July 27, 2011

தனுஷ்க்கு அடுத்தபடியாக சிம்புவும் சிக்ஸ்பேக்

சமீபகாலமாக சிக்ஸ்பேக் வைக்கும் கலாச்சாரம் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அடுத்தபடியாக இப்போது சிம்புவும் சிக்ஸ்பேக் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்தியில் சல்மான் கான் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தபாங். இப்படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை டைரக்டர் தரணி இயக்க, அதில் ஹீரோவாக சிம்பு அலைஸ் எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். ஒஸ்தி படத்தில் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார். இதற்காக தன்னுடைய உடம்பை வலுப்படுத்தி வருகிறார்.

மேலும் இந்தபடத்தில் நீங்கள் சிக்ஸ் பேக் வைத்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் தரணி சொல்ல, சிம்புவும் அதற்கான முயற்சியில் இறங்கிவிட்டார். சிக்ஸ் பேக்கிற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சி, யோகா, சத்தான மற்றும் கட்டுக்கோப்பான உணவு வகைகளை உட்கொண்டு வருகிறார்.

திருநங்கையாக சரத்குமார். முனி-2 இல் கலக்கல் வேடம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காஞ்சனா. அவர் இதற்கு முன் நடித்து இயக்கி வெளியிட்ட முனி படத்தின் இரண்டாம் பாகம் இது.இந்தப் படத்தின் ஹைலைட்டே, முனியாக வரும் சரத்குமார்தான். இந்த முனி சாதாரண முனி அல்ல... திருநங்கை. நடிகர் சங்கத் தலைவராக, எம்எல்ஏவாக, கட்சித் தலைவராக தனக்கென ஒரு இமேஜ் கொண்ட சரத்குமார், சற்றும் தயங்காமல் இந்த வேடத்தில் நடித்துள்ளார்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் இப்படிச் சொல்கிறார்:

"காஞ்சனா படத்தில் சரத்குமாரின் கேரக்டர், படத்தில் ஹைலைட்டாக அமைந்துவிட்டது. இமேஜ் பார்க்காமல் இந்த வேடத்தை அவர் செய்ததால் படத்துக்கே புதிய மரியாதை கிடைத்துள்ளது. அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." படத்தில் நடித்தது குறித்து சரத்குமார் கூறுகையில், "நான் ஒரு நடிகனாக என் வேலையைச் செய்தேன். சவாலான வேடங்களைச் செய்வது எனக்கு பிடித்தமான விஷயம். காஞ்சனா பாத்திரத்தில் என் பங்கை சரியாகச் செய்திருப்பது, ரசிகர்களின் ரியாக்ஷனிலிருந்து தெரிகிறது," என்றார். 

July 25, 2011

இந்தியில் ரீமேக் ஆகும் மைக்கேல் மதன காமராஜன், நடிகர்களிடையே கடும் போட்டி

?
கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நகைச்சுவை கலந்த கலாட்டா படமான மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் ரீமேக்கில் நடிக்க சல்மான் கானும், அக்ஷய் குமாரும் கடும் போட்டியில் குதித்துள்ளனராம். 1990-களில் வெளிவந்த சூப்பர் ஹிட் நகைச்சுவை படம் கமல் ஹாசனின் மைக்கேல் மதன காம ராஜன். இந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இயக்குனர்கள் ஃபாரா கானும், பிரியதர்ஷனும் போட்டி போடுகின்றனர்.


ஒரே பிரசவத்தில் பிறந்து, நான்கு இடங்களுக்கு மாறிப் போய் விடும் 4 ஆண் குழந்தைகளின் கதை தான் மைக்கேல், மதன, காம ராஜன். இதில் கமல் ஹாசன் 4 வித்தியாசமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். குஷ்பு, ரூபிணி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஊர்வசியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அடித்த காமடி லூட்டி அனைவரையும் ஈர்த்தது. இளையராஜாவின் அட்டகாசமான இசையும் சேர்ந்து படத்தை மெகா ஹிட்டாக்கியிருந்தது. படத்தின் கதையை கமல்ஹாசனே எழுதி, தயாரிக்கவும் செய்திருந்தார். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து எடுக்க ஃபாரா கானும், அக்ஷய் குமாரை வைத்து எடுக்க பிரியதர்ஷனும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மைக்கேல் மதன காமராஜனாகப் போவது யார்??


தளபதி அப்பாவுக்கு தமிழக முதல்வரால் தலைவலி

இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கோவை டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிராஜா, மாநில துணை தலைவர்கள் புஷ்சி ஆனந்த், பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கு தலைமை தாங்கிய டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்தில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். அடையாள அட்டை வழங்கியதில் இருந்து கூடுதலாக 1 1/2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் மாவட்டந்தோறும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விஜய் நேரடியாக அரசியலுக்கு வராமல் உங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு நலத்திட்ட பணிகளுக்கும் விஜய் முழு பக்க பலமாக இருப்பார். உங்கள் முயற்சிக்கு நான் துணை நிற்பேன். விஜய் அரசியல்வாதியாக இல்லாமல் உங்களோடு சேர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்வார். மேற்கண்டவாறு டைரக் டர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.

பின்னர் விஜய் ரசிகரின் குழந்தைக்கு அனுவர்ஷினி என்று டைரக்டர் சந்திரசேகர் பெயர் சூட்டி தங்கச்சங்கிலி அணிவித்தார். அடையாள அட்டை வழங்கும் விழாவில் பொருளாளர் குமார், மாவட்ட துணை தலைவர் மைக்கேல்ராஜ், அமைப்பாளர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சரவணன், துணை செயலாளர் சேவியர், ராம்நகர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், சீனிபாபு, பி.எஸ்.குமார், மணிகண்டபிரபு, ஷியாம், சத்தியமூர்த்தி, சுந்தர், ஷாஜகான், ரூபன், முகமது அலி, வினோத், கண்ணன், கார்த்தி, தேன்குமார், ரியாஸ், திருமுருகன், செல்வம், கவுரி சங்கர், செந்தில், ரமேஷ், அபுதாகீர். ரகுபதி, ராம்குமார், கஜேந்திரன், மணிகண்டன், சமத்துவம் ரவி, காட்டூர் கணேஷ், முரளி, காளிதாஸ், தளபதி, சிங்கை சக்தி, கோபி, ஜெயக்குமார், மணிகண்டன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இயக்க நிர்வாகிகளுடன் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.

