July 16, 2011

என் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும் – கடாபி வீர உரை

லிபியாவில் எண்ணெய் வளம் அதிகம் உள்ளது. இந்த எண்ணெய் வளத்தை காப்பாற்றுவதற்காக உயிர் விடுவோம் என லிபியா அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் முழங்கினார்.லிபியா பிரகா நகரம் எண்ணெய் வளம் மிக்கப்பகுதியாகும். இந்த எண்ணெய் வளம் மிக்க பகுதி மீது போராட்டக்காரர்களும் நேட்டோ படையினரும் வான்வழித், தரைவழி மற்றும் கடல்வழியாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்றும் லிபிய செய்தித் தொடர்பாளர் குற்றம்சாட்டினார்.எண்ணெய் வளத்தை காப்பாற்ற உயிர் துறப்போம். எண்ணெய் வளத்திற்காக உயிரை கொல்வோம் என்றும் அவர் எச்சரித்தார். லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக கர்னல் கடாபியின் ஆட்சி நடைபெறுகிறது.அவரது ஆட்சியை அகற்றி தேசிய மாற்ற கவுன்சில் ஆட்சியை கொண்டுவர மேற்கத்திய நாடுகள் முனைப்பு கொண்டு உள்ளனர். கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என கடாபி முழங்கினார்.நாட்டின் மேற்கு பகுதியான அகிலாட்டில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கடாபி வீர உரை நிகழ்த்தினார். விசுவாசம் உள்ள உங்களை விட்டு என்னால் நகர முடியாது என்றார்.அவரது உரை லிபிய அரசு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. லிபியாவில் கடாபிக்கு எதிராக கடந்த பெப்பிரவரி மாதம் மத்தியிலிருந்து போராட்டம் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment