August 31, 2011

வைரத்தாலான கோள்கள் கண்டுபடிப்பு

வைரங்களாலான கோள்கள் உள்ளதென வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது முன்பொருகாலத்தில் பால்வழியில் பாரிய நட்சத்திரமாக இருந்திருக்கலாம் என்றும் தற்போது அது மிகவும் பெறுமதிமிக்க கோளாக மாறியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

40,000 மைல்கள் விட்டத்தைக் கொண்டு 5 மடங்கு பூமியின் விட்டத்தினைக் கொண்டும் அமைந்துள்ளது இந்தப் பளிங்காலான காபன் கோள்.சர்வதேச ஆய்வுக் குழுவினர் முதலில் வழமைக்குமாறான Pulsar வகை நட்சத்திரத்தினைத் தான் கண்டனர்.பின்னர் அதனைத் தொடர்ந்து ஒரு தொலைநோக்கியினூடாக ஆய்வு செய்ததில் அதனைச் சுற்றி சிறியதொரு கோள் ஈர்ப்பு விசையுடன் சுற்றி வந்ததைக் கண்டனர்.Pulsar வகை நட்சத்திரங்கள் 10 மைல் விட்டமே கொண்டிருப்பவையாகும். சிறியதொரு நகரத்தின் அளவிலேயே காணப்படும் இக்கோள்கள் வானொலி அலையை வெளிவிடுபவையாகும்.அவுஸ்திரேலியா, ஜேர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளது இந்த ஆய்வில் உண்மையான நட்சத்திரத்தின் எச்சங்களாக உள்ள இந்த வைரக்கோள்  Pulsar இனைச் 2 மணி 10 நிமிடங்களில் சுற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.நிமிடத்திற்கு 10,000 தடவைகள் சுற்றும் இக்கோள் சூரியனைவிடவும் 1.4 மடங்கு பெரியதாகவும் காணப்படுகின்றது.



வெடித்துச் சிதறியது ரஷ்ய விண்கலம்


விண்வெளிக்கு ஏவப்பட்ட சில நிமிடங்களில் ரஷ்ய விண்வெளி நிலைய வழங்கல் கலம் சைபிரியாவிற்குள் வெடித்துச் சிதறியது.இது அமெரிக்க விண்வெளிக்கல நிகழ்ச்சிநிரலினைக் கைவிடும் நிலைக்கு நாசாவையும் ஏனைய விண்வெளி நிறுவனங்களையும் தூண்டியுள்ளது.கசகிஸ்தானிலுள்ள Baikonur விண்வெளி நிலையத்தில் இpருந்து வழங்கல்களைக் கொண்டு செல்லத் தயாரானது இந்த சோயுஸ் றொக்கற். இந்த றொக்கெற் நாசாவின் இறுதி விண்வெளிக் கலத்தினை ஏவிய 1 மாதத்திற்குப் பின்னர் தோல்வியைத் தழுவியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் போதுமான வழங்கல்கள் இருந்தபோதும், அடுத்த தொகுதிக் குழுவினரை அனுப்பும் பயணத்தை இவ்விபத்துத் தாமதமாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது வழமையாக விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பும் றொக்கெற்றினை ஒத்தவகையினதே.அத்துடன் 6 விண்வெளி நிலையங்களில் மூன்றின் ஆட்கள் இன்னும் 2 வாரங்களில் வரவுள்ள நிலையில் அவர்களது தங்கலை இது இன்னும் நீடிக்கவும் செய்யலாம்.றொக்கெற் நன்றாகச் செயற்பட்டு அதன் மூன்றாம் கட்டத்தின் போது றொக்கற் இயந்திரத்தைச் செயற்படுத்த விடாமல் நிறுத்தி விட்டதுதான் விபத்திற்குக் காரணமாயிருந்தது.
ஜுலையில் மேற்கொள்ளப்பட்ட அட்லான்ரிஸ் விண்கலத்தின் பணியினால் விண்வெளி நிலையத்திற்கு ஒரு வருடத்திற்கான வழங்கல்கள் விட்டுவரப்பட்டுள்ளன.எனினும் விண்கலங்கள் இல்லாமல் வழங்கல்களைக் களஞ்சியப்படுத்த நாசா தற்போது ரஷ்யா, ஐரோப்பா மற்றும் யப்பானிடமும் மற்றும் தனியார் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடமும் தான் உதவி கோரியுள்ளது.

ரஷ்யா 3 தொன் வழங்கல்களை விபத்துக்குள்ளான விண்கலத்தில் அனுப்பியிருந்தது. அத்துடன் அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் மனிதர்களைக் கொண்டு செல்லக் கூடியவாறு வரும்வரை ரஷ்யாவே விண்வெளி வீரர்களை அனுப்பும், மீளக் கொண்டுவரும் பணிகளைச் செய்யும்.நாசாவும் அதன் சர்வதேச நண்பர்களும் 2020ஆம் வரை விண்வெளி நிலையத்தைப் பயன்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வேற்றுக்கிரகத்தவர் மீண்டும் தரையிறங்கிவிட்டார்களோ?

காலத்திற்குக் காலம் வேற்றுக்கிரகங்கள்பற்றியும் அங்கு வசிப்பவர்கள்பற்றியும் கதைகள் வந்தவண்ணந்தான் உள்ளன. அப்படியான வேற்றுக்கிரகவாசிகள் உண்மையிலேயே வாழ்கின்றார்களா?
சைபீரியாவைச் சேர்ந்த Irkutsk பிராந்தியத்திலுள்ள சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இந்தக் காட்சியினைப் பதிந்துள்ளனர். இதில் ஒரு வேற்றுக்கிரக விண்கலமும் 5 வேற்றுக்கிரகவாசிகள் பனிக்கூடாக நடந்துசெல்வதையும் பார்க்கக்கூடியவாறுள்ளது.ஓர் உருவம் விண்வெளிக் கலத்தின் எதிரேயும் ஏனைய 4 உருவங்களும் அக்கலத்திற்கு நேர் எதிராகவும் காணப்படுகின்றன. இவை காணப்படும் 2 நாட்களுக்கு முன்னர் அதிசய வெளிச்சங்கள் சைபீரிய வான்பகுதிகளில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இவை பதியப்பட்டு 2 நாட்களின் பின்னரும் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் இதனால் இராணுவத்தினர் ஏதாவது பயிற்சிகளைச் செய்கின்றார்களோவென மக்கள் விசாரித்தபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்றும் தெரியவந்தது.அத்துடன் இப்பதிவுகளைப் பதிந்தவர்கள் தாம் கண்டுபிடித்ததாகக் கூறிய வேற்றுக்கிரகவாசியின் சிதைந்த உடலமும் YouTube இல் ஏற்றப்பட்டிருந்தது.ஆனால், ரஷய உள்துறை அமைச்சினால் இந்த உடல் பரிசோதிக்கப்பட்டபோது அது வெறும் பாண்துண்டுகளாலும் கோழித்தோலினாலும் மூடப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இவர்கள் இருவரும் ஏதாவது குற்றம் செய்துள்ளார்களா என்றும் அதிகாரிகள் விசாரணைசெய்து வருகின்றார்கள்.


August 29, 2011

நாவாந்துறைத் தாக்குதலுக்கு பாவமன்னிப்பா? நல்லூரானுக்கு ஹெலியில் பூப்போட்ட ஹத்துருசிங்க

சில தினங்களுக்கு முன்னர் நாவாந்துறையில் தனது இராணுவ காடையர் குழுவைக் கொண்டு பொதுமக்கள் மீது காட்டுத் தாக்குதல் நடத்தி மீண்டும் ஒருமுறை சிங்கள வல்லாதிக்கத்துக்கு தமிழர்கள் என்றும் அடிமைகளே என்று நிரூபித்தார் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க.
யாழ்ப்பாணத்தில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடாத்தி வரும் மஹிந்த ஹத்துருசிங்க பாவமன்னிப்பு தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்து இரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த தமிழ்மக்களை இராணுவக் காடையர்கள் உடனடியாக மருத்துவமனையிலும் சேர்க்காமல் தடை விதித்து சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட துப்பாக்கிய நிலைமை யாவரும் அறிந்ததே.





 அதற்கு பிராயச் சித்தம் தேடும் முகமாக ஒருநாள் முன்னதாகவே அவசரப்பட்டு நல்லூர் கந்தனின் கந்தனின் தேர்த் திருவிழாவில் தனது அதே இராணுவ காடையர் குழுவைக் கொண்டு ஹெலி கொப்டரில் பூமாரி பொழிந்தார்.

 
ஆனால் ஒருநாள் முன்னதாகவே இன்றைய தினம் ஹெலியில் பூமாரி பொழிந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் உண்மையில் கடுப்பாகி தங்களுக்குள் பேசிக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.வழமையாக தீர்த்த உற்சவம் அன்று தீர்த்தக் கேணியில் பூமாரி பொழிவது தான் இந்த காடையர்களின் வழக்கம்.நாவாந்துறையில் தாக்கப்பட்டவர்களின் காயம் கூட ஆறாத நிலையில் பூமாரி பொழிந்து மக்களை என்ன ஏமாற்றுகிறார்களா? என்று கோபத்துடன் பேசிக் கொண்டனர்.முன்னர் குண்டுமழை பொழிந்து எத்தனை தமிழ் குடும்பங்களையே வேரோடு கருவறுத்தவர்கள் இப்பவும் அதே ஹெலியில் பூமழை பொழிவது மீளவும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற அவஸ்தையை ஏற்படுத்துகிறது.புலிகள் இல்லை என்ற நினைப்பில் நிராயுதபாணிகளாக உள்ள தமிழ் மக்களுடன் சண்டைபோட்டு உங்களின் வீர சாகசங்களை நிரூபிக்காதீர்கள்.இன்னமும் தங்களது இராணுவ வல்லாதிக்க அடக்கு முறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளாதவர்கள் எத்தனை ஹெலியில் வந்து பூப் போட்டாலும் பிரயோசனம் எதுவும் ஏற்படப் போவதில்லை.முதலில் தமிழர்களின் சொந்த மண்ணில் அவர்களை மரியாதையோடு நடத்துங்கள் அல்லது அந்த மண்ணை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்.. அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள்.


சதாம் வாழ்ந்த மாளிகை

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் குசெய்ன் வாழ்ந்த ஆடம்பர மாளிகைகளின் இன்றைய நிலையை காட்டுகின்ற படங்கள்.




















நெஞ்சை பதறவைக்கும் முட்டாள் இளைஞன்

சிலரது முட்டாள்தனாமான செயற்பாடுகளுக்கு இந்த வீடியோவும் ஒரு சிறந்த உதாரணம். ரயில் தண்டவாளத்தின் கீழ் படுக்கிறான் ஒரு இளைஞன்.. மேலாக ரயில் கட கட வென 10 விநாடிகள் பயணிக்கிறது… அந்த 10 விநாடிகளும் இளைஞனின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.. ஒரு நூலேனும் தலை அசைந்தால் சங்குதான்.  காமாரா முன் இந்த முட்டாள் தனமான விளையாட்டை மேற்கொள்ளுகிறான் இந்த இளைஞன். இதைப்பார்க்கும் போது பந்தயத்துக்காக சக நண்பர்கள் முன்னிலையில் செய்யப்பட்டதாகவே தெரிகிறது. இருந்தாலும் இதைப்பார்ப்பவர்கள் தயவுசெய்து இவ்வாறு முயற்சிக்க வேண்டாம்.


பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சியில் இளம்பெண் தீக்குளிப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சியில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் 27 வயதான செங்கொடி. இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது. 


21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.









August 28, 2011

போராட்டம் வெற்றி: உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

புதுதில்லி, ஆக.28, (டிஎன்எஸ்) தில்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த அன்னா ஹசாரே 288 மணிநேர உண்ணாவிரதத்துக்குப் பிறகு இன்று (ஆக.28) தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். இதை மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியாக அவரது ஆதரவாளர்கள் நாடுமுழுதும் கொண்டாடி வருகின்றனர் .அன்னா ஹசாரேவின் 3 முக்கிய கோரிக்கைகளை ஏற்பதாக நாடாளுமன்றம் நேற்று அறிவித்ததையடுத்து அவர் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஐந்து வயதுடைய சிறுமிகள் இருவர் ஹசாரேவுக்கு இளநீரும், தேனும் வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததனர்.உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, பொதுமக்கள் அளித்த ஆதரவுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதற்காக ஊடகத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தியவாதி அன்னாஹசாரே கடந்த 16-ந்தேதி உண்ணாவிரதம்  தொடங்கினார். அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் திரண்டு அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர். நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு அலை உருவானதையடுத்து மத்திய அரசு அன்னாஹசாரே  குழுவினருடன் பேச்சு நடத்தியது.  முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்  அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

அடுத்தக்கட்டமாக மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் மத்திய அரசுக்கும், அன்னாஹசாரே குழுவினருக்கும் இடையே பாலமாக செயல்பட்டு  பேச்சுவார்த்தை   நடத்தினார். அப்போது அன்னாஹசாரே 3 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அன்னா ஹசாரே கோரிக்கை குறித்து காங்கிரஸ் உயர்மட்ட  குழுவினருடனும் மத்திய அமைச்சர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரேயின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதற்கான உறுதி மொழி கடிதம் அன்னா ஹசாரேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதமரும் அன்னாஹசாரேயின் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து  அன்னாஹசாரே நேற்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது கோரிக்கைகளை ஏற்று பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவேன் என்று அன்னாஹசாரே திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் 12-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இதனால் அவரது  உடல் நிலை மோசமடைந்தது. இது மத்திய அரசுக்கும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திலும், மேல்- சபையிலும் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் தொடங்கியது.

இது ஒருபுறம் இருக்க மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். பின்னர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பேச்சு நடத்தினார். பாராளுமன்றத்தில் அன்னா ஹசாரேயின் 3 கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட சம்மதம்  தெரிவித்தார். நேற்று மாலை இந்த தகவல் பரவியதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாராளுமன்றத்தில் நீண்ட விவாதத்துக்கு பின் நேற்று இரவு 8 மணிக்கு ஹசாரேயின் 3 முக்கிய நிபந்தனைகளை ஏற்கும் தீர்மானத்தை நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கொண்டு வந்தார்.

ஆளும் கட்சியான காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் தீர்மானத்தை   ஏற்றுக்கொண்டன. எம்.பி.க்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. டெல்லி மேல்- சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மத்திய மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக், காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீட்சித் ஆகியோர் அன்னா ஹசாரேயை நேற்று இரவு சந்தித்து பாராளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானத்தின் நகலையும், பிரதமரின் கடிதத்தையும் அவரிடம் கொடுத்தனர்.

அதன்பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் அன்னா ஹசாரே பேசியதாவது:-

உங்கள்   அனைவரது அனுமதியுடன்  எனது உண்ணாவிரதத்தை நாளை (இன்று) காலை 10 மணிக்கு முடித்துக் கொள்கிறேன். இது ஜன்லோக்பாலுக்கு கிடைத்த பாதி வெற்றிதான். முழு வெற்றியை கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். எனது 3 கோரிக்கைகளை ஏற்று தீர்மானத்தை நிறை வேற்றிய  எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

இதை கேட்டதும்  ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் விண்ணை முட்டும் வண்ணம் கரகோஷமும், வாழ்த்து கோஷமும் எழுப்பி னார்கள். தேசிய கொடியை அசைத்தவாறு மைதானம் முழுவதும் கொண்டாடி னார்கள். இதேபோல் நாடு முழு வதும் அன்னாஹசாரே ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியதும் உடனடியாக அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வில்லை. ஏனென்றால் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட அவர் விரும்பவில்லை. இதனால் இன்று காலை 10 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ள  திட்டமிட்டார். இதையொட்டி இன்று காலை முதலே ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். மேடையில் அன்னா ஹசாரே காந்தி குல்லா அணிந்து இருந்தார்.

அவரை சுற்றிலும் காந்திகுல்லா அணிந்த சிறுவர்- சிறுமிகள் அமர்ந்து இருந்தனர். முதலில் அரவிந்த் கெக்ரிவால் கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அன்னா ஹசாரேயின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக மத்திய அரசுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு தில்லியில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 5 வயது தலித் சிறுமி சிம்ரன், முஸ்லிம் சிறுமி இக்ரா ஆகியோர் அன்னாஹசாரேக்கு தேன் கலந்த இளநீர் கொடுத்தனர்.

அதை வாங்கி குடித்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அப்போது அன்னா ஹசாரே வாழ்க என்று கோஷமிட்டனர். தேசபக்தி பாடல் இசைக்கப்பட்டது. அதை அன்னாஹசாரே கைதட்டி ரசித்தார். ஆதரவாளர்கள் மத்தியில் அன்னாஹசாரே நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் ராம்லீலா மைதானத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அரியானா மாநிலம் குர்கானில் உள்ள மேதந்தா மெடிசிட்டி   மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தது. அவரது உடல் உறுப்புகள் எந்த நிலையில் இருக்கிறது என்றும் பரிசோதனை செய்யப்பட்டது. 12 நாளில் அவரது உடல்  எடை 7 கிலோ குறைந்து 64 கிலோவாக இருக்கிறது.

சில நாட்கள் சிகிச்சைக்குப்பின் அவர் வீடு திரும்புவார் என்று அன்னாஹசாரே குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். அன்னாஹசாரே உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்ட அதே நேரத்தில் அவரது சொந்த ஊரான சித்தி கிராமத்திலும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள். மும்பை, பெங்களூர், ஆமதாபாத் உள்பட முக்கிய நகரங்களில் ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடினார்கள்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு? எதிர்ப்பு குரல் எழுப்ப பாரதிராஜா அழைப்பு

ஈழ தமிழர்கள் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் இயக்குனர் பாரதிராஜா அதன்பின் சில காலம் மவுன விரதம் மேற்கொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு பிறகு இறுக்கமான மவுனம் காத்து வந்த அவர், ஏதாவது விழாக்களில் கலந்து கொள்ள அழைத்தால் கூட, நான் அங்கு வந்து எதையும் பேச மாட்டேன். என்னை மேடை ஏற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்வார். அந்தளவுக்கு மனம் நொந்து போயிருந்த அவர், தற்போது பல காலம் கழித்து ஒரு பொது விஷயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். இன்று பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக சந்தித்தவர், தூக்கு தண்டனையை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளப்போகும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்காகவும் பேச ஆரம்பித்தார். 

இந்த துக்கு தண்டனை எதிர்த்து மாணவர்களும் பெற்றோர்களும், சமுதாயத்தின் பல்வேறு அங்கத்திலிருப்பவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பாரதிராஜா. தாமும் இதற்கான போராட்டத்தில் இறங்கவிருப்பதாக அப்போது அவர் கூறினார்.செப்டம்பர் 9 ந் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

August 27, 2011

நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

வரலாறு

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.

இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே

ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:

சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா

திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.


யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658 - 1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.


August 26, 2011

சாகச நிகழ்வு


நாம் இன்றுவரை எத்தனையோ சாகச நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இது போல்  சாகசத்தைப் பார்த்ததில்லை.



August 25, 2011

ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைக்க முடியுமா?

கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆம் உங்களாலும் இவ்வாறு ஐஸ்கட்டி மூலம் நெருப்பினை நிச்சயம் உருவாக்கி கொள்ள முடியும். நம்பமுடியவில்லையாயின் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் காணொளி உதவியுடன்.


Engeyum Kadhal 720p 5.1 Video Songs - Blu Ray

FACEBOOKன் பழைய CHAT WINDOW பெறுவது எப்படி?

பேஸ்புக்கின் புதிய chat window லிருந்து  பழைய chat window ற்க்கு எப்படி மாறுவது என்று பார்ப்போமா? ஒன்றுமில்லை பழைய ஜாவா ஸ்கிரிப்டை நீக்கிவிட்டு புதிய ஜாவா ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்தால் போதும்.


எப்படி இன்ஸ்டால் செய்வது, ஏதேனும் வழி இருக்கிறதா?
இருக்கிறது. GREASE MONKEY எனும் ஆட்-ஆன் இதற்காக உதவுகிறது. பழைய விண்டோவிற்க்கு மாறுவதற்க்கு கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

FireFox உபயோகிப்பவர்கள்

1. GREASE MONKEY ஆட்-ஆனை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும் 
2.ஆட்-ஆனை இன்ஸ்டால் செய்தவுடன், ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.
3.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

Chrome உபயோகிப்பவர்கள்
இதுவும் கிட்டத்தட்ட பயர்பாக்ஸிற்க்கான அதே வழிமுறைதான்

1.ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.
2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.
அல்லது
1.இந்த லிங்கை அழுத்தி குரோம் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.


 பழைய விண்டோவிற்க்கு மாறி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

August 24, 2011

விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, “மதராசபட்டினம்” புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு “யோஹன் அத்தியாயம் ஒன்று” என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள ந‌ிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.

தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

மீண்டும் கைமாறியது மங்காத்தா : சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றது

வழக்குகள், கைதுகள் தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.

தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார்.மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி.மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது.

August 19, 2011

கனேடிய வீரர்களை பெருமைப்படுத்தும் ஓவிய அஞ்சலி

ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள சர்வதேச ராணுவ வீரர்களில் கனடா ராணுவ வீரர்களும் உள்ளனர். கனடாவின் பெருமையை நிலைநாட்ட கனடா வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த பாதுகாப்புப் பணியின் போது அயல்நாடுகளில் 156 கனடா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கனை நினைவு கூரும் வகையில் ஓவியக்கலைஞர் தேவ் சோபா 2 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் மரணம் அடைந்த கனடா வீரர்களின் ஓவியங்களை வரையத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தான் போரில் மரணம் அடைந்த விரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஓவியம் குறித்து மனம் நெகிழ்ந்து உள்ளனர். வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம் என அவர்கள் கூறினர் என தேவ் சோபா கூறினார்.

இந்த ஓவியங்கள் போரில் மரணம் அடைந்த வீரர்களை என்றும் அழியாதவர்களாக மாற்றி உள்ளது என 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வீரரின் பெற்றோர் கூறினர். இந்த ஓவியங்களை தவிர சாஸ்க்டுன் விமான நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் முதல் இதுவரை உயிர் நீத்த 1 லட்சத்து 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூறும் பாப்பி தாவரங்கள் இடம் பெறுகின்றன.