இதற்கு உண்டு. இது ஒரு மிகப்பெரிய விலங்குண்ணி. அகதா ஸ்பிரிங்ஸ் குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய கழுத்து கட்டையாகவும் தடிமனாகவும் இருந்துள்ளதுடன் முதுகெலும்பு மிக நீண்டு காணப்பட்டுள்ளது.

8. ஜிகன்டோபிதகஸ்



கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்தாகக் கருதப்படும் இந்த வாலில்லாக் குரங்கினம் 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக்கக்கூடும் என கருதுகின்றனர். இதனுடைய இடுப்பெலும்போ கால் எலும்போ கண்டுபிடிக்கப்படவில்லை. இவை தற்போதைய காலத்தில் உள்ள கொரில்லாக் குரங்குகள் மற்றும் சிம்பன்சி போன்று இருந்திருக்கக்கூடும். இதனுடைய தாடை எலும்புகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் U வடிவத்தில் காணப்படுகின்றன.

எளிமையாக பிளாஷ் இமேஜ் கேலரி உருவாக்கும் மென்பொருள் CU3OX

இணையதளங்களில் ஒளிப்படங்களை அட்டவணை போல காட்சியளிப்பதை Image Gallery என்று சொல்வார்கள். இதனை Flash மென்பொருள் கொண்டு உருவாக்குவார்கள். இதில் செய்யப்படும் படங்கள் அழகாகவும் பலவித 3டி எபெக்ட்களுடனும் உருவாக்குவதால் இணையதளங்களில் பிளாஷ் கேலரி கண்ணைக் கவரும் வகைகளில் இருக்கும். நாம் பிளாஷ் மென்பொருளை அறியாமல் இருப்பின் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எப்படி கேலரி உருவாக்குவது? இந்த சிக்கல்களைப் போக்கும் எளிமையான மென்பொருள் தான் CU3OX ஆகும்.

இந்த மென்பொருள் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களைக் கொண்டு எளிமையான முறையில் விரைவாக ஒளிப்பட கேலரிகளை உருவாக்கலாம். இதனை வைத்து நமது இணையதளங்களில் படங்களை பேனர் விளம்பரமாகவும் ஸ்லைட் ஷோ போன்று பொதிந்து வைத்துக் காட்டலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இணையத் தொழில்நுட்பங்களான FLASH, HTML,CSS, JavaScript போன்றவற்றின் அறிவு இல்லாமலேயே 3D வகையிலான கேலரிகளை உருவாக்குவது தான். இந்த மென்பொருளில் படங்கள் நகர்வது, எபெக்டுகள், ஒவ்வொரு படத்திற்கான நேரம் போன்றவற்றை எளிதாக அமைக்கலாம். இதில் நமக்கு வேண்டிய ஒளிப்படங்களை இந்த மென்பொருளுக்கு இழுத்து விட்டுக் கொள்ள முடியும். கேலரி உருவாக்கி முடிந்தவுடன் இணையதளத்தில் இதற்கான கோடிங்கை காப்பி செய்து பதிவேற்றிக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை நிறுவியதும் இதில் Add பட்டனைக் கொடுத்து நமக்கு வேண்டிய புகைப்படங்களை சேர்க்கவேண்டும். பின்னர் படங்களுக்கு எபெக்ட் கொடுக்க Effects என்பதில் தேர்வு செய்யவும். பின்னர் ஒவ்வொரு படத்திற்கான தலைப்பும் குறிப்பும் கொடுக்க Headline மற்றும் Description என்பதில் தட்டச்சிட்டு Publish என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.


இதன் பின்னர் கேலரிக்கான அமைப்புகள் தோன்றும். இதில் General என்ற டேபில் கேலரிக்கான தலைப்பு, வாட்டர்மார்க், லோகோ, எதாவது ஆடியோ இணைக்க போன்ற அமைப்புகளைக் கொடுக்கலாம்.அடுத்த Images டேபில் ஒவ்வொரு படங்களின் அளவு, சுழற்றும் எபெக்ட் மற்றும் ஒவ்வொரு படம் வருவதற்கான இடைவெளி நேரங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
கடைசியில் Publish டேபில் கேலரி எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். இல்லை இணையதளத்திற்கு பதிவேற்ற வேண்டும் எனில் FTP சர்வர் முகவரியை அளித்து விட்டு Publish பட்டனைக் கிளிக் செய்தால் போதும்.


சில விநாடிகளில் இமேஜ் கேலரி உருவாக்கப்படும். எந்தவொரு இணையத் தொழில்நுட்பமும் அறியாமல் எளிதாக ஃபிளாஷ் இமேஜ் கேலரிகளை உருவாக்க இந்த மென்பொருள் உதவியாக இருக்கும்.
 
