August 28, 2011

சாந்தன், முருகன், பேரறிவாளன் தூக்கு? எதிர்ப்பு குரல் எழுப்ப பாரதிராஜா அழைப்பு

ஈழ தமிழர்கள் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வரும் இயக்குனர் பாரதிராஜா அதன்பின் சில காலம் மவுன விரதம் மேற்கொண்டிருந்தார். முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு பிறகு இறுக்கமான மவுனம் காத்து வந்த அவர், ஏதாவது விழாக்களில் கலந்து கொள்ள அழைத்தால் கூட, நான் அங்கு வந்து எதையும் பேச மாட்டேன். என்னை மேடை ஏற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்வார். அந்தளவுக்கு மனம் நொந்து போயிருந்த அவர், தற்போது பல காலம் கழித்து ஒரு பொது விஷயத்திற்காக குரல் கொடுத்திருக்கிறார். இன்று பத்திரிகையாளர்களை அவசரம் அவசரமாக சந்தித்தவர், தூக்கு தண்டனையை எந்த நேரத்திலும் எதிர்கொள்ளப்போகும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்காகவும் பேச ஆரம்பித்தார். 

இந்த துக்கு தண்டனை எதிர்த்து மாணவர்களும் பெற்றோர்களும், சமுதாயத்தின் பல்வேறு அங்கத்திலிருப்பவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பாரதிராஜா. தாமும் இதற்கான போராட்டத்தில் இறங்கவிருப்பதாக அப்போது அவர் கூறினார்.செப்டம்பர் 9 ந் தேதி இவர்கள் மூவரும் தூக்கிலிடப்படுவார்கள் என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment