June 25, 2011

அனைத்து வகையான கோப்புகளையும் பார்க்க ஒரே மென்பொருள்

கணிணியில் பயன்படுத்தும் கோப்புகளில் பல வகைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட வகை கோப்புகளைப் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கென தனியாக ஒரு மென்பொருளைப் போட்டிருந்தால் தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக புகைப்படங்களைப் பார்க்க, பாட்டு கேட்க, படம் பார்க்க, படிப்பதற்கென்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மென்பொருள்கள் போட்டிருந்தால் தான் கணிணியில் பயன்படுத்த முடியும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பயன்படுத்த முடிந்தால் எப்படியிருக்கும்? இந்த வினாவிற்கு விடையாக இருக்கிறது FreeOpener என்ற மென்பொருள். இந்த மென்பொருள் கணிணியில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான வகைகளை ஆதரிக்கிறது.

இந்த மென்பொருளிலேயே வீடியோப் படங்களைப் பார்க்க முடியும். பாட்டு கேட்க முடியும். ஆவணங்களைப் படிக்க முடியும். இதைப் போட்டு விட்டால் பிடிஎப் மென்பொருள், படம் பார்க்கும் மென்பொருள் கூட தனியாகத் தேவையில்லை. இந்த மென்பொருள் 75க்கும் மேற்பட்ட பைல் வகைகளை ஆதரிக்கிறது. இந்த மென்பொருளினால் பயன்படுத்தக்கூடிய வகைகளை கீழே பார்ப்போம்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2 and X3F

 உதாரணமாக வீடியோ ஒன்றினைத் திறக்கும் போது அதற்கான கண்ட்ரோல்களும் வந்து விடும். படத்தை ஓட்டுவதற்கு, நிறுத்த போன்ற மற்ற படம் பார்க்கும் மென்பொருளில் இருப்பதைப் போல மாறிவிடும். இதிலேயே பல வகையான படம் பார்க்கும் வகைகள் ஆதரிக்கப்படுவதால் தனியாக எந்தவொரு வீடியோ பிளேயரும் தேவைப்படாது. இதனால் கணிணியில் கட்டண மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

ஒளிப்படங்களையும் எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் PDF மற்றும் MS-Office போன்ற ஆவணங்களையும் PHP போன்ற நிரல் மொழிகளையும் இதிலேயே பார்த்துக் கொள்ள முடியும்.எல்லாவகையான கோப்புகளையும் பார்ப்பதற்கு கணிணிக்கு இந்த மென்பொருளே போதுமானது. தரவிறக்கச்சுட்டி: http://www.freeopener.com

No comments:

Post a Comment