July 16, 2011

உலகின் விலை உயர்ந்த நகரம்

உலகின் மிக விலையுயர்ந்த நகரமான ஆபிரிக்காவில் உள்ள எஸ்பெட் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அங்கோலாவின் தலைநகரான லுவான்டாவில் இந்நகரம் அமைந்துள்ளது.2011ஆம் ஆண்டின் மேர்சஸ் அறிக்கையின் படி எஸ்பெட் நகரம் விலையுயர்ந்த நகரமாக கணிக்கப்பட்டுள்ளது.  ஆனால் ஆலோசனை நிறுவனத்தின் சூத்திரம் கொண்டு பார்த்தால் இது உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது. 

இரு பிரதான காரணிகளைக் கொண்டு இவ்வாறான தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாவதாக கடந்த வருடத்தின் இறுதியில் நாணய மாற்று விகிதத்தை கருத்தில் கொண்டு கணிப்பிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்கா டொலரின் பெறுமதிக்கு நிகராக உள்ளுர் நாணய பெறுமதி உயர்ந்ததால் இந்நிலை ஏற்பட்டது.அடுத்ததாக உள்ளுரில் விற்கப்படும் உள்ளுர் உற்பத்தி பொருட்களின் விலையானது பாரியளவில் அதிகரித்தமையும் இதற்கு காரணமாக அமைந்தது. அதாவது உலகின் முதற்தர சந்தையான நியுயோர்க்கின் சந்தையை விட பொருட்களின் விலை லுவாண்டாவில் அதிகம் என குறிப்பிடப்படுகிறது.
இவ்விரு காரணிகளுமே எஸ்பேட்டை விலையுயர் நகரமென நிர்ணயித்துள்ளது.

மேர்சஸ் அறிக்கையின் படி இந்த வருடத்தில் முதல் நிலை வகிக்கும் பத்து நகரங்கள்

1. லுவாண்டா – அங்கோலா
2. டோக்யோ – ஜப்பான்
3. என்ஜமேனா – சாட்
4. மொஸ்கோ – ரஸ்யா
5. ஜெனீவா – ஸ்வீட்சலாந்து
6. ஒசாகா – ஜப்பான்
7. சுவீஸ் – ஸ்வீட்சலாந்து
8. சிங்கப்பூர் – சிங்கப்பூர்
9. ஹொங்கொங் – சீனா
10. சாவோ போலோ – பிரேசில்

இதன்படி  லுவாண்டாவின் மூன்று முக்கிய காரணிகள் இந்த விடயம் பற்றி சிந்திக்க வழிவகுத்தது. விலையுயர்ந்த எண்ணெய், விலையுயர்ந்த வெளிநாட்டு வீடமைப்புகள் மற்றும் விலையுயர்ந்த இறக்குமதி பொருட்கள். அங்கோலா எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கிறது.ஆபிரிக்காவில் பெரியளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இதுவும் ஒன்று. இருந்தாலும் கூட எண்ணெய் விலை இங்கு அதிகமாகவே காணப்படுபடுகிறது.
 
அதேபோல இந்நாடு ஏழ்மையானது என கணிக்கப்பட்டாலும் அங்கு மக்களால் பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் விலை கூடியதாகவே உள்ளது.
வாழ்வாதார முறை சிறிதெனினும் வாழ்க்கை முறை ஆடம்பரமாகவே உள்ளது. இதனால் கூடியளவு பொருட்கள் செல்வந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.அங்கோலாவின்  மக்கள் குடில் முறையில் வாழ்க்கை நடத்தினாலும் பெலும்பாலானோர் விரும்புவது வெளிநாட்டு வீடமைப்பு திட்டங்களையே. ஏனைய நாடுகளை விட இங்கு வாழ்க்கை முறை ஆடம்பரமாக உள்ளதால் விலையுயர் நாடாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment