June 27, 2011

அபாயகரமான விலங்குகள்

அழிந்து போன அபாயகரமான இந்த விலங்குகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நமக்கு இல்லை. ஆனால், அந்த அபாயகரமான விலங்குகள் எவை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

1. பொருஷ்ரசிட்ஸ்



இதற்கு டெர்ரர் பேர்ட்ஸ் (பயங்கர பறவைகள்) என்ற பெயரும் உண்டு. இதன் உயரம் 10 அடி, எடை 500 கிலோகிராம்கள் வரை இருக்கும். ஒரே தடவையில் ஒரு நாயை விழுங்கிவிடக் கூடியது. இந்த உயிரினங்களுடன் தொடர்புடைய விலங்கினமாக தற்போது கருதப்படுவது 80 சென்டிமீட்டர் உயரமுள்ள செரிமாஸ். இவை வட அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மற்றும் ப்ளோரிடாப் பகுதிகளில் காணப்படுகின்றன.


2. மெகலோடன்


மெகலோடன் 40 அடி நீளமுள்ள பழங்காலத்தில் வாழ்ந்த சுறாமீன். சில விஞ்ஞானிகள் இதன் நீளம் 50 அடி முதல் 100 அடி வரை இருந்திருக்கக்கூடும் என தெரிவிக்கின்றனர். மிகப்பெரிய வெள்ளை சுறாமீனைப் போன்று இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமானது. புதைந்து கிடந்து எடுக்கப்பட்ட மெகலோடனின் பற்கள் மற்றும் முதுகெலும்பைக் கொண்டு தான் இதன் நீளம் கணக்கிடப்பட்டுள்ளது.


இதனுடைய மிகப்பெரிய பற்களின் நீளம் ஒரு மனிதனின் கையினுடைய நீளத்திற்கு இணையானது. இந்த சுறாமீனுடைய வேறு எந்த உடற்பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இது எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகிக்க மட்டுமே எம்மால் முடிகிறது. மிகப்பெரிய வெள்ளை சுறா மீனின் பற்களைப் போன்று ஆனால் அதைவிட சற்று பெரிதாகவும் தடிப்பாகவும் உள்ள மெகலோடன் சுறா மீன் இருப்பதை வைத்துத்தான் இதன் வடிவம் வெள்ளை சுறாமீன் போன்று இருக்கக்கூடும் என ஊகிக்கப்பட்டது.

3. ஸ்மிலோடன்



அழிந்துபோன மெகய்ரோடோன்ரின் இனத்தைச் சேர்ந்த இந்த ஸ்மிலோடோன் சப்ரே-பற்கள் பூனை என்றும் அழைக்கப்பட்டது. இவை 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஓர் உயிரினம். இந்த ஸ்மிலோடன் காட்டு எருமை, மான், அமெரிக்க ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் தேவாங்குகள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளக் கூடியவை. இவை அந்தக் காலத்து மனிதர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நெச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் இவற்றின் முழு எலும்புக்கூடும் வைக்கப்பட்டுள்ளது.


4. எஸ்டெமெனோசக்கஸ்


பெர்மியன் காலத்தில் வாழ்ந்த ஒம்னிவோரஸ் தெரப்சைட் இனத்தைச் சேர்ந்த இந்த எஸ்டெமெனோசக்கஸ் மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றாகக் கணக்கிடப்படுகிறது. அதிக உடல் வெப்பத்தை பராமரிப்பதற்காக பாலூட்டிகளைப் போன்றே இவையும் வெதுவெதுப்பான இரத்தத்தைக் கொண்டிருக்கலாம்.


5. ப்டெரோசார்


டைனோசர் காலத்தில் வாழ்ந்த இந்த பறக்கும் ஊர்வன வகை ப்டெரோசார்கள் ஒரு சில அங்குலங்கள் முதல் 40 அடி வரையும் உயரமுள்ளதாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. இவை கூனல் முதுகெலும்புடைய சிறிய உடலைக் கொண்டவை. இவற்றிற்கு புத்திக்கூர்மையும் நல்ல கண் பார்வையும் உண்டு.


சிலவற்றில் உடலில் முடிகள் காணப்பட்டன. சில குறைந்த உடல் எடை கொண்டவை. இவற்றில் தலையில் உச்சிக்கொண்டை போன்ற அமைப்பு காணப்பட்டதுடன் இவை பறக்கின்றபோது சுக்கான் போன்று செயற்பட்டுள்ளன. அல்லது இவை பால்நிலை குணாதிசயமாகக்கூட இருந்திருக்கலாம். இதன் உடலில் வளைத்துக்கொள்ளக்கூடிய மெல்லிய ஆனால் தடிப்பான தோல் சவ்வு காணப்பட்டது.

6. புருசாவ்ராஸ்


8 மில்லின் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய அழிந்துபோன இனங்களில் புருசாவ்ராசும் ஒன்று. பிரேசில், கொலம்பியா, பெருவியன் அமேசோனியா மற்றும் வட வெனிசுலா போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுப் படிமங்களைக் கொண்டு தான் இந்த விலங்கினம் வாழ்ந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 11 முதல் 13 மீட்டர்கள் நீளமுடைய இவை முதலை வகை இனமாகக் கருதப்படுகிறது. பெரிய பாலூட்டியினங்களை உணவாகக் கொண்ட இவை ஆமைகள், சிறிய வகை முதலைகள், மீன்கள் போன்றவற்றையும் உண்டிருக்கின்றன.


7. டெயோடன


25-18 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டெயோடன் 3.6 மீட்டர் நீளமும் 2.1 மீட்டர் (தோள்பட்டை வரை) உயரமும் 1 மீட்டர் நீண்ட மண்டையோடும் 1000 கிலோகிராம் கொண்ட மிகப்பெரிய விலங்கினம். பெரிய தாடையுடன் தந்தமும் இதற்கு உண்டு. இது ஒரு மிகப்பெரிய விலங்குண்ணி. அகதா ஸ்பிரிங்ஸ் குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய கழுத்து கட்டையாகவும் தடிமனாகவும் இருந்துள்ளதுடன் முதுகெலும்பு மிக நீண்டு காணப்பட்டுள்ளது.

8. ஜிகன்டோபிதகஸ்



கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்தாகக் கருதப்படும் இந்த வாலில்லாக் குரங்கினம் 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்திருக்கக்கூடும் என கருதுகின்றனர். இதனுடைய இடுப்பெலும்போ கால் எலும்போ கண்டுபிடிக்கப்படவில்லை. இவை தற்போதைய காலத்தில் உள்ள கொரில்லாக் குரங்குகள் மற்றும் சிம்பன்சி போன்று இருந்திருக்கக்கூடும். இதனுடைய தாடை எலும்புகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் U வடிவத்தில் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment