July 18, 2011

ஜன்னலில் உருவத்தை பதித்த ஆந்தை

இங்கிலாந்தில் ஜன்னல் ஒன்றில் தனது உருவத்தை ஆந்தையொன்று பதித்துச் சென்றுள்ளது. பொதுவாக இவ்வாறான சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கும்ரியான் பிரதேசத்தைச் சேர்ந்த சாலே ஆர்னால்ட் என்ற பெண்ணின் வீட்டு ஜன்னலில் ஆந்தையின் உருவம் துல்லியமாக பதிவாகியுள்ளது. குறித்த ஆந்தை ஜன்னலில் பலமாக மோதியதன் காரணமாக அதன் உருவம்  ஜன்னலில் பதியப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

ஆந்தையின், முகம், இறகுகள், கண்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த உருவமும் அதிசயமாக ஜன்னலில் பதிவாகியுள்ளது. பொதுவாக இவ்வாறு ஜன்னலில் வேகமாக மோதும் பறவைகள் உயிர் பிழைப்பது அரிது என்ற போதிலும், குறித்த பறவை உயிர் பிழைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.ஏனெனில், வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் ஆந்தையை தேடியதாகவும், ஆந்தை விழுந்து கிடப்பதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது எனவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

தவானி இனத்தைச் சேர்ந்த ஆந்தையொன்றே இவ்வாறு மோதுண்டுள்ளதாக பிரித்தானிய பறவைப் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பறவையின் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தகவலை வெளியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment