August 28, 2011

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு? எதிர்ப்பு குரல் எழுப்ப பாரதிராஜா அழைப்பு

ஈழ தமிழர்கள் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் இயக்குனர் பாரதிராஜா அதன்பின் சில காலம் மவுன விரதம் மேற்கொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு பிறகு இறுக்கமான மவுனம் காத்து வந்த அவர், ஏதாவது விழாக்களில் கலந்து கொள்ள அழைத்தால் கூட, நான் அங்கு வந்து எதையும் பேச மாட்டேன். என்னை மேடை ஏற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்வார். அந்தளவுக்கு மனம் நொந்து போயிருந்த அவர், தற்போது பல காலம் கழித்து ஒரு பொது விஷயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். இன்று பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக சந்தித்தவர், தூக்கு தண்டனையை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளப்போகும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்காகவும் பேச ஆரம்பித்தார். 

இந்த துக்கு தண்டனை எதிர்த்து மாணவர்களும் பெற்றோர்களும், சமுதாயத்தின் பல்வேறு அங்கத்திலிருப்பவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பாரதிராஜா. தாமும் இதற்கான போராட்டத்தில் இறங்கவிருப்பதாக அப்போது அவர் கூறினார்.செப்டம்பர் 9 ந் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

August 27, 2011

நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

வரலாறு

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.

இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே

ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:

சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா

திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.
முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.


யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658 - 1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.


August 26, 2011

சாகச நிகழ்வு


நாம் இன்றுவரை எத்தனையோ சாகச நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இது போல்  சாகசத்தைப் பார்த்ததில்லை.



August 25, 2011

ஐஸ்கட்டியில் இருந்து நெருப்பு வரவழைக்க முடியுமா?

கற்கால மனிதன் தமது நெருப்புத்தேவைகளுக்காக கற்களை கற்களோடு உராய்வதன் மூலம் தீயை உண்டாக்கி தனது தேவைகளை நிறைவேற்றினான் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் ஐஸ்கட்டி மூலம் நெருப்பு உண்டாக்க முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? உருவாக்க முடியும் என நிருபித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆம் உங்களாலும் இவ்வாறு ஐஸ்கட்டி மூலம் நெருப்பினை நிச்சயம் உருவாக்கி கொள்ள முடியும். நம்பமுடியவில்லையாயின் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் காணொளி உதவியுடன்.


Engeyum Kadhal 720p 5.1 Video Songs - Blu Ray

FACEBOOKன் பழைய CHAT WINDOW பெறுவது எப்படி?

பேஸ்புக்கின் புதிய chat window லிருந்து  பழைய chat window ற்க்கு எப்படி மாறுவது என்று பார்ப்போமா? ஒன்றுமில்லை பழைய ஜாவா ஸ்கிரிப்டை நீக்கிவிட்டு புதிய ஜாவா ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்தால் போதும்.


எப்படி இன்ஸ்டால் செய்வது, ஏதேனும் வழி இருக்கிறதா?
இருக்கிறது. GREASE MONKEY எனும் ஆட்-ஆன் இதற்காக உதவுகிறது. பழைய விண்டோவிற்க்கு மாறுவதற்க்கு கீழ்காணும் வழிமுறையைப் பின்பற்றுங்கள்.

FireFox உபயோகிப்பவர்கள்

1. GREASE MONKEY ஆட்-ஆனை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும் 
2.ஆட்-ஆனை இன்ஸ்டால் செய்தவுடன், ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.
3.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.

Chrome உபயோகிப்பவர்கள்
இதுவும் கிட்டத்தட்ட பயர்பாக்ஸிற்க்கான அதே வழிமுறைதான்

1.ஜாவா ஸ்கிரிப்டை இங்கிருந்து இன்ஸ்டால் செய்யவும்.
2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.
அல்லது
1.இந்த லிங்கை அழுத்தி குரோம் எக்ஸ்டென்சனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
2.இப்போது பேஜை refresh செய்யுங்கள்.


 பழைய விண்டோவிற்க்கு மாறி இருப்பீர்கள் என நம்புகிறேன்.

August 24, 2011

விஜய்யின் யோஹன் அத்தியாயம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் எமி ஜாக்சன்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக, “மதராசபட்டினம்” புகழ் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய், அடுத்து கவுதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்தபடத்திற்கு “யோஹன் அத்தியாயம் ஒன்று” என்று பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தின் சூட்டிங் 2012ம் ஆண்டு துவங்க இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள ந‌ிலையில், கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு, மதராசபட்டினம் படத்தில் நடித்த எமி ஜாக்சனை நடிக்க வைக்க இயக்குநர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம்.

தற்போது எமி ஜாக்சன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்து வருகிறார். இந்தபடத்தை முடித்தை பின்னர் விஜய் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

மீண்டும் கைமாறியது மங்காத்தா : சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகின்றது

வழக்குகள், கைதுகள் தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ்.
இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம்.

தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார்.மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி.மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார்.
வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது.

August 19, 2011

கனேடிய வீரர்களை பெருமைப்படுத்தும் ஓவிய அஞ்சலி

ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள சர்வதேச ராணுவ வீரர்களில் கனடா ராணுவ வீரர்களும் உள்ளனர். கனடாவின் பெருமையை நிலைநாட்ட கனடா வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த பாதுகாப்புப் பணியின் போது அயல்நாடுகளில் 156 கனடா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கனை நினைவு கூரும் வகையில் ஓவியக்கலைஞர் தேவ் சோபா 2 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் மரணம் அடைந்த கனடா வீரர்களின் ஓவியங்களை வரையத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தான் போரில் மரணம் அடைந்த விரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஓவியம் குறித்து மனம் நெகிழ்ந்து உள்ளனர். வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம் என அவர்கள் கூறினர் என தேவ் சோபா கூறினார்.

இந்த ஓவியங்கள் போரில் மரணம் அடைந்த வீரர்களை என்றும் அழியாதவர்களாக மாற்றி உள்ளது என 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வீரரின் பெற்றோர் கூறினர். இந்த ஓவியங்களை தவிர சாஸ்க்டுன் விமான நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் முதல் இதுவரை உயிர் நீத்த 1 லட்சத்து 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூறும் பாப்பி தாவரங்கள் இடம் பெறுகின்றன.