July 13, 2011

2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு நடத்த சீனா முடிவு

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா பின் தங்கியுள்ளது. எனவே அந்த துறையில் அமெரிக்கா அளவுக்கு முன்னேற சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது.

அதற்கு முன்னோட்டமாக சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

அதற்கான பொருட்கள் மற்றும் கருவிகளை ராக்கெட் மூலம் கொண்டு செல்லும் பணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வருகிற 2013ம் ஆண்டில் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வு நடத்த சீனா முடிவு செய்துள்ளது. அதற்காக சீன அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது.

No comments:

Post a Comment