August 19, 2011

கனேடிய வீரர்களை பெருமைப்படுத்தும் ஓவிய அஞ்சலி

ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. போரால் உருக்குலைந்து போன இந்த தேசத்தின் கட்டமைப்பை மேம்படுத்தவும், அமைதி ஏற்படுத்தவும் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள சர்வதேச ராணுவ வீரர்களில் கனடா ராணுவ வீரர்களும் உள்ளனர். கனடாவின் பெருமையை நிலைநாட்ட கனடா வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த பாதுகாப்புப் பணியின் போது அயல்நாடுகளில் 156 கனடா வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கனை நினைவு கூரும் வகையில் ஓவியக்கலைஞர் தேவ் சோபா 2 ஆண்டுகளுக்கு முன்னர் போரில் மரணம் அடைந்த கனடா வீரர்களின் ஓவியங்களை வரையத் துவங்கினார்.
ஆப்கானிஸ்தான் போரில் மரணம் அடைந்த விரர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ஓவியம் குறித்து மனம் நெகிழ்ந்து உள்ளனர். வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் மிக்கவர்களாக இருப்போம் என அவர்கள் கூறினர் என தேவ் சோபா கூறினார்.

இந்த ஓவியங்கள் போரில் மரணம் அடைந்த வீரர்களை என்றும் அழியாதவர்களாக மாற்றி உள்ளது என 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்ட வீரரின் பெற்றோர் கூறினர். இந்த ஓவியங்களை தவிர சாஸ்க்டுன் விமான நிகழ்ச்சியில் முதல் உலகப் போர் முதல் இதுவரை உயிர் நீத்த 1 லட்சத்து 10 ஆயிரம் வீரர்களை நினைவு கூறும் பாப்பி தாவரங்கள் இடம் பெறுகின்றன.

No comments:

Post a Comment