தரவிறக்கச்சுட்டி: http://www.cu3ox.com/

அவன் இவன்

சாதாரண சூழலில் காணக்கிடைக்காத அசாதாரண விளிம்புநிலை மனிதர்களைப் படமாக்கும் பாலா இந்த முறையும் கிட்டத்தட்ட அதே மாதிரியான மனிதர்களோடு களம் இறங்கியிருக்கிறார். திருட்டு தொழிலையே குலதொழிலா கொண்டிருக்கிற ஒரு கிராமம். அந்த கிராமத்துல எல்லாத்தையும் இழந்து நிக்குற ஒரு ஜமீனுக்கு காலம் முழுக்க விசுவாசமா இருக்குற மனிதர்களை பற்றிய படம்.
படத்தோட ஓப்பனிங் விஷாலோட பரபரன்னு இருக்குற நடனத்தை பார்த்தவுடனே சீட்ல இருந்து கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைக்கிற இயக்குநர், அடுத்த பத்தாவது நிமிஷத்துல கொட்டாவி விட வைக்கிறாரு...
கதாபாத்திரங்களை வித்தியாசமா காட்டணும், ரசிகனுக்கு அது என்ன? எதுக்கு?ன்னு கேள்வி கேட்க வைக்கிற அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணனும்னு நெனைக்கிறதெல்லாம் சரிதான். ஆனா அதுக்கான காரணங்கள் சரியானதா இருக்கணும். இந்தப் படத்துல அப்படி சரியான காரணங்கள் எதுவுமே இல்லை.
விஷால்-ஆர்யாவோட அப்பா அனந்த் வைத்தியநாதன். அவருக்கு அம்பிகா-பிரபா ரமேஷ்னு ரெண்டு பொண்டாட்டிகள், முதல் பொண்டாட்டி அம்பிகாவோட புள்ளை விஷால், ஆர்யா ரெண்டாவது பொண்டாட்டி பிரபா ரமேஷோட புள்ளை. ஆக ரெண்டு பேரும் அண்ணன் - தம்பி. விஷால் இந்தப் படத்துல 'வால்டர் வணங்காமுடி'ங்கிற பேர்ல ஒரு அரவாணியா வர்றாரு, அவர் எப்படி அரவாணியா ஆனாரு..? அந்த டோரி கண்கள் எதுக்கு? ஒருவேளை அவரை வித்தியாசமா காட்டுறதுக்கா..? இல்லேன்னா படத்தோட கதாபாத்திரத்துக்காகவா..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களே இல்லை.
பாலாவின் படங்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். அவருடைய கதாபாத்திரங்களுக்கென எனத் தனியாக சில விஷயங்களை வைத்திருப்பார். வெகு கலகலப்பாக ஒரு கதாபாத்திரம் காட்டப்பட்டால் கண்டிப்பாக அது மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் அல்லது இறந்து போகும். படம் முடிந்து வரும்போது பார்ப்பவர்களின் மனதில் ஒரு வெறுமையை உணரச் செய்வதே பாலாவின் படங்களின் உத்தி. 'சேது'வில் பாண்டிமடத்துக்குப் போகும்முன்பு விக்ரமை சிரித்தபடி ஒரு குளோசப் ஷாட் காட்டுவாரே.. அதே போலத்தான் 'பிதாமகனில்' சூர்யாவின் மரணமும் 'நான் கடவுளில்' காட்டப்படும் பிச்சைக்காரர்களின் உலகமும். 'நந்தா' பார்ப்பவர்கள் மனதை கனக்கச் செய்யும் அவருடைய முதல் நான்கு படங்களில் ஆதாரமாக ஒரு கதையும் அழுத்தமான சம்பவங்களும் இருக்கும். 'அவன் இவனில்' இது எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்சினை.
எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாத முதல் பாதி. விஷால் கலைஞனாக விரும்பும் திருடன். ஆர்யா பிழைப்புக்குத் திருடும் கேனையன். இருவரும் ஒரே அப்பாவின் வெவ்வேறு மனைவிக்குப் பிறந்தவர்கள். சண்டை போடுகிறார்கள். ஹைனஸ் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமாரோடு நெருக்கமாக இருக்கிறார்கள். நடுநடுவே காதலிக்கிறார்கள். பெரிய தவறொன்று செய்யும்போது இடைவேளை. பிறகு இரண்டாம் பாதியில் மறுபடியும் சும்மா சுத்துகிறார்கள். கடைசி பதினைத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஒரு வில்லன் வருகிறான். குமார் சாகடிக்கப்படுகிறார். பழிக்குப் பழி. சுபம்.
வெகு சாதாரணமான இந்தக் கதைக்கு பாலா தேவையா? பாலாவின் படமென்றால் இதெல்லாம் இருக்கும் என அவர் உருவாக்கிய பிம்பமே அவருக்கு இந்தப் படத்தில் மிகப்பெரிய எதிரியாக மாறியிருக்கிறது.
இந்தப்படத்தின் திரைக்கு முன்பான நாயகர்கள் இருவர். முதலில் விஷால். மாறுகண், குரலில் இருக்கும் இளகிய தன்மை, சட் சட்டென்று மாறும் பாவனைகள், பெண்களைப் போல அவர் வெளிப்படுத்தும் உடல்மொழி என நிறைய சிரமப்பட்டிருக்கிறார். சூர்யாவின் முன்பு விதவிதமாக நடித்துக் காட்டும் இடத்தில் பிரித்து எடுத்திருக்கிறார்.
இரண்டாவது நாயகன் ஜி.எம்.குமார். அவருடைய கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம். எல்லாவற்றையும் இழந்தபின்னும் தன்னை நாட்டின் ராஜாவாக நம்பிக் கொண்டிருக்கும் குழந்தைமையும் தனக்கென மக்கள் வேண்டுமெனத் தேடியலையும் பதட்டமும் கலந்து உருவாக்கப்பட்டு இருக்கும் அவர்தான் படத்தின் மிக முக்கியமான மனிதர். நிர்வாணமாக இவர் காட்சியில் காட்டப்பட்டது தேவையற்ற ஒன்று. அதன் அவசியத்தன்மை அந்த இடத்தில் இல்லவே இல்லை. சும்மா வித்தியாசமா செய்யணும் என்று பாலா செய்தார் போலவே தெரிகிறது.
'கும்பிடுறேன் சாமி'யாக வரும் ஆர்யா ஓவர் சவுண்ட். 'பிதாமகன்' சூர்யாவின் ஜெராக்ஸ் மாதிரி இருக்கிறார். அவருடன் கூடவே வரும் சிறுவனின் செய்கைகள் முழுக்க முழுக்க எரிச்சல். மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்காத கதாநாயகிகள் ஜனனியும் மது ஷாலினியும். போலீஸ் ஏட்டான ஜனனி திருட்டுப் பயலான விஷாலை காரணமே இல்லாமல் காதலிக்கிறார் என்றால் மது ஷாலினிக்கோ ஆர்யா குட்டிக்கரணம் அடிக்கச் சொல்வதால் காதல் வருகிறது. கெரகம்டா. இன்னும் எத்தனை படத்தில்தான் கல்லூரிக்குப் போகும் பெண்ணை அடாவடி நாயகன் கூப்பிட்டு மிரட்டிக் காதலிப்பதைக் காட்டுவார் பாலா? படத்தில் நேர்மையாக கெட்டப் இருக்கும் ஒரே பாத்திரம் அம்பிகாவினுடையது. பீடி பிடிக்கிறார். மகன் அடிக்கும் குவார்ட்டரில் பங்கு கேட்கிறார். எல்லாவற்றையும் விட ஆர்யாவை அவர் அடிக்கும் கிண்டல்கள்.. அதிரடி.
வில்லனாக வரும் ஆர்.கே. வழக்கமான பாலாவின் படங்களில் வரும் கொடூரத்தனத்தை கண்முன்னே நிறுத்துகிறார். திரிபாதியை மலைமேல் அம்மணமாக அடித்துக் கொல்வது, மரத்தில் கட்டி தொங்க விடுவது என குரூரமாய் காட்சியளிக்கிறார்.
பாத்திரத்திற்கான கதையில் ஹீரோயின்கள் இருவரும் இல்லாதிருப்பதால் அவர்களின் நடிப்புத்திறன் இந்த படத்தில் வெளிப்படவில்லை. ஆனால் சற்று கூடுதலான நேரம் வரும் ஜனனி ஐயரின் நடிப்போ பெரிசாக எடுபடவில்லை. செயற்கைத்தனம் கூடுதலாக தெரிகிறது. மற்றொரு நடிகை மதுசாலினுக்கோ திரையில் தோன்றும் நேரம் மிக குறைவு. ஆனால் ஜனனி ஐயரை விட நடிப்பிலும் அழகிலும் இருபடி மேல்தான்.
ஒரு சின்னப்பையன் போலீசை 'ஏவ் சொட்டத்தலை'ன்னு சொல்லி கிண்டல் பண்றது, புரமோஷன் கெடச்சதுக்காக ஒரு போலீஸ் திருடன்களுக்கெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேயே கெடாவெட்டு பிரியாணி போடுறது, அந்த விழாவுக்கு வர்ற திருடன்கள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்லேயே சரக்கடிச்சிட்டு கும்மாளம் போடுறது, இப்படி நிஜத்துல நாம பார்த்திராத, கேள்விப்படாத விஷயங்கள் படத்துல நெறைய உண்டு.
அதேமாதிரி ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை கடத்திட்டுப் போறது விஷால், ஆனா ஆர்யாவையும் அவன் கூட்டாளி சின்னப் பையனையும் போலீஸ் பிடிச்சி விசாரிக்குது. அதுக்குப் பொறவு அந்த விவகாரம் என்ன ஆச்சின்னே தெரியல. இதுக்கிடையில சூர்யா கெஸ்ட்ரோல்ல வந்து இந்தப்படம் மூலமா தன்னோட 'அகரம் பவுண்டேசனுக்கு' விளம்பரம் வேற தேடிக்கிட்டு போறாரு.
முதல் பாதி சம்பவங்களின் கோர்வையை கொஞ்சமாவது ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் எஸ்ராவின் வசனங்கள். தொடர்ச்சியாக சிரித்துக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் பெண்கள் அணியும் பேண்டில் ஜிப் இருக்குமா என்கிற ரீதியிலான வசனம் எல்லாம் தேவையில்லை என்றே தோன்றுகிறது. யுவனின் 'டியோ டியோ டோலே'வுக்கு விஷால் போடும் கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே குலுங்குகிறது. பின்னணி இசையும் ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும் படத்துக்குத் தேவையான மூடைக் கொடுக்கின்றன.
ஒட்டுமொத்தமாக படத்தை சரியில்லை என்று சொல்ல முடியாது. ஆனால் பரவாயில்லை ரகம்தான். முதல்பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம்பாதி கொஞ்சம் வேகத்தோடு கலகலப்பாக செல்கிறது. சொல்ல வந்ததை சொல்ல இப்பிடி மெனக்கெட்டு படம் எடுக்க தேவையில்லை என்பது ஒரு புறம் இருக்க கடைசியில் வந்த பல காட்சிகள் தேவையற்று வேண்டுமென்றே கதையை சொல்லி முடிக்க உருவாக்கப்பட்டது போல உணர்வை தருகின்றது.
விஷால் தனது பிலிமோகிராபியில் இந்த படத்தை தனது பெஸ்ட் என்று மார்தட்டிக்கொள்ளலாம்... என்னதான் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்களை காதில் வாங்கினாலும் விஷாலின் உடல்மொழிக்கு இந்த படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டும்..பெண்சாயல் மற்றும் ஆண்சாயலுக்கு அவர் திடும் என்று மாற்றும் உடல்மொழிகள் அற்புதம்.
எதிர்பார்ப்புகள் ஏராளமாகும்(High Expectations lead to Frustrations) போது ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாததுதான். எந்த ஒரு படைப்பாளியும் சுதந்திரமாய் சிலவற்றை செய்ய விரும்புவார்கள். பரிசோதனைகளை செய்வதில் சிறந்தவர் பாலா. பல விமர்சனங்கள், எதிர்மறை கருத்துக்கள், விருதுகள், தோல்விகளுக்கு பின்பும் அவர் தன் நிலைபாட்டிலிருந்து எந்த விதத்திலும் மாறவில்லை என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட சில கருத்துக்களால் பாலா ஏதேதோ செய்யப் போய் மீண்டும் தனது பழைய பாணிக்கே வந்துவிட்டதுக்கு 'அவன் இவன்' நிதர்சனம்.

