June 24, 2011

சிச்சென் இட்சா

சிச்சென் இட்சா  என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான்  என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும். இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.அமெரிக்க தொல்பொருளாய்வியல் கூட்டமைப்பின் கருத்தின்படி சிச்சென் இட்சாவிலுள்ள சிதைவுகள் அரசாங்கச் சொத்து. எனினும் சிதைவுகள் காணப்படும் இடமானது 'பிஸ்டெ' நகர மக்காளின் கூட்டுரிமையும் பார்பசனோஸ்ரது (19-ஆம் நூற்றாண்டுதொட்டு யுகட்டான் நகரின் மிகத்திறம்படைத்த குடும்பளில் ஒன்று) தனிப்பட்ட உரிமையும் சேர்ந்த உரிமையுள்ள இடமாக கருதப்படுகிறது.


No comments:

Post a Comment