July 19, 2011

நிரல்மொழிகளை ஆன்லைனில் பயிற்சி அளிக்கும் 4 இலவச தளங்கள்

கணிணி தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கும் பழகுபவர்களுக்கும் நிரலாக்கம் செய்து பழகுவது ஒரு ஆர்வமான விசயம் தான். இணையத்தில் ஏராளமான இணையதளங்கள் எப்படி நிரலாக்கம் செய்வது என்று அடிப்படை விசயங்கள் முதற்கொண்டு மென்பொருள்களை உருவாக்குவது வரை தகவல்களைக் கொண்டுள்ளன. நிரலாக்கம் பற்றிய செய்திகள், இலவச நிரல்மாதிரிகள், வழிமுறைகள் போன்றவற்றைக் கொடுத்து இலவசமாக செலவின்றி ஆன்லைனில் நிரலாக்கத்தைக் கற்றுத் தருகின்றன.

நீங்கள் சி++, ரூபி, பைத்தான், ஜாவா போன்ற நிரல்மொழிகளைக் கற்பதற்கு இந்த தளங்கள் உதவுகின்றன. எங்கேயாவது கணிப்பொறி பயிற்சி மையங்களில் அதிக பணத்தையும் கொடுத்து நேரத்தையும் செலவழித்துப் படிப்பதற்கு முன்னால் நிரலாக்கத்தின் அடிப்படை விசயங்களை கற்றுக்கொள்ள எளிதாக இவை உதவுகின்றன. இல்லை நீங்கள் மேம்பட்ட நிரலாளராக இருந்து புதிய நிரல்மொழிகளைக் கற்கவும் அதில் நன்றாகப் பயிற்சி எடுப்பதற்கும் இணையதளங்கள் உதவுகின்றன.

இதில் கணிப்பொறி பயிற்சி நிலையத்தில் முகம் பார்த்து சொல்லித்தருவது போல இல்லாவிட்டாலும் உங்கள் சந்தேகங்களைத் தீர்க்கவும் உங்கள் நிரல்திட்டம்(Project) நிறைவேறாத நிலையில் இருப்பினும் இந்த தளங்களைக் கொண்டு சிறப்பாக செய்து முடிக்கலாம்.

1. UC Berkeley Webcast/courses


இத்தளம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிரல்மொழிக்கும் செய்திகள் மற்றும் பயிற்சிகள் கொடுக்கப் பட்டுள்ளன. இது ஒரு இலவசமான தளமாகும். இதில் ஒலி/ஒளி வடிவத்தில் அமைந்த பயிற்சிகளும் உள்ளன.

இணையதள முகவரி: http://webcast.berkeley.edu/courses.php

2. Mozilla’s School of webcraft.


இத்தளம் பயர்பாக்ஸ் உலவியை உருவாக்கிய மொசில்லா நிறுவனத்துடையது. இதில் HTML முதற்கொண்டு எல்லா நிரலாக்க மொழிகளுக்கும் பயிற்சியுண்டு. அனுபவம் இல்லாவிட்டாலும் சிறப்பாக கற்க முடியும்.

இணையதள முகவரி: http://p2pu.org/webcraft

3. Google code University.



இத்தளம் கூகிள் நிறுவனத்துடையது. இதில் CSS, AJAX, Web போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதில் சந்தேகங்களைக் கேட்க பாரம் வசதியும் இருக்கிறது.

இணையதள முகவரி: http://code.google.com/edu/introductory_courses.html

4. MIT Opencourseware



உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் MIT பல்கலைக் கழகம் இதை நடத்துகிறது. ஜாவா, சி++, பைத்தான் போன்ற கணிணி மொழிகளைக் கற்க கீழே கிளிக் செய்யவும்

இணையதள முகவரி: http://ocw.mit.edu/courses/electrical-engineering-and-computer-science/

No comments:

Post a Comment