June 25, 2011

இணையத்தின் வரலாறு


உலகம் முழுதும் பரந்துள்ள இடைத்தொடர்பு வலையமைப்புகளே இணையம் உருவாக முன்னோடியாக இருந்தது. பெரும்பாலான தகவல் தொடர்பு வலையமைப்புகள் உள்ளூர் வலையமைப்பின் இரண்டு நிலையங்களிடையே மட்டும் வரையறுக்கப்பட்ட தொடர்புகளை அனுமதிக்கும் இயல்புடையதாக உள்ளது. தற்போதைய கணினி வலையமைப்பு மைய கணினிஅமைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.இரண்டு தனித்தனியாக உள்ள வலையமைப்புகளுக்கு இடையே, வலையமைப்பினுடைய இணைப்புக் கொள்கைகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகள், நவீன எண்முறை வலையமைப்பினுடைய பொதி நிலைமாற்றம் குறித்த முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.இந்த ஆய்வு முயற்சிகளில் டொனால்ட் டேவிஸ் (NPL), பால் பாரனின் ரெண்ட் கார்ப்ரேஷன் மற்றும் MIT மற்றும் UCLA யிலிருந்து லியானார்ட் கிளைன்ராக் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஆய்வானது 1960 களின் பிற்பகுதி மற்றும் 1970 களில் இருந்த ஆர்பாநெட் மற்றும் X.25 உள்ளிட்ட சில நெறிமுறைகளின் பொதி நிலைமாற்ற வலையமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது.கூடுதலாக, யுனிக்ஸ் டு யுனிக்ஸ் காபி (UUCP) மற்றும் ஃபிடோநெட் உள்ளிட்ட பொது அணுகுமுறை மற்றும் பொழுதுபோக்கு வலையமைப்பு முறைகளின் புகழும் வளர்ச்சியுற்றது. இவைகள் தற்பொழுதும் பிரிந்து தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளன. இவைகள் தங்கள் வலையமைப்புகளிடையே வரையறுக்கப்பட்ட நுழைவாயில்களை மட்டும் வழங்கிவருகின்றன. இது பொதி நிலைமாற்றி செயல்பாடுகளிலிருந்து முன்னேற்றமடைந்த வலையமைப்புகளின் நெறிமுறைக்கு வழிகாட்டியாக அமைந்தது. இதில் பல்வேறுவகையான வலையமைப்புகள் தங்களுக்குள் இணைந்து உயர்தர கட்டமைப்புடைய வலையமைப்புகளாக மாற்றம் பெற்றன.எளிய பொதுவான வலையமைப்பு முறையை வரையறுத்தால், அதன் இணைய நெறிமுறைத் தொகுதியானது, அதன் வலையமைப்பு கொள்கையின் இருப்பு சார்ந்த நடைமுறையிலிருந்து தனித்திருக்கும். 1982 இல் அதிகாரபூர்வமாக நடைமுறைபடுத்தப்பட்ட நிலையான நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு பரவத் துவங்கிய இணைய வலையமைப்பானது, உலக வலையமைப்புக்கான சிந்தனையை உருவாக்கியது. இதுவே இணையம் என்றழைக்கப்பட்டது.மேற்கத்திய உலகம் இந்த நவீனத் தொலைதொடர்பு வலையமைப்புகளை ஏற்றுக்கொண்டு விரைவாக இணைத்தொடுப்புகள் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு பிறகு உலக வலையமைப்புக்கான பன்னாட்டளவிலான நிலையான நடைமுறைகள் உலகின் பிற பகுதிகளுக்கும் ஊடுருவத் துவங்கியது.வளர்ந்த நாடுகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கிடையேயான இதனுடைய வேறுபட்ட வளர்ச்சியானது இன்றுவரையிலும் அதன் எண்ம இடைவெளி தொடர்வதற்கு காரணமாக உள்ளது.


வணிகமயமாக்கலைத் தொடர்ந்து தனியாரால் இயக்கப்படும் இணைய சேவை வழங்கிகள் 1980 களில் அறிமுகப்படுத்தப்பட்டன, மற்றும் 1990 களில் அதன் பயன் சார்ந்த புகழ் காரணமாக பண்பாடு மற்றும் வணிகத்தில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தால் இணையம் விரிவடைந்தது.இந்த வளர்ச்சியில், மின்சார அஞ்சல் மூலம் நடைபெற்ற உடனடி தகவல் பரிமாற்றம் (மின்னஞ்சல்), உரைநடையை அடிப்படையாகக் கொண்ட விவாதக் குழுக்கள் மற்றும் உலகளாவிய வலை ஆகியனவும் அடங்கும்.இந்த டாட்-காம் குமிழி இன் கண்டுபிடிப்பானது புதியதாக சந்தையில் ஏற்படும் விலையேற்றம் மற்றும் விலை வீழ்ச்சி ஆகியவற்றை முதலீட்டாளர்கள் கணிப்பதற்கு வழிகாட்டியாக அமைந்தது.இக்குறை இருப்பினும், இணையம் தொடர்ந்து வளர்ச்சியுற்றது.

Windows DDL Bug Error

A New happening around the windows come under the defect or flaw of DLL files (Dynamic Link Library) that are likely to influence or infected the hundreds of applications which cause the obnoxious attack in the wild which come under the statement of security researchers recently.
Microsoft recognized in an advisory on Monday a kind of assault system well-known as DLL preloading, or dual binary planting and said that even as it is not fresh it does encompass with a new remote assault or attack vector. The malevolent or obnoxious code can currently be planted on a system share instead of just on a limited or local system, making it much easier to attack vulnerable systems by deceive public into clicking on nasty Web links or opening malicious or obnoxious documents.


One of the Security firm Across  that reveal the matter last week after pronouncement that it concern iTunes and Rapid7 Chief Technology Officer HD Moore in print additional information regarding it this week now and here. Moore, which has the inventor of the Metasploit database and structure, also launched a tool to experiment whether application are susceptible or not.
currently, the Exploit-db.com develop exploit database is getting busy with compliance of applications that peoples said are susceptible like Windows XP (Address Book), Windows Live Mail, Windows Movie Maker, MS Office 2007, Microsoft PowerPoint 2010, , and non Microsoft applications like Firefox 3.6.8, foxit reader, Wireshark and uTorrent.
The company exploit-db declares that there are hundreds of affected files of (DLL) that are susceptible. In the meantime, researchers encompass a little nasty assault or attack using the susceptibility in the untamed.

Humanoid Romeo Robot will launch on 2011

I think in future we see more Robots in operational routine works rather than humans. The reason of building Robot is more effective and efficient in term of working rather than humans. The latest news comes that France will launch or release the Robot “Romeo” on coming March 2011. The above image is a depiction of this Robot Romeo which is built by Paris based Aldebaran Robotics in France. The concept of this Robot is belong to Humanoid Robot which named by the developers as “Romeo”. The Robot Romeo has 40 Kg Weight with 1.4 m Tall and the expected cost of Romeo will be €250,000.
The developers said that Robot made on Humanoid concept which allows the robot to do all the routine human works like walk through home, getting food from kitchen, clean the tables, take out and put the garbage. The Romeo Robot will be used as a Social Robot which will helps the Old citizens in term of their works and also helps the disable peoples in term of supporting. The Aldebaran authorities said that the upcoming Romeo Robot will come with great numerous creative and innovation options including the elegant design of body, 4 Vertebra Backbone, Somewhat Soft Torso, composite Leg Exoskeleton, integration of High Tech New and Safer Control System, Articulated crafted Feet and never the less great compatible built communication system in Romeo.
Never the less, Robot Romeo interacts with peoples or humans through natural speech and gestures. The CEO of Aldebaran said that “the purpose of making Robot Romeo in order to helps the humans just like a human”.  I think its great news in the world of future technology because somewhat we need Robots in our daily works because we all are so busy in our professional lives. So we need someone who cares our homes and us but question is still that are these Robots is put the same feel or essence of love and affection as by humans. I think this question is still unanswered because thus why we are humans.

Videos

கடற்கன்னி

Humanoide en Marte, o una simple roca? 

   

Real Life Aliens

 

அனைத்து வகையான கோப்புகளையும் பார்க்க ஒரே மென்பொருள்

கணிணியில் பயன்படுத்தும் கோப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வகை கோப்புகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கென தனியாக ஒரு மென்பொருளைப் போட்டிருந்தால் தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக புகைப்படங்களைப் பார்க்க, பாட்டு கேட்க, படம் பார்க்க, படிப்பதற்கென்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மென்பொருள்கள் போட்டிருந்தால் தான் கணிணியில் பயன்படுத்த முடியும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பயன்படுத்த முடிந்தால் எப்படியிருக்கும்? இந்த வினாவிற்கு விடையாக இருக்கிறது FreeOpener என்ற மென்பொருள். இந்த மென்பொருள் கணிணியில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான வகைகளை ஆதரிக்கிறது.

