July 18, 2011

உங்களுக்கு வரும் அனைத்து மின்னஞ்சல்களை Yahoo வாசிக்கின்றது !

பாவனையாளர்களின் தனிப்பட்ட ஈமெயில்களை வாசிக்கும் வகையில் yahoo! தன்னுடைய கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றியிருப்பதாக yahoo! மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

விளம்பர விற்னைக்காக பாவனையாளர்களது வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் ஈமெயில்களை ஆய்வதற்கு அதனுடைய சேவையில் பதிவு செய்ய பாவனையாளர்கள் இணக்கப்பாட்டை வழங்குகிறார்கள் என உலகின் மிகப்பெரிய ஈமெயில் வழங்குனர்கள் தெரிவிக்கிறார்கள்.

Consumer Watchdog  பேச்சாளரான ஜோர்ஜினா நெல்சன், இன்டர்நெட் பாவனையாளர்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறும் செயல் இது என குறிப்பிட்டுள்ளார்.இலக்காக்கப்பட்ட விளம்பரதாரர்களால் தம்முடைய ஈமெயில்கள் திறந்து பார்க்கப்படுவது பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Yahoo!  வின் பேச்சாளர், Yahoo உள்விடயங்களை ஸ்கேன் செய்து ஆய்வு செய்து தனிப்பட்ட முறையில் அவர்களுடன் தொடர்புடைய தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களை அனுப்புகிறது.அதன்போது பாவனையாளர்களுக்கு spam மற்றும் மல்வெயார்களைக் கண்டுபிடித்து பாதுகாக்கும் வசதிகளையும் வழங்குகிறது என்றார்.Yahoo! Mail Beta வினை பாவிப்பதற்கு முன்னர் பாவனையாளர்கள் புதிய சேவைக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பட்ட கொள்கைகள் அடங்கிய pop-up notice ஒன்றினை பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment