July 18, 2011

myspace இன் வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமா facebook ?

கூகுள் தற்போது கூகுள்+ என்னும் புதிய சேவையை ஆரம்பித்திருக்கிறது. அப்படியிருக்க பலரது கேள்வி,  MySpace  மற்றும் பேஸ்புக்கிற்கு என்ன ஆனது என்பது தான்.

 MySpace  இன் தவறுகளிலிருந்து பேஸ்புக் கற்றுக்கொண்டது

MySpace  புகழின் உச்சியிலிருந்து சரிந்ததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் அவர்கள் பணத்திற்காகத் தமது சேவையைத் தியாகம் செய்தார்கள்.
இதன் காரணமாக பாவனையாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தது. தொடர்பற்ற பாலியல் ரீதியான விளம்பரங்களால் பாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் இதன் சேவை பயனற்றுப் போனது. இதேபோன்ற கருத்தினை மற்றவர்கள் பலரும் கூறத் தொடங்கினார்கள்.அவர்கள் தம்முடைய கட்டுப்பாட்டை விளம்பரதாரர்களிடம் இழந்தது தான் திருப்பு முனையாக அமைந்தது. இவர்களுடைய பணம் சேர்க்கும் திட்டம் மிகவும் மோசமானதாக அமைந்த காரணத்தினால் தான் இந்த சமூகத்தளம் பாதாளத்தில் தள்ளப்பட்டது.

இரண்டாவது காரணம் இவர்கள் தம்முடைய பாவனையாளர்களின் நலன் கருதி புதுமைகளைப் புகுத்தத் தவறிவிட்டார்கள்.மறுபக்கத்தில், பேஸ்புக் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியது. தம்முடைய பாவனையாளர்களின் நலன் கருதி அவர்கள் புதுமைகளை அதில் உள்வாங்கியதுடன் சேவைக்காகப் பணியாற்றினார்கள். தேவையான விளம்பரங்களை மட்டுமே இணைத்துக் கொண்டார்கள்.

தற்பொழுது கிட்டத்தட்ட 750 மில்லியன் மக்கள் தம்முடைய நேரத்தையும் சக்தியையும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செலவிடுகின்றார்கள். அவர்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு தம்முடைய வாழ்வை வளப்படுத்திக்கொள்ள பேஸ்புக் தான் சிறந்த வலைத்தளம் என தீர்மானித்திருக்கிறார்கள். இதேவேளை  MySpace  இல் பாவனiயாளர்கள் செலவிட்ட நேரத்தை விட பேஸ்புக்கில் இரண்டு மடங்கு அதிகமாக செலவிடுகின்றார்கள்.
ஒரு சராசரி நபர் ஒரு நாளில் 8 நிமிடங்களை பேஸ்புக்கில் தம்முடைய கணணியைப் பயன்படுத்தி செலவிடுகிறார்கள் எனவும் 12 நிமிடங்கள் வரை தம்முடைய தொலைபேசி மூலமாக பேஸ்புக்கைப் பார்வையிடுகிறார் எனவும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

No comments:

Post a Comment