ரஜினி மகளுக்கு திருப்பதி கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

நடிகர் ரஜினி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சமயத்தில் அவரது மகள் சவுந்தர்யா திருப்பதி ஏழுமலையானிடம் தனது தந்தை பூரண குணம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்தார். இந்நிலையில் ரஜினி பூரண குணம் அடைந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார். இதையடுத்து தனது வேண்டுதலை கேட்ட ஏழுமலையானை தரிசிக்க சவுந்தர்யா முடிவு செய்தார். இதற்காக தனது தந்தையின் நண்பரான நடிகர் மோகன் பாபு மூலம் வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்கி சென்றார்.

அவரும் கணவர் அஸ்வினும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள வி.ஐ.பி. தரிசன நுழைவு வாயிலுக்கு சென்றனர். அப்போது அவர்களிடம் இருந்த தரிசன டிக்கெட்டை கோவில் ஊழியர்கள் பரிசோதித்தனர். அதில் சவுந்தர்யா-அஸ்வின் இருவரது பெயரும் இல்லை. ரஜினி குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயர் மட்டும் தான் இருந்தது. இதனால் ஊழியர்கள் இருவரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் இருவரும் அங்கு செய்வதறியாது தவித்தனர். பின்னர் சவுந்தர்யா நடிகர் மோகன்பாபுவை போன் மூலம் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து மோகன்பாபு தேவஸ்தான உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு நான்தான் ரஜினி மகளுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தேன். அதில் தவறுதலாக இருவரின் பெயர் விடுபட்டு விட்டது. அவர்களை தரிசனம் செய்ய அனுமதியுங்கள் என்று கேட்டு கொண்டார்.

இதையடுத்து அங்கு அதிகாரிகள் சென்று ரஜினி மகள்-மருமகனை தரிசனத்திற்கு அனுமதித்தனர். சுமார் 40 நிமிடத்திற்கு பிறகு சவுந்தர்யா கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த சவுந்தர்யா நிருபர்களிடம் கூறும் போது, எனது தந்தை குணம் அடைந்ததும் ஏழுமலையானை தரிசிப்பதாக வேண்டி இருந்தேன். இதற்காக இங்கு வந்தேன். எனது தந்தை தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவர் அடுத்த மாதம் 14-ந் தேதி திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார் என்றார். ரஜினி மகள்-மருமகனுக்கு திருப்பதி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அவர்களுக்கு ஏழுமலையான் படங்களை பரிசாக வழங்கினார்.

July 21, 2011

அமெரிக்க தொழிலதிபருடன் கல்யாணமா? - த்ரிஷா பதில்

அமெரிக்க தொழிலதிபருடன் திருமணம் என்று வரும் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை த்ரிஷா.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை த்ரிஷாவுக்கு திருமணம், மாப்பிள்ளை ரெடி என்று செய்தி வெளியாவதும், அவர் இல்லையில்லை அது பொய் செய்தி என மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இப்போது மேலும் ஒரு செய்தியும் விளக்கமும் வெளியாகியுள்ளது. த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையில் மிகத் தீவிரமாக இருந்த அவரது அம்மா உமா, இரண்டு வரன்களைப் பார்த்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை விரைவில் இறுதி செய்வார் என்றும் தெலுங்கு இணையதளங்கள் செய்தி வெளியிட்டன. இந்த இரு வரன்களில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் உண்டாம். இவரைத்தான் த்ரிஷா கல்யாணம் செய்வார் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், த்ரிஷா இந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கு திருமணம் என்றால் நிச்சயம் நான் அனைவருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது காதல் திருமணமாகவே இருந்தாலும். ஆனால் நான் பெற்றோர் முடிவு செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன். எப்போது என்பதை நான்தான் சொல்வேன். மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது," என்றார்.

July 20, 2011

டி.ஆரின் லொள்ளுத்தனம் - சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்

அந்த விளம்பர போஸ்டரில், அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர். என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான். இது குறித்து டி.ராஜேந்தர், சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே.

சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். 


மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான் என்று கூறியுள்ளார். 

சல்மான் ஒன்றும் சிறந்த முன்மாதிரி கிடையாது!!

சல்மான் கான் சிறந்த முன்மாதிரி கிடையாது என்று அவரது தந்தை சலிம் தெரிவித்துள்ளார். சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருபவர் இந்தி நடிகர் சல்மான் கான். இருந்தாலும் அவருக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர் ஒன்றும் சிறந்த முன்மாதிரி கிடையாது என்று சல்மானின் தந்தையே தெரிவித்துள்ளார்.

இது குறித்து சல்மானின் தந்தை கூறியதாவது, எனது மகன் சல்மான் அவர் சகோதரர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ சிறந்த முன்மாதிரி கிடையாது. ஏனென்றால் சல்மான் எப்பொழுதுமே எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் வாழ்பவர். சல்மான் கானுக்கு குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியம். இது அவரது ரசிகர்களுக்கும் தெரியும். திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள இது தான் சல்மானுக்கு உகந்த நேரமில்லையா?

சல்மானுக்கு பிரச்சனை என்னவென்றால் அவர் வாழ்வில் வருபவர்கள் எல்லாம் திரை நட்சத்திரங்களாக உள்ளனர். அவர்கள் சல்மான் வாழ்க்கையில் நுழையும்போதே அவரைத் திருமணம் செய்து கொண்டு, குழந்தைகள் பெறும் எண்ணத்தோடு நுழைவதில்லை. சல்மானை வைத்து திரையுலகில் பெரிய இடத்திற்குச் செல்வது தான் அவர்கள் குறிக்கோள் என்றார்.

அப்பா வாயால் சல்மானுக்கு இப்படி ஒரு பாராட்டா?

அழுதது உண்மைதான்... ஆனா விலகறதா இல்ல - நயன்தாரா

ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது. தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள்.

இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு. என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்", என்றார். எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க... அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!

July 19, 2011

உலோகங்களைக் கவர்ந்திழுக்கும் காந்தச் சிறுவன்

பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுவன் பாலே டேவிட் அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளான். இந்த சிறுவன் அதி பயங்கர காந்த சக்தி சிறுவனாக உள்ளான்.அந்த சிறுவனுக்கு இந்த விடயம் தான் பிரச்சனையாக உள்ளது. அவன் நடந்து செல்லும் பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் தானாக ஒடி வந்து ஒட்டிக் கொள்கின்றன.

கத்திகள், இடுக்கிகள், கத்திரிக்கோல் மற்றும் உலோக பொருட்கள் அனைத்தும் அவரை தேடி வந்து ஒட்டிக்கொள்கின்றன என்று தந்தை ஜீனியர் கூறுகிறார். இதே போன்ற சாதனையை குரோஷியாவை சேர்ந்த சிறுவன் இவான் ஸ்டோஜிகோவிக் நிகழ்த்துவது குறித்தும் ஆச்சரியம் ஏற்பட்டு உள்ளது. குரோஷியா சிறுவன் ஏறக்குறை 25 கிலோ எடையுள்ள உலோக பொருளை சுமக்கும் திறன் பெற்றவனாக உள்ளான். சிறுவன் பாலே செல்லும் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் உடலில் அதிக பொருட்களை சுமக்க வலியுறுத்துகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று பார்த்தது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செயலிழந்த பேஸ்புக் கணக்கினை எவ்வாறு மீள ஆரம்பிப்பது ?

 உங்களுடைய பேஸ்புக் கணக்கு திடீரென செயற்படாமல் போய்விட்டதா?

கவலையை விடுங்கள், இது யாருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும், இதனை ஒரு சின்னக் கவனத்தோடு செயற்பட்டு சரிக்கட்டிவிட முடியும்.முதலில் நீங்கள் பேஸ்புக்கின் Statement of Rights & Responsibilities இனை அறிந்துகொள்ள வேண்டும். இது ஒரு மிகப்பெரிய ஆவணம் என எமக்குத் தெரியும்.ஆனால், இதில் மிக முக்கியமான வழிகாட்டிக் குறிப்புகள் அடங்கியுள்ளன. அவை உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நாம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை விளக்குகின்றன.

 ஏன் கணக்கு செயலிழந்தது?

தேவையற்ற புகைப்படங்களைப் பகிர்தல், பொய்யான பெயர்களைப் பாவித்தல், தேவையற்ற விதத்தில் தொல்லை கொடுக்கும் நோக்கில் தொடர்புகளை ஏற்படுத்தல், விளம்பர மற்றும் டேட்டிங் (சந்திப்புகள்) போன்ற தேவைகளுக்காக தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற காரணங்களினால் கணக்குகள் செயலிழக்கச் செய்யப்படுகின்றது.உங்கள் கணக்கு தடைசெய்யப்படவும் கூடும். இதன் அர்த்தம், உங்கள் கணக்கு முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பதில்லை. ஆனால், நண்பர்களுக்கான வேண்டுகோள்களை அனுப்புவது (friends request) தகவல்களைப் பரிமாறுவது போன்றவை தடைசெய்யப்பட்டிருக்கும்.ஆனால், இந்தத் தடை தற்காலிகமானதே. அதற்காக இவ்வாறானவற்றை எந்தக் காரணத்திற்காகவும் பேஸ்புக் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. எனவே நீங்கள் சற்றுப் பொறுத்து உங்களைப் பற்றித் தெரியப்படுத்தி அந்தத் தவறை திரும்ப செய்யாமல் இருந்து சரிக்கட்ட வேண்டும்.உங்களுடைய கணக்குகள் வேறொருவரால் திருடப்பட்டு அவர்கள் தேவையற்ற விடயங்களைப் பதிவிடுவதால் கூட உங்கள் கணக்கு செயலிழக்கச் செய்யப்படும் என்பதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி?

இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுடைய கணக்கை மீண்டும் செயற்பட செய்ய வைப்பதற்கு முதலில் நீங்கள் இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவம் பேஸ்புக்கில் Log in செய்யப்படா விட்டாலும் உங்களுக்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதேநேரம் disabled@facebook.com என்ற ஈமெயில் முகவரிக்கு ஈமெயில் ஒன்றினை அனுப்பி உங்கள் கணக்கு தடை செய்யப்பட்டதற்கான காரணத்தைக் கேட்க முடியும்.அதோடு தேவையற்ற விடயங்களை நீக்குவதாகவும் தெரியப்படுத்த வேண்டும். பேஸ்புக்கின் help section மூலமாகவும் நீங்கள் உதவிகளைப் பெற முடியும்.

உங்கள் கணக்கைப் பாதுகாப்பது எவ்வாறு?

எவ்வாறாயினும் உங்களுடைய கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. இந்த this wizard பகுதியைப் பயன்படுத்தி அதன் மூலம் உங்களுடைய கணக்கின் கடவுச் சொல், ஈமெயில் முகவரியின் கடவுச்சொல் போன்றவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.அதேவேளை this guide மூலமாக உங்களுடைய பேஸ்புக் தரவுகளை சேமித்து வைத்துக்கொள்ளவும் முடியும்.

இணையத்தில் வீடியோக்களை தரவிறக்க கன்வர்ட் செய்ய இலவச மென்பொருள்




இணையத்தில் ஏராளமான வீடியோ பகிரும் தளங்கள் காணப்படுகின்றன. நமக்குப் பிடித்த படங்களைத் தரவிறக்கி கணிணியில் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்போம். ஆனால் சில வீடியோ இணையதளங்கள் தரவிறக்க நேரடியாக சுட்டி கொடுத்திருக்க மாட்டார்கள். அதனைத் தரவிறக்க வேறு தளங்கள் வழியாக சென்று தரவிறக்குவோம். சில தளங்களில் தரவிறக்கும் போது பாதி வரை டவுன்லோடு செய்யப்பட்டு திடிரென்று நின்று விடும். இந்த மாதிரி இணையத்திலிருந்து படங்களைத் தரவிறக்குவதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன.


இந்த சிக்கல்கள் இல்லாமல் இணையத்தில் 280 தளங்களிலிருந்து படங்களைத் தரவிறக்க உதவும் இலவச மென்பொருள் தான் Kastor All video Downloader. இதன் மூலம் Youtube, dailymotion, vimeo, google video போன்ற தளங்களில் காணப்படும் வீடியோக்களை எளிதாக தரவிறக்க முடியும். அது மட்டுமின்றி இந்த மென்பொருள் உள்ளிணைந்த வீடியோ என்கோடர்களைக் கொண்டிருக்கிறது. இதனால் தரவிறக்கிய வீடியோக்களை குறிப்பிட்ட கருவிகளுக்கேற்ப வேறு வடிவங்களில் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் Avi, Wmv, mpeg, Mp4, Mov போன்ற வகைகளில் உடனே எளிதாக கன்வர்ட் செய்து கொள்ளலாம். அதனால் நமது வேலையும் மிச்சமாகிறது.


இந்த மென்பொருள் பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கும் வசதியை (Batch Downloading) ஆதரிக்கிறாது. நமக்குத் தேவையான வீடியோ இருக்கும் இணைய முகவரியை மட்டும் ஒவ்வொன்றாகச் சேர்த்து விட்டு Download என்று கொடுத்தால் ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் தரவிறக்கலாம்.

இதில் இருக்கும் இன்னொரு வசதி என்னவென்றால் தரவிறக்கும் முன்னரே வீடியோ பார்மேட் எப்படி வேண்டும் என Output Format இல் அமைத்துக் கொள்ள முடியும். மேலும் ஆடியோவின் வகையும் மாற்றிக் கொள்ளலாம். மேலும் அதிகப்படியான Output Settings இல் சென்று வீடியோவின் அளவு, பிட்ரேட் போன்ற அமைப்புகளையும் மேற்கொள்ளலாம்.


பல்வேறு இணையதளங்களிலிருந்து நமக்கு வேண்டிய வீடியோக்களைத் தரவிறக்கவும் கன்வர்ட் செய்யவும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த மென்பொருள்.

தரவிறக்கச்சுட்டி: http://www.kastorsoft.com/dl/setup_allvideodownloader.exe

நிரல்மொழிகளை ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் 4 இலவச தளங்கள்

கணிணி தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கும் பழகுபவர்களுக்கும் நிரலாக்கம் செய்து பழகுவது ஒரு ஆர்வமான விசயம் தான். இணையத்தில் ஏராளமான இணையதளங்கள் எப்படி நிரலாக்கம் செய்வது என்று அடிப்படை விசயங்கள் முதற்கொண்டு மென்பொருள்களை உருவாக்குவது வரை தகவல்களைக் கொண்டுள்ளன. நிரலாக்கம் பற்றிய செய்திகள், இலவச நிரல்மாதிரிகள், வழிமுறைகள் போன்றவற்றைக் கொடுத்து இலவசமாக செலவின்றி ஆன்லைனில் நிரலாக்கத்தைக் கற்றுத் தருகின்றன.

நீங்கள் சி++, ரூபி, பைத்தான், ஜாவா போன்ற நிரல்மொழிகளைக் கற்பதற்கு இந்த தளங்கள் உதவுகின்றன. எங்கேயாவது கணிப்பொறி பயிற்சி மையங்களில் அதிக பணத்தையும் கொடுத்து நேரத்தையும் செலவழித்துப் படிப்பதற்கு முன்னால் நிரலாக்கத்தின் அடிப்படை விசயங்களை கற்றுக்கொள்ள எளிதாக இவை உதவுகின்றன. இல்லை நீங்கள் மேம்பட்ட நிரலாளராக இருந்து புதிய நிரல்மொழிகளைக் கற்கவும் அதில் நன்றாகப் பயிற்சி எடுப்பதற்கும் இணையதளங்கள் உதவுகின்றன.

இதில் கணிப்பொறி பயிற்சி நிலையத்தில் முகம் பார்த்து சொல்லித்தருவது போல இல்லாவிட்டாலும் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கவும் உங்கள் நிரல்திட்டம்(Project) நிறைவேறாத நிலையில் இருப்பினும் இந்த தளங்களைக் கொண்டு சிறப்பாக செய்து முடிக்கலாம்.

1. UC Berkeley Webcast/courses


இத்தளம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிரல்மொழிக்கும் செய்திகள் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப் பட்டுள்ளன. இது ஒரு இலவசமான தளமாகும். இதில் ஒலி/ஒளி வடிவத்தில் அமைந்த பயிற்சிகளும் உள்ளன.

இணையதள முகவரி: http://webcast.berkeley.edu/courses.php

2. Mozilla’s School of webcraft.


இத்தளம் பயர்பாக்ஸ் உலவியை உருவாக்கிய மொசில்லா நிறுவனத்துடையது. இதில் HTML முதற்கொண்டு எல்லா நிரலாக்க மொழிகளுக்கும் பயிற்சியுண்டு. அனுபவம் இல்லாவிட்டாலும் சிறப்பாக கற்க முடியும்.

இணையதள முகவரி: http://p2pu.org/webcraft

3. Google code University.



இத்தளம் கூகிள் நிறுவனத்துடையது. இதில் CSS, AJAX, Web போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதில் சந்தேகங்களைக் கேட்க பாரம் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி: http://code.google.com/edu/introductory_courses.html

4. MIT Opencourseware



உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகம் இதை நடத்துகிறது. ஜாவா, சி++, பைத்தான் போன்ற கணிணி மொழிகளைக் கற்க கீழே கிளிக் செய்யவும்

இணையதள முகவரி: http://ocw.mit.edu/courses/electrical-engineering-and-computer-science/

July 18, 2011

ஜன்னலில் உருவத்தை பதித்த ஆந்தை

இங்கிலாந்தில் ஜன்னல் ஒன்றில் தனது உருவத்தை ஆந்தையொன்று பதித்துச் சென்றுள்ளது. பொதுவாக இவ்வாறான சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கும்ரியான் பிரதேசத்தைச் சேர்ந்த சாலே ஆர்னால்ட் என்ற பெண்ணின் வீட்டு ஜன்னலில் ஆந்தையின் உருவம் துல்லியமாக பதிவாகியுள்ளது. குறித்த ஆந்தை ஜன்னலில் பலமாக மோதியதன் காரணமாக அதன் உருவம்  ஜன்னலில் பதியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

ஆந்தையின், முகம், இறகுகள், கண்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த உருவமும் அதிசயமாக ஜன்னலில் பதிவாகியுள்ளது. பொதுவாக இவ்வாறு ஜன்னலில் வேகமாக மோதும் பறவைகள் உயிர் பிழைப்பது அரிது என்ற போதிலும், குறித்த பறவை உயிர் பிழைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.ஏனெனில், வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் ஆந்தையை தேடியதாகவும், ஆந்தை விழுந்து கிடப்பதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

தவானி இனத்தைச் சேர்ந்த ஆந்தையொன்றே இவ்வாறு மோதுண்டுள்ளதாக பிரித்தானிய பறவைப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பறவையின் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவலை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெட்டியா இருக்கிறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா?

காலையில் 9, 10 மணிக்கு தூக்கத்திலிருந்து எழும்ப வேண்டியது. கணிணியின் திரை பேஸ்புக், ருவிட்டர், ஜிமெயிலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியது. இடையில் டாய்லெட்டுக்கு மட்டும் அடித்துப்புரண்டு ஓடவேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையே 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு. கூடவே  மாலையில் உறங்க 2மணிநேரம். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. கணனி பிழைத்துவிட்டால் மட்டும் ஆறாவது அறிவுக்கு வேலை. கேட்டால் வெட்டி ஒபீசர் என்று பீத்திக்கொள்வது.


இப்படியெல்லாம் திட்டு வாங்கியிருக்கீங்களா? கவலை வேண்டாம். வெட்டியா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

காலை 9, 10 மணிக்கு எழுந்து காபி கூட குடிக்காம கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து கலைஞர் என்ன சொன்னாரு, கமல் என்ன சொன்னாரு, டாக்டர்(விஜய்..:P) என்ன சொன்னாரு, டாட்டா ஓனர் என்ன சொன்னாரு, ஏன் பில்கேட்ஸ் என்ன சொன்னாரு வரைக்கும் அத்தனையையும் பிங்கர் டிப்ஸ்ல வச்சுக்கிட்டு, அப்பிடியே கிறிக்கட் பக்கம் போய் யாருக்காவது மொக்கை போடலாமானடனு பாத்து சூதாட்டத்தில மாட்டிக்கிட்வனை தூக்கு மாட்டிக்கிற அளவுக்கு கமண்ட் அடிச்சு எல்லாரையும் சிரிக்க வச்சு, கஷ்டப்பட்டு யோசிச்சு மூளைய முழுசாப் பாவிச்சு மொக்கையா பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டச போட்டுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா எவனாச்சும் வந்து கமண்ட் அடிப்பான்.

உடனே அவன் மனசு நோகக்கூடாதுன்னு அவனுக்கும் ரிப்ளை பண்ணிட்டு ஆஃப்லைன்ன ஒன்லைன் போனா பத்து வருசத்துக்கு முன்னாடி படிச்ச பால்பாண்டி படக்குன்னு வந்து ஹாய் சொல்லுவான். சரி அவனையும் போர்மாலிட்டிக்கு விசாரிச்சு பழைய கதையெல்லாம் பேசி முடிச்சுப்பார்த்தா மணி 1.30 ஆகிரும்.எல்லாத்தையும் அப்பிடியே போட்டு 5 நிமிசம் செலவழிச்சு அரைகுறையா சாப்பிட்டு அடிச்சுப்புடிச்சு ஓடோடி வந்தா பால்பாண்டி பாசாகிப் போயிருப்பான். சரி என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது எவனாச்சும் வந்து

“பன்றிக்கு நன்றிசொல்லி குன்றின்மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை அது என்ன?..:”

அப்பிடின்னு ஒரு கேள்வியக்கேக்க கூகிள்ல தேடுதேடுன்னு தேடி விடையே கிடைக்காம இருக்கும் போது மறுபடியும் நம்ம அறிவைப் பாவிச்சு(நம்புங்கப்பா) கேள்விக்கு விடையக் கண்டுபிடிச்சுக்கொடுத்தா, THANKSன்னு சொல்லிட்டு ஒரு ஸ்மைலி போடுவான் பாருங்க அதுதாங்க சந்தோஷம்.:

இம்புட்டு வேலையையும் முடிச்சுட்டு பார்த்தா நேரம் 5 மணி ஆத்தாடி 5 மணியாகிரிச்சேன்னு ஒரு TEAயக்குடிச்சிட்டு மல்லாக்கபடுத்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அதுக்கப்புறம் 9 மணிக்கு ஒன்லைன் வந்து 2, 3 மணிவரைக்கும் அதே வேலைய செய்திட்டு ஒண்ணுமெ செய்யாத வெட்டிப்பயன்னு தன்னைத்தானே சொல்லிக்கிறான் பாருங்க, அந்தப்பெருந்தன்மை யாருக்கு வரும்.

 என்னைப்பார்த்து நீங்க இந்தப்பாட்ட பாடுறது புரியுது.. பட் இதுக்கெல்லாம் அழக்கூடாது..:






உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களை Yahoo வாசிக்கின்றது !

பாவனையாளர்களின் தனிப்பட்ட ஈமெயில்களை வாசிக்கும் வகையில் yahoo! தன்னுடைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியிருப்பதாக yahoo! மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

விளம்பர விற்னைக்காக பாவனையாளர்களது வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் ஈமெயில்களை ஆய்வதற்கு அதனுடைய சேவையில் பதிவு செய்ய பாவனையாளர்கள் இணக்கப்பாட்டை வழங்குகிறார்கள் என உலகின் மிகப்பெரிய ஈமெயில் வழங்குனர்கள் தெரிவிக்கிறார்கள்.

Consumer Watchdog  பேச்சாளரான ஜோர்ஜினா நெல்சன், இன்டர்நெட் பாவனையாளர்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல் இது என குறிப்பிட்டுள்ளார்.இலக்காக்கப்பட்ட விளம்பரதாரர்களால் தம்முடைய ஈமெயில்கள் திறந்து பார்க்கப்படுவது பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Yahoo!  வின் பேச்சாளர், Yahoo உள்விடயங்களை ஸ்கேன் செய்து ஆய்வு செய்து தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்புடைய தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களை அனுப்புகிறது.அதன்போது பாவனையாளர்களுக்கு spam மற்றும் மல்வெயார்களைக் கண்டுபிடித்து பாதுகாக்கும் வசதிகளையும் வழங்குகிறது என்றார்.Yahoo! Mail Beta வினை பாவிப்பதற்கு முன்னர் பாவனையாளர்கள் புதிய சேவைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட கொள்கைகள் அடங்கிய pop-up notice ஒன்றினை பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

myspace இன் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமா facebook ?

கூகுள் தற்போது கூகுள்+ என்னும் புதிய சேவையை ஆரம்பித்திருக்கிறது. அப்படியிருக்க பலரது கேள்வி,  MySpace  மற்றும் பேஸ்புக்கிற்கு என்ன ஆனது என்பது தான்.

 MySpace  இன் தவறுகளிலிருந்து பேஸ்புக் கற்றுக்கொண்டது

MySpace  புகழின் உச்சியிலிருந்து சரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவர்கள் பணத்திற்காகத் தமது சேவையைத் தியாகம் செய்தார்கள்.
இதன் காரணமாக பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. தொடர்பற்ற பாலியல் ரீதியான விளம்பரங்களால் பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் இதன் சேவை பயனற்றுப் போனது. இதேபோன்ற கருத்தினை மற்றவர்கள் பலரும் கூறத் தொடங்கினார்கள்.அவர்கள் தம்முடைய கட்டுப்பாட்டை விளம்பரதாரர்களிடம் இழந்தது தான் திருப்பு முனையாக அமைந்தது. இவர்களுடைய பணம் சேர்க்கும் திட்டம் மிகவும் மோசமானதாக அமைந்த காரணத்தினால் தான் இந்த சமூகத்தளம் பாதாளத்தில் தள்ளப்பட்டது.

இரண்டாவது காரணம் இவர்கள் தம்முடைய பாவனையாளர்களின் நலன் கருதி புதுமைகளைப் புகுத்தத் தவறிவிட்டார்கள்.மறுபக்கத்தில், பேஸ்புக் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியது. தம்முடைய பாவனையாளர்களின் நலன் கருதி அவர்கள் புதுமைகளை அதில் உள்வாங்கியதுடன் சேவைக்காகப் பணியாற்றினார்கள். தேவையான விளம்பரங்களை மட்டுமே இணைத்துக் கொண்டார்கள்.

தற்பொழுது கிட்டத்தட்ட 750 மில்லியன் மக்கள் தம்முடைய நேரத்தையும் சக்தியையும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செலவிடுகின்றார்கள். அவர்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு தம்முடைய வாழ்வை வளப்படுத்திக்கொள்ள பேஸ்புக் தான் சிறந்த வலைத்தளம் என தீர்மானித்திருக்கிறார்கள். இதேவேளை  MySpace  இல் பாவனiயாளர்கள் செலவிட்ட நேரத்தை விட பேஸ்புக்கில் இரண்டு மடங்கு அதிகமாக செலவிடுகின்றார்கள்.
ஒரு சராசரி நபர் ஒரு நாளில் 8 நிமிடங்களை பேஸ்புக்கில் தம்முடைய கணணியைப் பயன்படுத்தி செலவிடுகிறார்கள் எனவும் 12 நிமிடங்கள் வரை தம்முடைய தொலைபேசி மூலமாக பேஸ்புக்கைப் பார்வையிடுகிறார் எனவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

July 16, 2011

உலகின் விலை உயர்ந்த நகரம்

உலகின் மிக விலையுயர்ந்த நகரமான ஆபிரிக்காவில் உள்ள எஸ்பெட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அங்கோலாவின் தலைநகரான லுவான்டாவில் இந்நகரம் அமைந்துள்ளது.2011ஆம் ஆண்டின் மேர்சஸ் அறிக்கையின் படி எஸ்பெட் நகரம் விலையுயர்ந்த நகரமாக கணிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆலோசனை நிறுவனத்தின் சூத்திரம் கொண்டு பார்த்தால் இது உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. 

இரு பிரதான காரணிகளைக் கொண்டு இவ்வாறான தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாவதாக கடந்த வருடத்தின் இறுதியில் நாணய மாற்று விகிதத்தை கருத்தில் கொண்டு கணிப்பிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா டொலரின் பெறுமதிக்கு நிகராக உள்ளுர் நாணய பெறுமதி உயர்ந்ததால் இந்நிலை ஏற்பட்டது.அடுத்ததாக உள்ளுரில் விற்கப்படும் உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விலையானது பாரியளவில் அதிகரித்தமையும் இதற்கு காரணமாக அமைந்தது. அதாவது உலகின் முதற்தர சந்தையான நியுயோர்க்கின் சந்தையை விட பொருட்களின் விலை லுவாண்டாவில் அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
இவ்விரு காரணிகளுமே எஸ்பேட்டை விலையுயர் நகரமென நிர்ணயித்துள்ளது.

மேர்சஸ் அறிக்கையின் படி இந்த வருடத்தில் முதல் நிலை வகிக்கும் பத்து நகரங்கள்

1. லுவாண்டா – அங்கோலா
2. டோக்யோ – ஜப்பான்
3. என்ஜமேனா – சாட்
4. மொஸ்கோ – ரஸ்யா
5. ஜெனீவா – ஸ்வீட்சலாந்து
6. ஒசாகா – ஜப்பான்
7. சுவீஸ் – ஸ்வீட்சலாந்து
8. சிங்கப்பூர் – சிங்கப்பூர்
9. ஹொங்கொங் – சீனா
10. சாவோ போலோ – பிரேசில்

இதன்படி  லுவாண்டாவின் மூன்று முக்கிய காரணிகள் இந்த விடயம் பற்றி சிந்திக்க வழிவகுத்தது. விலையுயர்ந்த எண்ணெய், விலையுயர்ந்த வெளிநாட்டு வீடமைப்புகள் மற்றும் விலையுயர்ந்த இறக்குமதி பொருட்கள். அங்கோலா எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கிறது.ஆபிரிக்காவில் பெரியளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இதுவும் ஒன்று. இருந்தாலும் கூட எண்ணெய் விலை இங்கு அதிகமாகவே காணப்படுபடுகிறது.
 
அதேபோல இந்நாடு ஏழ்மையானது என கணிக்கப்பட்டாலும் அங்கு மக்களால் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் விலை கூடியதாகவே உள்ளது.
வாழ்வாதார முறை சிறிதெனினும் வாழ்க்கை முறை ஆடம்பரமாகவே உள்ளது. இதனால் கூடியளவு பொருட்கள் செல்வந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.அங்கோலாவின்  மக்கள் குடில் முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பெலும்பாலானோர் விரும்புவது வெளிநாட்டு வீடமைப்பு திட்டங்களையே. ஏனைய நாடுகளை விட இங்கு வாழ்க்கை முறை ஆடம்பரமாக உள்ளதால் விலையுயர் நாடாக கருதப்படுகிறது.

என் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் – கடாபி வீர உரை

லிபியாவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தை காப்பாற்றுவதற்காக உயிர் விடுவோம் என லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் முழங்கினார்.லிபியா பிரகா நகரம் எண்ணெய் வளம் மிக்கப்பகுதியாகும். இந்த எண்ணெய் வளம் மிக்க பகுதி மீது போராட்டக்காரர்களும் நேட்டோ படையினரும் வான்வழித், தரைவழி மற்றும் கடல்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும் லிபிய செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டினார்.எண்ணெய் வளத்தை காப்பாற்ற உயிர் துறப்போம். எண்ணெய் வளத்திற்காக உயிரை கொல்வோம் என்றும் அவர் எச்சரித்தார். லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக கர்னல் கடாபியின் ஆட்சி நடைபெறுகிறது.அவரது ஆட்சியை அகற்றி தேசிய மாற்ற கவுன்சில் ஆட்சியை கொண்டுவர மேற்கத்திய நாடுகள் முனைப்பு கொண்டு உள்ளனர். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என கடாபி முழங்கினார்.நாட்டின் மேற்கு பகுதியான அகிலாட்டில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி வீர உரை நிகழ்த்தினார். விசுவாசம் உள்ள உங்களை விட்டு என்னால் நகர முடியாது என்றார்.அவரது உரை லிபிய அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் மத்தியிலிருந்து போராட்டம் நடைபெறுகிறது.

ஹரி போட்டர் வீடு ஏலத்தில்



உலகப் பிரபல்யம் பெற்ற ஹரி போட்டர் நவால் ஆசிரியர் ஜே.கே. ரொவ்லிங்கின் வீடு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.ஹரி போட்டர் நாவலின் பாத்திரங்களுக்கு உயிரூட்டுவதற்கு ஓர் பாதிப்பை ஏற்படுத்திய வீடாக இந்த வீடு கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.பி.பி.சீ சர்வதேச ஊடகத்தின் தயாரிப்பாளர் ஜூலியன் மெர்சர், 1995ம் ஆண்டு ரொவ்லிங் குடும்பத்தாரிடமிருந்து இந்த வீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.ஹரி போட்டார் நாவலின் ஆசிரியர் ஜே.ரொவ்லிங் 9 வயது முதல் 18 வயது வரையில் இந்த வீட்டில் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.பிற்காலத்தில் ஏழு பிரபல நாவல்களும், எட்டு திரைப்படங்களும் உருவாவதற்கு இந்த வீட்டின் பாதிப்பு முக்கியமானது என கருதப்படுகின்றது.ஹரி போட்டர் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வீடுகளின் அமைப்பை, ரொவ்லிங்கின் வீட்டில் காண முடியும் என்பது விசேட அம்சமாகும்.

July 13, 2011

விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது

பூமியின் தென் முனையை நோக்கி மிக நெருங்கி வந்துக்கொண்டிருக்கும் விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.ஆபத்தான விண்கற்கள் ஏதேனும் பூமியை நெருங்குகிறதா என்பதை கண்காணிக்கும் மெக்சிகோவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இந்த விண்கல்ளை அவதானித்துள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த இந்த நிறுவம் கடந்த புதன் கிழமை விசேட தொலை நோக்கியின் துணையுடன் விண்கற்களை அவதானித்துள்ளது.
2011 எம் டி என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் நாளை பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 11 ஆயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு நெருங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேளையில் விண்கல் பிரகாசமாக தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மெக்சிகோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த அவதானிப்பை இங்கிலாந்தின் விண்வெளி ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய விண்வெளி ஓடமும் அமெரிக்க விண்வெளி ஓடமும் மோதும் அபாயம்

விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக்கோள் பாகம் மோதும் வாய்ப்புள்ளதால் அட்லாண்டிஸ் விண் ஓடத்துக்கு ஆபத்து எதுவும் ஏற்படும் நிலையுள்ளது.

அட்லாண்டிஸ் விண் ஓடத்தை அமெரிக்கா சமீபத்தில் விண்ணில் செலுத்தியது. இந்த விண் ஓடம் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டுவிட்டது. விண்நிலையத்தை உருவாக்குவதற்கான பாகங்களை 12வது முறையாக அட்லாண்டிஸ் எடுத்துச் செல்கிறது.

இந்நிலையில் 1970ம் ஆண்டு செலுத்தப்பட்டு இப்போது செயலிழந்து விண்ணில் மிதந்து கொண்டிருக்கின்ற ரஷிய செயற்கைக்கோளின் ஒரு பாகமானது அட்லாண்டிசும், சர்வதேச விண்வெளி நிலையமும் உள்ள இடத்துக்கு மிக நெருக்கமாகப் பறந்து வருவது தெரிய வந்திருக்கிறது. இதன் அளவு இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இது அட்லாண்டிஸில் அல்லது சர்வதேச விண்நிலையத்தில் மோதினால் அவற்றுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கக் கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர். அட்லாண்டிஸ் சர்வதேச விண்நிலையத்தின் அருகில் முக்கால் கிலோமீற்றர் சுற்றளவுக்குப் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை விண்வெளி வீரர்கள் பழுதடைந்துள்ள ஒரு பம்ப்பை சரி செய்ய விண் வெளியில் நடக்க இருக்கிறார்கள். அப்போது விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ரஷிய செயற்கைக்கோள் பாகம் இவர்களுக்கு மிக நெருக்கமாக மிதந்து வரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அது இவர்களை மோதுமா என்பது தெரியவில்லை.

அவசியம் ஏற்படுமேயானால் விண் ஓடத்தை உந்துசக்தி கொடுத்து சற்றே இடம்பெயரச் செய்யவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் விண்வெளி வீரர்களுக்கு ரஷிய செயற்கைக்கோளின் பாகம் இடைஞ்சலாக இருக்காது என்றே விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதனால் அவர்களுக்கு ஆபத்து எதுவும் நேராது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

பல்வேறு நாடுகளிலிருந்து பல ஆண்டுகளாக விண்வெளியில் பல செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவை காலாவதியான பின்னரும் தொடர்ந்து விண்ணில் மிதந்து வருகின்றன.