இந்த மென்பொருளிலேயே வீடியோப் படங்களைப் பார்க்க முடியும். பாட்டு கேட்க முடியும். ஆவணங்களைப் படிக்க முடியும். இதைப் போட்டு விட்டால் பிடிஎப் மென்பொருள், படம் பார்க்கும் மென்பொருள் கூட தனியாகத் தேவையில்லை. இந்த மென்பொருள் 75க்கும் மேற்பட்ட பைல் வகைகளை ஆதரிக்கிறது. இந்த மென்பொருளினால் பயன்படுத்தக்கூடிய வகைகளை கீழே பார்ப்போம்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2 and X3F

 உதாரணமாக வீடியோ ஒன்றினைத் திறக்கும் போது அதற்கான கண்ட்ரோல்களும் வந்து விடும். படத்தை ஓட்டுவதற்கு, நிறுத்த போன்ற மற்ற படம் பார்க்கும் மென்பொருளில் இருப்பதைப் போல மாறிவிடும். இதிலேயே பல வகையான படம் பார்க்கும் வகைகள் ஆதரிக்கப்படுவதால் தனியாக எந்தவொரு வீடியோ பிளேயரும் தேவைப்படாது. இதனால் கணிணியில் கட்டண மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒளிப்படங்களையும் எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் PDF மற்றும் MS-Office போன்ற ஆவணங்களையும் PHP போன்ற நிரல் மொழிகளையும் இதிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.எல்லாவகையான கோப்புகளையும் பார்ப்பதற்கு கணிணிக்கு இந்த மென்பொருளே போதுமானது. தரவிறக்கச்சுட்டி: http://www.freeopener.com

June 24, 2011

19 வருடங்களாக தலையால் ஒட்டிய நிலையில் வாழும் இணை பிரியா சகோதரர்கள்

ஸ்டீபன் மற்றும் டைலர் டெல்ப் ஆகிய இருவரும் தலையால் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இருவரும் 19 வருடங்களாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மிக அரிதாகவே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துள்ளனர். அதுவும் கண்ணாடி வழியாகத்தான்.
 தலையால் ஒட்டியிருக்கும் இவர்களின் முகங்கள் எதிர் எதிர் பக்கங்களாக அமைந்துள்ளன. எனவே ஒருவரை மற்றவர் கண்ணாடியின் உதவியின்றி பார்க்கவே முடியாது. உலகில் இத்தகைய இரட்டையர்கள் பிறந்து இவ்வளவு காலம் உயிர் வாழ்வதென்பது மிகவும் அபூர்வமான ஒரு விடயமாகும்.

இவர்கள் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் தென் ஜேர்ஸி பகுதியைச் சேர்ந்தவர்கள். முதல் தடவையாக இவர்கள் ஊடகங்களுக்கு முன்னாள் தோன்றி தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களுள் ஒருவர் எதிர்ப்பால் உணர்வுடையவர்.மற்றவர் ஓரினச் சேர்க்கை ஆர்வமுள்ளவர். ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு நொடி கூட பிரிந்திருக்க முடியாது.

இருவரும் நன்றாக வயலின் வாசிக்கக் கூடியவர்கள். ஒருவருக்கொருவர் சகோதரர்களாக மட்டுமன்றி நல்ல நண்பர்களாகவும் உள்ளனர்.

இவர்களின் பெற்றோர்கள் இவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். இருவருமே இறைவன் தங்களுக்களித்த கொடை என்று அவர்கள் நம்புகின்றனர்.

விஷேட தேவைகள் உடைய பிள்ளைகளுக்கான பாடசாலையில்தான் இருவரும் படித்து வருகின்றனர்.அதற்கு மேலதிகமாக பிரதான பாடசாலைக்கும் செல்லுகின்றனர்.

படிப்பில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அவர்களின் அசிரியர்கள் கூறுகின்றனர். ஒருவர் திரைப்படத் துறையிலும் மற்றவர் இசைத் துறையிலும் ஆர்வம் கொண்டுள்ளதாக இவர்களின் அசிரியர்கள் தெரிவிக்கின்றனர்

மேசையில் இயங்கும் கையடக்கதொலைபேசி

பல விதமான வண்ணங்களிலும் பல வடிவங்களிலும் பல நவீன வசதியுடைய கைபேசியை பார்த்திருப்போம். ஆனால் இந்த கைபேசி மேசையில் இனைத்து இயக்ககூடிய அளவுக்கு நவீன வசதியுள்ளது.

Autorun.inf வைரஸ்களை நீக்க அருமையான மென்பொருள் Autorun Eater

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?


இந்த வகையான கோப்புகள் சில வன்பொருள்கள் அல்லது மென்பொருள்கள் போட்டவுடனே தானாகவே இயங்குவதற்காக எழுதப்படும் டெக்ஸ்ட் வகையான அமைப்புகளைக் கொண்டவை. இந்த கோப்புகள் எந்த கோப்பை முதலில் இயக்க வேண்டும், எந்த ஐகானைக் காட்ட வேண்டும் போன்றவற்றை இயங்குதளத்திற்குத் தெரிவிக்க உதவுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு சிடியைப் போட்டவுடன் எந்த கோப்பை முதலில் இயக்க வேண்டும், சிடி டிரைவில் எந்த ஐகானைக் காட்ட வேண்டும் என்ற அமைப்புகளைக் கணிணிக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வகையான கோப்புகளை சில நேரம் மால்வேர்கள் எனப்படும் வைரஸ்களும் உருவாக்கி கணிணியைப் பாதிக்கின்றன.
பென் டிரைவ் போன்ற சாதனங்களில் ஒவ்வொரு வகையான மால்வேர்கள் இந்த மாதிரி ஆட்டோரன் கோப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. அதனை கணிணியில் இணைக்கும் போது அவை கணிணியில் பரவி கணிணியைப் பாதிப்படையச் செய்கின்றன. தற்போது இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த மாதிரி மால்வேர்கள் உருவாக்கும் ஆட்டோரன் வைரஸ்களை கண்டறிய முடியாமலே இருக்கின்றன.
இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் AutorunEater. இது ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் கிடையாது. கனிணியில் எப்போதும் சோதனை செய்து சந்தேகப்படும் படியான ஆட்டோரன் வைரஸ்களைக் கண்காணித்து அழிக்கிறது. மேலும் புதிதாக இவை உருவாகாத மாதிரியும் தடுக்கிறது. ஆண்டிவைரஸ் மென்பொருளால் கண்டுபிடிக்காத முடியாத ஆட்டோரன் வைரஸ்களை எளிதாக அழிக்கும் மென்பொருளாகும். இதனை நிறுவியதும் கணிணியின் டாஸ்க் பாரில் அமர்ந்து கொள்ளும்.


இதன் மூலம் பிளாப்பி டிஸ்குகளையும் கண்காணிக்க முடியும். இதன் சிறப்பான விசயம் எந்தவொரு டிரைவும் தானாக இயங்குவதை நிறுத்தி வைக்க முடியும். இதற்கு இந்த மென்பொருளை வலது கிளிக் செய்து வரும் மெனுவில் Close Autoplay என்பதை எனேபிள் செய்தாலே போதுமானது. இதனால் தவறான மால்வேர்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.ஏதெனும் மால்வேர் வைரஸ் தென்பட்டால் உங்களிடம் அலாரம் மாதிரி காட்டி விடுகிறது. அதனை நீங்கள் Delete கொடுத்து அழித்து விடலாம். அதிகமாக சிடி/டிவிடி மற்றும் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
தரவிறக்கச்சுட்டி: http://download.cnet.com/Autorun-Eater/3000-2239_4-10752777.html?tag=mncol;1

கூகிளின் +1 பட்டன் அறிமுகம்...

இணையத் தேடுதளங்களுக்கு இடையில் கடுயைமான போட்டி நிலவி வருகின்றது. இணையத்தில் தகவல்களை திரட்டுக் கொள்வதற்கு பல்வேறு சுலப வழிகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலக இணைய தேடுதள ஜாம்பவான்களாக கூகிள் நிறுவனம் பரீட்சார்த்தமாக புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்துள்ளது. கூகிளின்  +1 தொழில்நுட்பம் தேடுதளங்களின் மூலம் இலகுவில் தகவல்களை பெற்றுக் கொள்ள வழியமைக்கின்றது.
+1 தொழில்நுட்பம் தொடர்பில் கூகிள் நிறுவனத்தின் சிரேஸ்ட அதிகாரி ஜிம் ப்ரோசர் விளக்களித்துள்ளார். ப்ரோசரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிகப்பட்ட பதில்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

கூகிள் நிறுவனம் எதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றது?

facebook  இணையத்தளத்திற்கு போட்டியாகவும், இலகுவில் இணையத் தளங்களில் தகவல்களை தேடுவதற்கும் இந்த +1 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நண்பர்களிடம் ஆலோசனை கோருவது வழமையானது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூகிளின் +1 தொழில்நுட்பம் உதவியாக அமையும். தேடல்களை காத்திரமானதாக அமைத்துக் கொள்ள முடிகிறது.

+1 தேடுதள தர வரிசையை பாதிக்குமா?

இல்லை. எனினும், எதிர்காலத்தில் தரப்படுத்தலில் இந்த தொழில்நுட்பத்தை இணைப்பதற்கு கூகிள் எதிர்பார்க்கின்றது.

+1  பட்டனில் காணப்படும் முகவரிகள் யாருடையது ?

இவை கூகிள் முகவரிப் பட்டியலில் காணப்படும் முகவரிகள். கூகிள் உற்பத்திகளில் உள்ளடக்கப்படும் முகவரிகளே இவையாகும். குறிப்பாக ஜீமெயில்,பஸ் மற்றும் ரீடர் ஆகியவற்றில் காணப்படும் முகவரிகளாகும்.

பேஸ் புக் நண்பர்கள்  +1 பட்டனைப் பயன்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா?

அவ்வாறானதொரு சாத்தியங்கள் இல்லை. facebook இணைய சேவை மூடப்பட்ட ஓர் நண்பர்களுக்கு இடையிலான சேவையாகும். கூகிளின் +1 முறைமை திறந்த இணைய சேவையாகும். சமூக வலையமைப்புக்களை உள்ளடக்குவதற்கு கூகிள் முயற்சி மேற்கொள்கின்றது. எனினும் பேஸ் புக்கை இதில் இணைத்துக் கொள்ளும் திட்டம் கிடையாது. +1 பட்டன் facebook கின் Like பட்டனுக்கு நிகரானது.

டுவிட்டர் தொடர்பில்?

டுவிட்டருடன்  +1 பட்டனை இணைப்பதற்கு தீர்மானிக்கவில்லை.

ஏனைய சமூக வலை தளங்களிலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமா?

பிளிக்கர் மற்றும் கியூரா ஆகிய சமூக வலைத்தளங்களுடன் இணைந்து செயற்படத் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் பரீட்சர்த்த முயற்சிகளின் போது இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாது.

+1 தொழில்நுட்பத்தை எப்போது பயன்படுத்த முடியும்?

இன்னும் சில மாதங்கள் காத்திருக்க நேரிடும். Google.com/experimental
என்ற இணையத்தில் இந்த தொழில்நுடபத்தை பரீட்சித்து பார்க்க முடியும். எனினும் தற்போதைக்கு மிகக் குறைந்தளவான பாவனையாளர்களே +1 பட்டனைப் பயன்படுத்த முடியும்.

+1 இல் பேனர் விளம்பரங்கள் இணைக்கப்படுமா?

தற்போதைக்கு அவ்வாறான வாய்ப்பு கிடையாது. எனினும் எதிர்காலத்தில் விளம்பரங்களை இணைக்கும் உத்தேசம் உண்டு.

MAYAS

எல் காஸ்ட்டீயோ பிரமிட்


எல் காஸ்ட்டிலோ பிரமிட் என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும்.9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது.

பிரமிடின் அமைப்பு



இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக்குவது மெசோஅமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது.

மறுகட்டமைப்பு



இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாஷிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேனஸ் ஜி. மார்லே என்பவரது தலைமையில் 1920களின் கடைக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர்.

பிரமிடின் வெளிப்பகுதி



நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர், கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது.பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது.ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார்.இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று.






சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா  என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான்  என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.அமெரிக்க தொல்பொருளாய்வியல் கூட்டமைப்பின் கருத்தின்படி சிச்சென் இட்சாவிலுள்ள சிதைவுகள் அரசாங்கச் சொத்து. எனினும் சிதைவுகள் காணப்படும் இடமானது 'பிஸ்டெ' நகர மக்காளின் கூட்டுரிமையும் பார்பசனோஸ்ரது (19-ஆம் நூற்றாண்டுதொட்டு யுகட்டான் நகரின் மிகத்திறம்படைத்த குடும்பளில் ஒன்று) தனிப்பட்ட உரிமையும் சேர்ந்த உரிமையுள்ள இடமாக கருதப்படுகிறது.


THE MAYAS

 மாயா நாகரிகம் 

மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுனுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடுங்கியியது. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாச்சார பேரழிவிற்கு காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது.

மாயன் கணிதம்

மாயர் எண் முறைமையில் 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்{[fact}}. மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
 மாயன் கட்டிடக் கலை


அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகது. நவீன வரலாறு, தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.
மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாச்சார சின்னங்களாகக் காணலாம்.

மாயன் வானியல்

மற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.

மாயன் நம்பிக்கைகள்


ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.

இலக்கியம்/நூல்கள்


ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.

வீழ்ச்சி


இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.


June 14, 2011

கனா காணும் காலங்கள்_Part-62


கனா காணும் காலங்கள்_Part-61


கனா காணும் காலங்கள்_Part-60


கனா காணும் காலங்கள்_Part-59


கனா காணும் காலங்கள்_Part-58


கனா காணும் காலங்கள்_Part-57



கனா காணும் காலங்கள்_Part-56


கனா காணும் காலங்கள்_Part-55



கனா காணும் காலங்கள்_Part-54


June 13, 2011

கனா காணும் காலங்கள்_Part-53


கனா காணும் காலங்கள்_Part-52


கனா காணும் காலங்கள்_Part-51


கனா காணும் காலங்கள்_Part-50


கனா காணும் காலங்கள்_Part-49


கனா காணும் காலங்கள்_Part-48


கனா காணும் காலங்கள்_Part-47


கனா காணும் காலங்கள்_Part-46


June 12, 2011

கனா காணும் காலங்கள்_Part-45


கனா காணும் காலங்கள்_Episode-44


கனா காணும் காலங்கள்_Episode-43


கனா காணும் காலங்கள்_Episode-42


கனா காணும் காலங்கள்_Episode-41


கனா காணும் காலங்கள்_Episode-40


கனா காணும் காலங்கள்_Episode-39


கனா காணும் காலங்கள்_Episode-38


கனா காணும் காலங்கள்_Episode-37


June 11, 2011

கனா காணும் காலங்கள்_Episode-36


கனா காணும் காலங்கள்_Episode-35


கனா காணும் காலங்கள்_Episode-34


கனா காணும் காலங்கள்_Episode-33


My Lanka: அணுவாயுத யுத்தத்தில்தானாம் செவ்வாய்க் கிரகம் அழிந்...

My Lanka: அணுவாயுத யுத்தத்தில்தானாம் செவ்வாய்க் கிரகம் அழிந்...: "நம்புவதற்கே சற்று கடினமாக இருக்கும். ஆனால், உண்மையிலேயே வியக்க வைக்கும் தகவல்கள் கொண்டது இந்த கட்டுரை. இதிலே கூறப்பட்டு இருக்கும் தக..."

கனா காணும் காலங்கள்_Episode-32


கனா காணும் காலங்கள்_Episode-31


கனா காணும் காலங்கள்_Episode-30



கனா காணும் காலங்கள்_Episode-29


June 2, 2011

கனா காணும் காலங்கள்_Episode-9

கனா காணும் காலங்கள்_Episode-8

கனா காணும் காலங்கள்_Episode-7

கனா காணும் காலங்கள்_Episode-6

கனா காணும் காலங்கள்_Episode-5

கனா காணும் காலங்கள்_Episode-4

கனா காணும் காலங்கள்_Episode-3

கனா காணும் காலங்கள்_Episode-2

கனா காணும் காலங்கள்_Episode-1