July 25, 2011

தளபதி அப்பாவுக்கு தமிழக முதல்வரால் தலைவலி

இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கோவை டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிராஜா, மாநில துணை தலைவர்கள் புஷ்சி ஆனந்த், பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சம்பத்குமார் வரவேற்று பேசினார். விழாவிற்கு தலைமை தாங்கிய டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விஜய் மக்கள் இயக்கத்தில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். அடையாள அட்டை வழங்கியதில் இருந்து கூடுதலாக 1 1/2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் மாவட்டந்தோறும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விஜய் நேரடியாக அரசியலுக்கு வராமல் உங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு நலத்திட்ட பணிகளுக்கும் விஜய் முழு பக்க பலமாக இருப்பார். உங்கள் முயற்சிக்கு நான் துணை நிற்பேன். விஜய் அரசியல்வாதியாக இல்லாமல் உங்களோடு சேர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்வார். மேற்கண்டவாறு டைரக் டர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசினார்.

பின்னர் விஜய் ரசிகரின் குழந்தைக்கு அனுவர்ஷினி என்று டைரக்டர் சந்திரசேகர் பெயர் சூட்டி தங்கச்சங்கிலி அணிவித்தார். அடையாள அட்டை வழங்கும் விழாவில் பொருளாளர் குமார், மாவட்ட துணை தலைவர் மைக்கேல்ராஜ், அமைப்பாளர் விஜயராஜ், துணை அமைப்பாளர் சரவணன், துணை செயலாளர் சேவியர், ராம்நகர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநில துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் ராஜ்குமார், சீனிபாபு, பி.எஸ்.குமார், மணிகண்டபிரபு, ஷியாம், சத்தியமூர்த்தி, சுந்தர், ஷாஜகான், ரூபன், முகமது அலி, வினோத், கண்ணன், கார்த்தி, தேன்குமார், ரியாஸ், திருமுருகன், செல்வம், கவுரி சங்கர், செந்தில், ரமேஷ், அபுதாகீர். ரகுபதி, ராம்குமார், கஜேந்திரன், மணிகண்டன், சமத்துவம் ரவி, காட்டூர் கணேஷ், முரளி, காளிதாஸ், தளபதி, சிங்கை சக்தி, கோபி, ஜெயக்குமார், மணிகண்டன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து இயக்க நிர்வாகிகளுடன் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.

No comments:

Post a Comment