June 24, 2011

Autorun.inf வைரஸ்களை நீக்க அருமையான மென்பொருள் Autorun Eater

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?


இந்த வகையான கோப்புகள் சில வன்பொருள்கள் அல்லது மென்பொருள்கள் போட்டவுடனே தானாகவே இயங்குவதற்காக எழுதப்படும் டெக்ஸ்ட் வகையான அமைப்புகளைக் கொண்டவை. இந்த கோப்புகள் எந்த கோப்பை முதலில் இயக்க வேண்டும், எந்த ஐகானைக் காட்ட வேண்டும் போன்றவற்றை இயங்குதளத்திற்குத் தெரிவிக்க உதவுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு சிடியைப் போட்டவுடன் எந்த கோப்பை முதலில் இயக்க வேண்டும், சிடி டிரைவில் எந்த ஐகானைக் காட்ட வேண்டும் என்ற அமைப்புகளைக் கணிணிக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வகையான கோப்புகளை சில நேரம் மால்வேர்கள் எனப்படும் வைரஸ்களும் உருவாக்கி கணிணியைப் பாதிக்கின்றன.
பென் டிரைவ் போன்ற சாதனங்களில் ஒவ்வொரு வகையான மால்வேர்கள் இந்த மாதிரி ஆட்டோரன் கோப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன. அதனை கணிணியில் இணைக்கும் போது அவை கணிணியில் பரவி கணிணியைப் பாதிப்படையச் செய்கின்றன. தற்போது இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் பெரும்பாலானவை இந்த மாதிரி மால்வேர்கள் உருவாக்கும் ஆட்டோரன் வைரஸ்களை கண்டறிய முடியாமலே இருக்கின்றன.
இதற்கென இருக்கும் ஒரு மென்பொருள் தான் AutorunEater. இது ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் கிடையாது. கனிணியில் எப்போதும் சோதனை செய்து சந்தேகப்படும் படியான ஆட்டோரன் வைரஸ்களைக் கண்காணித்து அழிக்கிறது. மேலும் புதிதாக இவை உருவாகாத மாதிரியும் தடுக்கிறது. ஆண்டிவைரஸ் மென்பொருளால் கண்டுபிடிக்காத முடியாத ஆட்டோரன் வைரஸ்களை எளிதாக அழிக்கும் மென்பொருளாகும். இதனை நிறுவியதும் கணிணியின் டாஸ்க் பாரில் அமர்ந்து கொள்ளும்.


இதன் மூலம் பிளாப்பி டிஸ்குகளையும் கண்காணிக்க முடியும். இதன் சிறப்பான விசயம் எந்தவொரு டிரைவும் தானாக இயங்குவதை நிறுத்தி வைக்க முடியும். இதற்கு இந்த மென்பொருளை வலது கிளிக் செய்து வரும் மெனுவில் Close Autoplay என்பதை எனேபிள் செய்தாலே போதுமானது. இதனால் தவறான மால்வேர்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.ஏதெனும் மால்வேர் வைரஸ் தென்பட்டால் உங்களிடம் அலாரம் மாதிரி காட்டி விடுகிறது. அதனை நீங்கள் Delete கொடுத்து அழித்து விடலாம். அதிகமாக சிடி/டிவிடி மற்றும் பென் டிரைவ்களைப் பயன்படுத்துவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
தரவிறக்கச்சுட்டி: http://download.cnet.com/Autorun-Eater/3000-2239_4-10752777.html?tag=mncol;1

No comments:

Post a Comment