இதுபோல விண்ணில் மிதக்கும் 22 ஆயிரம் செயற்கைக்கோள் பாகங்களையும் பொருள்களையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மணிக்கு 17 ஆயிரம் கி.மீ வேகத்தில் விண் நிலையமும் அட்லாண்டிசும் பூமியைச் சுற்றி வருகின்றன. இந்த வேகத்தில் செல்லும் போது விண்ணிலுள்ள மிகச் சிறிய இரும்புத்துகள் கூட மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.
சர்வதேச விண்நிலையத்தில் இப்போது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 விண்வெளி வீரர்கள் உள்ளனர். இந்த விண்நிலையத்தின் பகுதிகள் ஒவ்வொன்றாக பூமியிலிருந்து பல முறை விண் ஓடங்களில் எடுத்துச் செல்லப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.

ஒசாமா பின்லாடனைப் பிடிக்க அமெரிக்க இராணுவம் நடத்திய நாடகம் அம்பலம்

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒளிந்திருந்தது பின்லேடன் தானா என்பதை கண்டறிய அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலக பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2ம் திகதி அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார்.  இந்நிலையில் ஒசாமா அபோதாபாத்தில் ஒளிந்திருப்பதை மேலும் உறுதி செய்ய அவரது குடும்பத்தினரின் டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை அந்த நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

அங்கிருந்தவர்கள் ரத்த மாதிரிகள் அந்த முகாமின் போது சேகரிக்கப்பட்டன.
இதற்காக பாகிஸ்தான் மருத்துவர் ஒருவரை அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது.  ஆனால் அந்த மருத்துவர் ஒசாமா தங்கியிருந்த வீட்டின் காம்பவுன்ட் சுவரை தாண்டி உள்ளே சென்ற போதும், ஒசாமா தங்கியிருந்ததை பார்க்கவோ அல்லது அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவோ முடியவில்லை என அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு நடத்த சீனா முடிவு

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா பின் தங்கியுள்ளது. எனவே அந்த துறையில் அமெரிக்கா அளவுக்கு முன்னேற சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கான பொருட்கள் மற்றும் கருவிகளை ராக்கெட் மூலம் கொண்டு செல்லும் பணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வருகிற 2013ம் ஆண்டில் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வு நடத்த சீனா முடிவு செய்துள்ளது. அதற்காக சீன அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது.

கனடாவில் சாதனை படைக்கும் Tamil Guys

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் ரொரன்ரோ மாநகரத்தை தளமாக கொண்டு இயங்குகின்றது Tamil Guys என்கிற அமைப்பு.

கனேடிய தமிழ் இளைஞர்கள் குழு ஒன்றினால் கடந்த 2010 ஆண்டு முதல் நடத்தப்படுகின்றது.பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது.உலகத் தமிழர்களை மட்டுமன்றி தமிழர்கள் அல்லாதோரையும் எப்போதும் மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தை இலட்சியமாகக் கொண்டு கமராவுடன் புறப்பட்டார்கள்.
இன்று பிரமாண்டமான வளர்ச்சி கண்டிருக்கின்றார்கள்.இவர்களின் முயற்சிகளுக்கு பேராதரவுகள் நிறையவே கிடைத்து வருகின்றன.

தமிழ் இளைஞர்களில் ஒரு சாரார் காடையர் குழு அமைத்து தெருச் சண்டித்தனங்களில் ஈடுபடுகின்றமை மூலம் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் மானத்தை கப்பல் ஏற்றிக் கொண்டு இருக்க Tamil Guys அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் உண்மையிலேயே நல்ல பாதை ஒன்றை தெரிவு செய்து முன்னோக்கிச் செல்கின்றனர் என்பது வெளிப்படை.இந்த இளைஞர்களின் அண்மைய வெளியீடுதான் Tamil Guys Season 2 Part 1.இதன் முன்னோட்டத்தை இரசிகர்களின் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளனர்.இந்த முன்னோட்டத்தையும், Tamil Guys ஆல் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் சிலவற்றையும் வாசகர்களுக்காக இணைக்கின்றோம்.


July 6, 2011

லண்டனில் சுற்றித் திரியும் வேற்றுகிரக வாசிகள்

வேற்றுகிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன.

வேற்றுகிரக வாசிகளுக்கு கமெரா கூச்சம் இல்லை என மக்கள் பரவலாக பேசத் துவங்கி உள்ளனர். ஏனெனில் லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.

தெளிவான நீல வானத்தில் பறந்த அந்த வினோதப் பொருட்களை பார்த்ததும் வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் தங்கள் கையில் இருந்த கைத்தொலைபேசி கமெராக்களில் அதை பதிவு செய்தனர். 




வேடிக்கையான சண்டைகள்

கோபம் வந்தால் மனிதர்கள் இடம், பொருள், அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். அப்படி அனைத்தையும் மறந்து இவர்கள் போடும் சண்டையைத் தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.



வினோதமான நடனம்

மக்களை மகிழ்விக்கும் நடனக்கலையை கற்றுக்கொள்ள பல கடினமான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடினமான பயிற்சிக்கு பின் உருவாகும் வித்தியாசமான நடனத்தை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.


பேசும் அற்புத அதிசயமான வளர்ப்பு மீன்!


உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஐரோப்பியாவில் பிரான்சில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்த அதிசயம் இடம் பெற்றுள்ளது .

இந்த வளர்ப்பு மீன் பற்றி இதன் பராமரிப்பாளர் பல திகைப்பூட்டும் விடயங்களை கூறுகிறார். இதன் பெயர் “சுச்சு“. இந்த மீன் அதிகமான நேரத்தில் வெளியில் தானிருக்குமாம். தண்ணீர் தொட்டியில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருப்பதை அதிகம் விரும்புகின்றது.

ஐஸ்கிரீம், லட்டு இவைகளே இதன் பிரதான உணவு என்பதாகவும், பாடல்களுக்கு நடனமடக் கூடியதாகவும், சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடியதாகவும் காணப்படுகிறது. இதன் பராமரிப்பாளர்கள் வெளியில் செல்லும் போது கூடவே செல்லப் பிராணி போல் கையில் எடுத்து செல்லுகிறார்கள்..