Showing posts with label jaffna win. Show all posts
Showing posts with label jaffna win. Show all posts

May 29, 2011

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு அங்கு சிறுநீரக ஆபரேஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக நேற்று (27ம்‌தேதி) இரவு விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார்.

ராணா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மே 18ல் அவரது உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அல்ட்ரா பில்ட்ரேஷன், ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரத்தத்தில் இருந்த "கிரியேட்டின் அளவு குறையத் துவங்கியது. இதையடுத்து, உடல்நலம் தேறிய அவர், மீண்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். பார்வையாளர்கள் அவரை சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தனி வார்டில் இருந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையை, அமெரிக்க நிபுணர்கள் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

ரஜினியின் நுரையீரலில் அழுத்தமாக படிந்துள்ள நீர்கோப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றுக்கு சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நவீன முறையில் சிகிச்சை அளிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று இரவு 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், ரஜினி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும் சென்றனர். ரஜினி இருந்த ஆம்புலன்ஸ் வேன், விமானம் வரை செல்ல முதல்வர் ஜெயலலிதா சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்ததால் விமானம் வரை ஆம்புலன்ஸ் சென்றது.

பின்னர் ரஜினி மருத்துவ குழுவினரின் உதவியுடன் விமானத்தில் ஏற்றப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் ரஜினி சில வாரங்களுக்கு தங்கி சிகிச்சை எடுப்பார் என்றும், அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி வாய்ஸ் : முன்னதாக ரஜினியின் வாய்ஸ் அடங்கிய சிடி ஒன்றை பத்திரிகையாளர்களுக்கு அவரது மகள் ஐஸ்வர்யா அனுப்பி வைத்தார். அதில் பேசிய ரஜினி, நான் உங்க ரஜினிகாந்த் பேசுறேன். நான் நல்லா இருக்கேன்.

யாரும் கவலைப்படாதீங்க. நான் பணம் வாங்குறேன். நடிக்குறேன். அதுக்கு நீங்க என் மேல இவ்ளோ அன்பு செலுத்துறீங்க. உங்களுடைய பிரார்த்தனை, அன்புக்கு கைமாறா என்ன செய்வேன்னு, செய்யப்போறேன்னு தெரியல.

என் பேன்ஸ் எல்லாரும் கடவுள் ரூபத்தில் இருக்குறதா நினைக்கிறேன். உங்க பிரார்த்தனையால சிங்கப்பூர் போயிட்டு நான் சீக்கிரமே, நல்லபடியா திரும்ப வந்து உங்களையெல்லாம் சந்திக்குறேன். உங்க அன்பால தலைநிமிந்து நிற்பேன், என்று கூறியுள்ளார்.

ரஜனியைக் காணாமல் துடித்தார் கமல்


திரையில்தான் அவர்கள் இருவரும் போட்டியாளர்கள். நிஜத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகளைத் தாண்டிய நண்பர்கள். தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்கள். இந்திய சினிமாவுக்கு புதிய கவுரவம் தந்த சாதனையாளர்கள்.

பெயர்களைச் சொல்வதில் கூட இவர்களை பிரித்து உச்சரிக்க முடியாது... இவர் பெயரைச் சொன்னால், கூடவே அவர் பெயரும் தன்னிச்சையாக வரும்... அந்தப் பெயர்கள் ரஜினி - கமல்!

கடந்த ஒரு மாத காலமாக ரஜினி மருத்துவனையில் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார். அவரைக் காண அத்தனை விவிஐபிக்களும் காத்திருக்கிறார்கள். ஆனால் அனுமதிதான் கிடைத்தபாடில்லை. வெளியிலிருந்து நோய்க் கிருமிகள் ரஜினியைத் தாக்கக் கூடும் என்பதால் சிறப்பு வார்டில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.

மனைவி, மகள்கள், மருமகன் தவிர வேறு யாரும் ரஜினியைப் பார்க்க முடியவில்லை. ஒரு காலத்தில் ரஜினியின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்து, பின்னர் ரஜினி வழியில் நடிகராகி, இன்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ள விஜயகாந்த் கூட ரஜினியை நேரில் சந்திக்க முடியாத நிலை.

ஐசியுவிலிருந்த ரஜினியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு வந்து, "அண்ணன் ரஜினி நலமுடன் இருக்கிறார். திரும்ப பழையபடி வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று உருக்கத்துடன் கூறினார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரால் ரஜினியை பார்க்கக் கூட முடியவில்லை. எனவே அவர் ராகவேந்திரர் கோயிலில் ரஜினிக்காக பிரார்த்தனை செய்து, மக்களுக்கு தன் கையால் அன்னதானம் செய்தார். "இன்றைய சினிமாவில் அனைவருமே ரஜினிக்கு ரசிகர்கள்தான். பிறகுதான் நடிகர்கள். எங்கள் அன்புக்குரிய ரஜினி விரைந்து நலம்பெற்று வரவேண்டும்," என்றார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அனைவரும் எழுப்பிய கேள்வி, "கமல் சார் ஏன் இன்னும் பார்க்கவில்லை. அவரை விட உரிமையுள்ளவர் யார் இருக்கிறார்கள்...?" என்றே கேட்டு வந்தனர்.

உண்மையில் ரஜினியைக் காண மூன்றுமுறை கமல் முயற்சித்துள்ளார். ஆனால் அவர் ஒவ்வொரு முறை பார்க்க முயன்றபோதும், ரஜினி தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லது டயாலிஸிஸ் சிகிச்சையில் இருந்ததால், பார்க்க முடியவில்லையாம்.

ரஜினியைப் பார்த்தாக வேண்டும் என லதா மற்றும் ஐஸ்வர்யாவிடம் அவர் சார்பில் கேட்கப்பட்டபோது, இப்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைள் காரணமாக நாங்களே அவரைப் பார்க்க முடியாத நிலை உள்ளது. எனவே மருத்துவர்கள் அனுமதி அளித்ததும் உங்களுக்கு உடனே சொல்கிறோம்," என்று மிகுந்த தயக்கத்துடன் கூறியுள்ளனர்.

'பக்கத்திலிருந்தும் என் நண்பன் ரஜினியைப் பார்க்க முடியவில்லையே... அவரைச் சந்திக்கும் சூழலை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுங்கள்', என தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் கலைஞானி.

கமல் 50 என்ற பெயரில் விஜய் டிவி விழா கொண்டாடியபோது, முதல் ஆளாய் அதில் கலந்து கொண்டு கடைசி ஆளாய் வெளியேறி நட்புக்கு மரியாதை செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

விழாவில் தன்னைப் பற்றி ரஜினி பேசியதைக் கேட்டு கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்ட கமல், அவரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டார். "எவன் சொல்வான் இந்த மாதிரியெல்லாம்... ரஜினி என் உண்மையான நண்பன்... பெருந்தன்மைக்கு சொந்தக்காரர்" என்றெல்லாம் கமல் புகழ்ந்தது நினைவிருக்கலாம்.